என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் ரூ.3.10 லட்சம் பணம் மோசடி
- வங்கி கணக்கிற்கு கூகுல்-பே மூலம் ரூ.3லட்சத்து 10 ஆயிரம் அனுப்பி உள்ளார்.
- தான் ஏமாற்ற பட்டதை அறிந்த ஜனனி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் இளம்பருதி. இவருடைய மனைவி ஜனனி (வயது 32). இவருக்கு இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலையில் நல்ல வருமானம் கிடைப்பதாக குறுஞ்செய்தி வந்தது.
இதனை நம்பி ஜனனி அவருடைய வாட்ஸ்-அப் எண் மூலம் தொடர்பு கொண்டு மர்ம நபர் வங்கி கணக்கிற்கு கூகுல்-பே மூலம் ரூ.3லட்சத்து 10 ஆயிரம் அனுப்பி உள்ளார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட போது எந்த பதிலும் கிடைக்கவில்லை.
பின்னர், தான் ஏமாற்ற பட்டதை அறிந்த ஜனனி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






