என் மலர்
நீங்கள் தேடியது "வக்கீல் சாவு"
- கிருஷ்ணகிரி- கல்லாவி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
- தெரு நாய் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். தெரு நாய் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் சோலை முருகன் (வயது 45). வழக்கறிஞர்.
சம்பவத்தன்று கிருஷ்ணகிரி- கல்லாவி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது திடீரென சாலையில் வந்த தெரு நாய் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சோலை முருகன் நேற்று மாலைசிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






