என் மலர்
நீங்கள் தேடியது "யோகா தினம் கடைபிடிப்பு"
- வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
- பள்ளி தாளாளர் கூத்தரசன் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளி தாளாளர் கூத்தரசன் மாணவர் களுக்கு யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்து அனைவரும் தினமும் ேயாகா பயிற்சி மேற்கொண்டால் ஞாபக சக்தி அதிகமாகும். நரம்புகளுக்கு நல்லது. மனோ சக்தி கூடுகிறது. பிராணாயாமம், ஜபம், தியானம் செய்வதற்கு மிகவும் உயர்ந்த ஆசனம் ஆகும் என யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மெரினா பலராமன், பள்ளி தலைமை ஆசிரியை ஜலஜாக்ஷி மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






