என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், அபிஷேக தீர்த்தம் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.
    • மூலவர் விநாயகருக்கு பூஜைகள் செய்து மகாதீபாராதனை செய்யப்பட்டது. பின்னர், சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டியில் உள்ள ஸ்ரீ சாய் நகரில் புதிதாக வரசித்தி விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில், முருகன், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், சாய்பாபா மற்றும் நவக்கிரகங்கள் சன்னிதிகளும் கட்டப்பட்டுள்ளன.

    சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளுக்கு பின்னர், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், அபிஷேக தீர்த்தம் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, மூலவர் விநாயகருக்கு பூஜைகள் செய்து மகாதீபாராதனை செய்யப்பட்டது. பின்னர், சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா, மாநகராட்சி மண்டல காந்திமதி கண்ணன், மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நூலக செயல்பாடுகள் விழிப்புணர்வுகளை நல் நூலகர் முருகேசன் பயிற்சி அளித்தார்.
    • போட்டித் தேர்வுகளில் சவால்களை எதிர்கொள்ள நூலகம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி விவரித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட நூலக அலுவலர் வழிகாட்டுதலின்படி போச்சம்பள்ளி வட்டம் மத்தூர் கிளை நூலகத்தில் ஊத்தங்கரை அதியமான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நூலகம் சார்ந்த பயிற்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவாக கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் காளி தாஸ் ஓய்வு மற்றும் கோடக் மகேந்திரா வங்கி மேலாளர் தமிழரசன் வரவேற்று போட்டித் தேர்வுக்கு நூலகத்தின் பங்கு என்ற தலைப்பில் பேசி மாணவிகளை வரவேற்றனர்.

    அடுத்தடுத்து நடைபெற்ற நிகழ்வுகளில் நூலகத்தின் உடைய தோற்றம் நூலகத்தின் பாதுகாப்பு நூல்கள் வாய்ப்பாடு, நூலகங்களில் உறுப்பினராக சேர்த்தல் நீக்குதல், கன்னிமாரா நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம், சரஸ்வதி மஹால் நூலகம், ஓலைச்சுவடிகள் நடமாடும் நூலகங்கள் நூலகங்களின் வகைகள் என்ற நூலக செயல்பாடுகள் விழிப்புணர்வுகளை நல் நூலகர் முருகேசன் பயிற்சி அளித்தார்.

    பயிற்சியின் போது கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் தமிழ் பல்கலை கழக உறுப்பினர் சவீதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு போட்டித் தேர்வுகளில் சவால்களை எதிர்கொள்ள நூலகம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி விவரித்தனர்.

    அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் கவுதமி தமிழ் இலக்கியங்கள் மற்றும் வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கியதோடு 30 கல்லூரி மாணவிகளுக்கு உறுப்பினராக சேர்த்துக்கொள்ள அதற்குண்டான தொகையை வழங்கி சிறப்பித்தார். இந்த நூலக பயிற்சி ஏற்பாடுகளை மத்தூர் கிளை நூலகர் முருகேசன் ஏற்பாடு செய்து சிறப்பித்தார்.

    • டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி புலியரசி பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பத்பநாபன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி புலியரசி பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட, மேற்கு ஒன்றிய பா.ம.க. சார்பில், கிருஷ்ணகிரி அருகே புலியரசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி புலியரசி பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பத்பநாபன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோ, மாவட்டத் தலைவர் தியாகராஜ நாயுடு, வன்னியர் சங்கத் தலைவர் சோமசுந்தரம் நாயுடு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோ பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் வாக்குறுதியில் கூறியபடி மதுக்கடைகளை அகற்ற வேண்டும். அனைத்து குற்ற செயல்களுக்கும் காரணமாக இருக்கும் மதுவை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றார்.

    இதில், வன்னியர் சங்க துணைத் தலைவர் வரதராஜன், பொன்னப்பன் உள்ளிட்ட மற்றும் பா.ம.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியன் வங்கி மற்றும் அஞ்சல்துறை அலுவலர்கள் கலந்து க்கொண்டு, புதியதாக வங்கி கணக்கு தொடங்கும் பணி மட்டும் நடைபெற்றது.
    • ஏற்கெனவே கணக்கு வைத்துள்ள மாணவர்களின் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கும் பணி நடை பெறாததால் நீண்ட நேரம் காத்து கிடந்து ஏமாற்ற த்துடன் மாணவர்கள் திரும்பி சென்றனர்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவின் பேரில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற, வங்கி புத்தகத்துடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டனர்.இதனைத் தொடர்ந்து ஊத்தங்கரை சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குவிந்தனர்.

    ஊத்தங்கரை இந்தியன் வங்கி மற்றும் அஞ்சல்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு, புதியதாக வங்கி கணக்கு தொடங்கும் பணி மட்டும் நடைபெற்றது.ஏற்கெனவே கணக்கு வைத்துள்ள மாணவர்களின் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கும் பணி நடை பெறாததால் நீண்ட நேரம் காத்து கிடந்து ஏமாற்றத்துடன் மாணவர்கள் திரும்பி சென்றனர்.

