என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.
    • 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமையாசிரியர் மாணவ, மாணவியர்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் மன அமைதியை பெறலாம்.

    ரத்த ஓட்டத்தைச் சீராக்கலாம். இதயத்தை பலமடையச் செய்யலாம். மன அழுத்தத்தை போக்க லாம். வாழ்நாளை நீட்டிக்கலாம். உடல் நலத்தை பாதுகாக்கலாம். சுறுசுறுப்பாக இயங்கலாம் என்று பேசினார்.

    யோகா பயிற்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் பேராசிரியர்களான ஜெகன் ராமமூர்த்தி, ஸ்டீபன்விக்டர் ஆண்டனி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    பயிற்சி விழாவில் அனைத்து துறை பேராசிரி யர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி கள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரான்ஸ் பார்மர் லைனை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
    • காவேரிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் அருகே உள்ள பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி துளசியம்மாள் (வயது 65).

    இவர் பனந்தேரி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது டிரான்ஸ் பார்மர் லைனை தொட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரி பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீண்ட நாட்களாக நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • வாக்குவாதம் முற்றி நஞ்சுண்டன், சுமாவை தாக்கி மிரட்டல் விடுத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள பெல்லரம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மது. இவரது மனைவி சுமா (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டன் (39). இரு குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 19-ம் தேதி இரு குடும்பத்தின ரிடையே மீண்டும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில்

    இதல் சுமாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்,

    இது குறித்து சுமா கொடுத்த புகாரின் பேரில் நஞ்சுண்டன், வடிவேல் ஆகிய 2 பேரை கேஆர்பி டேம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி கீழே விழுந்தது.
    • பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருக்கு 1 ½ வயதில் துருவன் என்ற குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தது. உடனே பெற்றோர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 106 பள்ளிகளில் 481 மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பம் செய்திருந்தனர்.
    • 107-க்கு மேல் 235 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு (நீட்) முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசு பள்ளிகளை சேர்ந்த 106 பள்ளிகளில் இருந்து 481 மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பம் செய்திருந்தனர்.

    இவர்களில் தேர்ச்சி மதிப்பெண்ணான 107-க்கு மேல் 235 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

    இவர்களில் 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குறிப்பாக அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் மாதவன் 720-க்கு 536 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார்.

    காளிங்கவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கல்பனா 462 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மிட்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விழிவர்மா 442 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும், நெடுங்கல் அரசு பள்ளி மாணவர் சபரி 425 மதிப்பெண்கள் பெற்று 4-ம் இடமும் பிடித்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி- கல்லாவி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
    • தெரு நாய் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். தெரு நாய் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் சோலை முருகன் (வயது 45). வழக்கறிஞர்.

    சம்பவத்தன்று கிருஷ்ணகிரி- கல்லாவி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது திடீரென சாலையில் வந்த தெரு நாய் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சோலை முருகன் நேற்று மாலைசிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளி தாளாளர் கூத்தரசன் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவில் பள்ளி தாளாளர் கூத்தரசன் மாணவர் களுக்கு யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்து அனைவரும் தினமும் ேயாகா பயிற்சி மேற்கொண்டால் ஞாபக சக்தி அதிகமாகும். நரம்புகளுக்கு நல்லது. மனோ சக்தி கூடுகிறது. பிராணாயாமம், ஜபம், தியானம் செய்வதற்கு மிகவும் உயர்ந்த ஆசனம் ஆகும் என யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மெரினா பலராமன், பள்ளி தலைமை ஆசிரியை ஜலஜாக்ஷி மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.
    • செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வ லியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வ லியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கட்டப்பன், கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 76 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 480க்கு விற்பனையானது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை தோறும் பருத்தி ஏலம் தொடங்கப்பட் டுள்ளதால், விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

    ஊத்தங்கரை ஒழுங்குமுறை விற்பனை கூட த்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 6 விவசாயிகள், 76 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் அதிகப்பட்சம் ரூ.6 ஆயிரத்து 499 க்கும், குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 909-க்கும் விலை போனது. மொத்தம் பரூத்தி ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 480க்கு விற்பனையானது.

    இது குறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கூறும்போது, ஊத்தங்கரை பகுதியில் விவசாயிகள் தற்போது அதிகளவில் பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, நிகழாண்டில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டபருத்தியை நல்ல விலை பெற்று பயன்பெறலாம், என்றார்.

    • ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகம் கட்டப்பட்டது.
    • 3 ஆண்டுகளாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

     சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, ஒசூர் கிருஷ்ணகிரி சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண் அலுவலகம் இயங்கி வந்தது.

    அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் சூளகிரி உத்தனப்பள்ளி சாலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் 7 அடி ஆழ பள்ளத்தில் ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகம் கட்டப்பட்டது.

