வரசித்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா

சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
வரசித்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் ஜோடுகுண்டுபள்ளம் ஸ்ரீராஜகணபதி நகரில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு வேதபாராயணம், கோ பூஜை, கணபதி பூஜை, மகா சங்கல்பம், நவகிரக ஹோமம், ருத்ர ஹோமம் ஆகியவை நடந்தன. காலை 9 மணிக்கு தீபாராதனையும், கடம் புறப்பாடும், 9.45 மணிக்கு வரசித்தி விநாயகருக்கு கலசாபிஷேகம் ஆகியவை நடந்தன.

தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. மாலை 6 மணிக்கு வரசித்தி விநாயகருக்கு சகஸ்ரநாமம், அதனை தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வினியோகம் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com