    • கேக் வெட்டி இனிப்புகளை மருத்துவர்களுக்கும், செவிலியர் களுக்கும், மருத்து வமனை ஊழியர்களுக்கும், நர்சிங் மாணவிகளுக்கும் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் டாக்டர் உதயசந்திரிகா, தலைமை செயல் அதிகாரி ரஞ்சனா, அனிதா மற்றும் மேலாளர் பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் சென்னை பை- பாஸ் சாலையில் அமைந்துள்ள டி.சி.ஆர். மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சவுந்தர்ராஜ் கேக் வெட்டி இனிப்புகளை மருத்துவர்களுக்கும், செவிலியர் களுக்கும், மருத்து வமனை ஊழியர்களுக்கும், நர்சிங் மாணவிகளுக்கும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் டாக்டர் உதயசந்திரிகா, தலைமை செயல் அதிகாரி ரஞ்சனா, அனிதா மற்றும் மேலாளர் பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கிருஷ்ணகிரி ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு டி.சி.ஆர். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சவுந்தர்ராஜை சந்தித்து மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து, இனிப்பு வழங்கினார்கள். 

    • 1.60 கோடி மதிப்பில் பணிகளை கோட்டை வாசல், பழைய பஸ் நிலையம், அஞ்செட்டி சாலை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் பூமி பூஜை நடந்தது.
    • மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை பேரூராட்சியில் 1-வது, 2-வது வார்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் அமைத்தல் பழைய பஸ் நிலையத்தில் தார் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையத்தை பழுது பார்த்தல், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் பைப்லைன் மற்றும் வார்டுகளில் பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட 1.60 கோடி மதிப்பில் பணிகளை கோட்டை வாசல், பழைய பஸ் நிலையம், அஞ்செட்டி சாலை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் பூமி பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல்கலாம், அவைத்தலைவர் சீனிவாசன். துணை செயலாளர்கள் இனாயத்துல்லா, பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரிதிநிதி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், முன்னாள் அவைத்தலைவர் வெங்கடசாமி, வார்டு கவுன்சிலர்கள் நாகரத்தினா. சுமதி சார்லஸ், மணி வண்ணன், லிங்கோஜிராவ் ஸ்ரீதர் கட்சி நிர்வாகிகள் முஜாமில்பாஷா, சென்னீரா, சேகர், சல்மான், மஞ்சு, பார்திபன், நாகராஜ். ஜேசப், ரமேஷ்,கோபல், ராமன், அசேன், சித்திக், சந்தோஷ் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • மருத்துவர்கள் கடவுளுக்கு நிகராக போற்றப்பட வேண்டியவர்கள்.
    • கொரோனா கால கட்டத்தில் தங்கள் குடும்பத்தை பிரிந்து மக்களுக்காக மகத்தான மருத்துவ சேவை செய்தவர்கள் என பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனங்கள் சார்பில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.

    இதற்கு பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் பாரத் பள்ளியில் படித்து 400-க்கும மேற்பட்டவர்கள் டாக்டர்களாக உள்ளனர்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் பாரத் கல்வி நிறுவன மாணவ, மணாவிகள படித்து வருகிறார்கள்.

    மருத்துவர்கள் கடவுளுக்கு நிகராக போற்றப்பட வேண்டியவர்கள். கொரோனா கால கட்டத்தில் தங்கள் குடும்பத்தை பிரிந்து மக்களுக்காக மகத்தான மருத்துவ சேவை செய்தவர்கள் என பாராட்டினார்.

    பாரத் பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரியில் பேராசிரியைகளாக பணி புரிந்து வரும் டாக்டர்கள் சிந்து, அபிஷாந்தினி, கோகுல் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர்.

    டாக்டர் அபிஷாந்தினி பேசுகையில் தான் படித்த போது 10-ம் வகுப்பு பொது தேர்வில் மாவட் டஅளவில் முதலிடம் பிடித்ததாகவும், பள்ளி நிர்வாகத்தினர் உறுதுணை யாக இருந்தாகவும் கூறினார்.

    டாக்டர் சிந்து பேசுகையில் பல மருத்துவர்களை உருவாக்கிய இந்த பள்ளியில் நானும் படித்தேன் என்பதை கூறினார். டாக்டர் கோகுல் பேசும் போது மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

    முடிவில் பாரத் கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் சந்தோஷ், மருத்துவ படிப்பு படிக்க ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் எவ்வாறு தேர்வில் சவால்களை எதிர் கொண்டு மன உறுதியுடன் தயாராக இருக்க வேண்டும் என்று எடுத்து கூறினார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்களுக்கு பூங்கொத்து, கேடயம் நினைவு பரிசாக வழங்கப் பட்டது.