    இந்நிலையில் வேளாண் அலுவலகம் தாழ்வான பகுதியில் கட்டபட்டதால் சூளகிரி, மருதான்டப்பள்ளி, தியாகரனபள்ளி ஆகிய ஊராட்சியில் இருந்து வெளியாகும் கழிவு நீர் செல்வதற்கு வழியில்லாமல் வேளாண்மை அலுவலக வளாகத்தல் தேங்கி நிற்கிறது.

    இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அப்பகுதியில் புட்கள் வளர்ந்து அசுத்தமடைந்து காணப்படுகிறது.

    தற்போது கட்டிடம் கழிவு நீர்க்குள் அமைந்து உள்ளதால் விதை கிடங்கில் கழிவு நீர் மழை நீர் புகுந்து சேதமாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கழிவு நீர் செல்ல புதிய சிமெண்ட் கால்வாயை கட்ட அதிரடியாக உத்தரவு வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது தோட்டகலை இயக்குனர் பூபதி, தாசில்தார் பண்ணீர் செல்வி, வேளான்மை பொறியாளர் மாது, தோட்டகலை உதவி இயக்குனர் சிவசங்கரி, வேளான் உதவி இயக்குனர் ஜான்லுது சேவியர் பி,டி, ஒ,க்கள் சிவக்குமார், கோபா லகிருஷ்ணன், சூளகிரி ஒன்றிய பொறியாளர்கள் சுமதி, சியாமலா சூளகிரி வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் அகிழன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆண்கள் பிரிவில் 7,256 பேரும், பெண்கள் பிரிவில் 2,506 பேரும் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2022-23ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். செல்லக்குமார் எம்பி., பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், மாநில தடகள சங்க துணைத் தலைவருமான மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற 1,503 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் 44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் போது, ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை போட்டிகள் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 7,256 பேரும், பெண்கள் பிரிவில் 2,506 பேரும் என மொத்தம் 9,762 பேர் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் மற்றும் ரூ.30 லட்சத்து 11 மதிப்பிலான பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மேலும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட வெற்றி பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக, மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் குறித்த லோகோ மற்றும் குறும்படங்களை தொடங்கி வைத்தனர். பின்னர் பள்ளி மாணவியர்களின் வரவேற்பு நடனம் மற்றும் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடத்தது.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி அலுவலர் வளர்மதி, நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கதிரவன், சங்கர், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ், தாசில்தார் சம்பத், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கால்பந்து பயிற்றுனர் சுப்பிரமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும்.
    • விதை பரிசோதனை முடிவுகள் 30 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    விவசாயிகள் தரமான விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்திட வேண்டும் என விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தரமான விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். தரமான விதைகள் என்பது சான்றளிக்கப்பட்ட விதைகளாகும். விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும். சான்று விதை என்பது குறிப்பிட்ட தர நிர்ணயத்திற்குள் புறத்தூய்மை, முளைப்புத் திறன், ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றை கொண்டதாகும். புறத்தூய்மை பரிசோதனையில் தூய விதை, பிற தானிய விதை உயிரற்ற பொருட்கள் மற்றும் களை விதை ஆகிய நான்கு இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

    விதைக்கப்படும் விதையில் பிற தானிய விதை, உயிரற்ற பொருட்கள் மற்றும் களை விதை ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் விதைப் தூய்மையானதாக இருக்கும். அதனால் விதையின் தரம் உயர்கிறது. விதையில் பிற பயிர் விதை மற்றும் களை விதை இருந்தால் நல்ல விதையுடன், அவையும் முளைத்து பயிருடன் சேர்ந்து வளர்ந்து பயிருக்கு இடப்படும் உரம் மற்றும் பூச்சி மருந்து ஆகியவற்றை எடுத்து வளரும். அதனால் நாம் பயிருக்கு இடும் உரம் மற்றும் பூச்சி மருந்து வீணாவதுடன், பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் குறைகிறது. கல், மண், பயிரின் இதர பகுதிகளான வேர், தண்டு, இலை, உடைந்த விதை ஆகியவை உயிரற்ற பொருட்கள் இனத்தில் சேரும். உயிரற்ற பொருட்கள் மிகவும் குறைவாக இருக்கும்.

    புறந்தூய்மை பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளான முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகியவை கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலையத்தில் மிகக் குறைந்த செலவில் செய்து தரப்படுகிறது. அதற்கு விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதைக் குவியலில் இருந்து விதை மாதிரி எடுத்து விதை மற்றும் ரகம், பெயர், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முகப்புக் கடிதத்துடன் ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 என்ற விகிதத்தில், வேளாண்மை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தாங்கள் அனுப்பிய விதை மாதிரிகளின் விதை பரிசோதனை முடிவுகள் 30 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×