    இதற்கான ஏற்பாடு களை பாரத் மெட்ரிக் பள்ளி முதல்வர் விஜயகுமார், பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியின் முதல்வர் ஹரிநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என, பொதுப்பணித்து–றையினர் தெரிவித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து, முதல்போக பாசனத்திற்கு

    தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என, பொதுப்பணித்து–றையினர் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. செல்லகுமார் ஆகியோர் ஏரியின் மதகை திறந்து வைத்தனர். பின்னர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் வழியாக தண்ணீர் சீறி பாய்ந்து சென்றன. இதைத்தொடர்ந்து கலெக்டர் சரயு கே.ஆர்.பி. அணையில் தண்ணீர் திறந்து வைத்தார்.

    120 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், பாரூர், அரசம்பட்டி, கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, பென்டரஅள்ளி, தாதம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், போச்சம்பள்ளி வட்டாட்சியர் தேன்மொழி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் காளிபிரியன், கீழ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகானந்தம், பாரூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஷெட்டரஅள்ளி நாகராஜ், டேம் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் துறை அதிகாரி களின் அலட்சியத்தால் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட கேமராக்கள் வீணாக கிடைக்கின்றது.
    • விபத்து, மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார் திணறி வருகி ன்றனர்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில், ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில், 63 சி.சி.டி.வி., கேமராக்கள், ஊத்தங்கரை நகர் பகுதியில் உள்ள முக்கிய, சாலை, கோவில், மற்றும் பாம்பாறு அணை, காரப்பட்டு, வீரியம்பட்டி, மேலும் எல்லை பகுதிகளில் பொருத்தப்பட்டது.

    இதனால் ஊத்தங்கரை பகுதியில் நடைபெறும், பல்வேறு திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து உடனடியாக அறிந்துகொண்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக, ஊத்தங்கரை நகர் பகுதியில் உள்ள 63 கேமராக்களில், தற்பொழுது 6 கேமராக்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

    மற்ற கேமராக்கள் பராமரிப்பின்றி பழுதாகி கிடக்கின்றது. இதனால், பல்வேறு திருட்டு, கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் நட மாட்டம் அதிகரித்துள்ளது.

    பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தனியார் பள்ளி, வணிகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து 27 லட்சம் ரூபாய் மதிப்பில், அமைத்துக் கொடுத்த சி.சி.டி.வி., கேமராக்களை, போலீஸ்துறையினர் பராமரிப்பின்றி விட்டுள்ள சம்பவம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

    விபத்து, மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

    போலீஸ் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட கேமராக்கள் வீணாக கிடைக்கின்றது.

    பயனற்று கிடக்கும் கேமராக்களை சரி செய்து, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    இது குறித்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 7 பேரை கைது செய்து ரூ.2 ஆயிரத்து 580 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • பணம் வைத்து சூதாடிய 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போலீசார் பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்த போது அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் மாதப்பன் (வயது 48), மேலுமலை பக்கமுள்ள பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் என்றும், தாபா ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது- அவரை போலீசார் கைது செய்தனர்.

    மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற அரசம்பட்டி கந்தன் (48), போச்சம்பள்ளி உதயகுமார் (38), கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெரு காமராஜ் (43), சாப்பர்த்தி ஜானிபாஷா (55), காமன்தொட்டி அருகே ரவுத்தப்பள்ளி யுவராஜ் (34), தேன்கனிக்கோட்டை அப்துல் சலீம் (55), ராயக்கோட்டை வினோத் (25) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? எனபோலீசார் கண்காணித்தனர். அந்த வகையி குட்கா விற்ற ஊத்தங்கரை தாலுகா கல்லூர் முத்துக்கண்ணு (46), வேலம்பட்டி முருகேசன் (52), ஓசூர் பார்வதி நகர் தருமன் (38), பி.எஸ். திம்மசந்திரம் பில்லாரெட்டி (73), கலுகொண்டப்பள்ளி மாதன் (25), ஒட்டூர் ஆனந்த் (25), கெலமங்கலம் ஆசீப் (27) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 580 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    அதே போல மாவட்டத்தில் யாரும் பணம் வைத்து சூதாடுகிறார்களா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பணம வைத்து சூதாடிய வேலம்பட்டி நவீன் (29), மாரிசெட்டிஅள்ளி பிரவீன் (24) உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,400 பறிமுதல் செய்யப்பட்டது.

    • நகராட்சி குப்பை கிடங்குகளில் மக்கும் குப்பையிலிருந்து, உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.
    • மக்காத குப்பை கிடங்கிலிருந்து மறுசுழற்சிக்கு உதவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 4 குப்பை கிடங்குகளில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட நவீன தகன மேடை அருகில், ரூ.43 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் "மெட்டீரியல் ரெகவி பெசிலிட்டீஸ்" எனும் மறுசுழற்சிக்கு பயன்படும் மக்கா குப்பை சேமிப்பு கிடங்கு கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது.

    நகராட்சி குப்பை கிடங்குகளில் மக்கும் குப்பையிலிருந்து, உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. மக்காத குப்பை கிடங்கிலிருந்து மறுசுழற்சிக்கு உதவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். திருவண்ணாமலை சாலையில், இதே போல மற்றொரு மக்கா குப்பை சேமிப்பு கிடங்கும் கட்டப்பட உள்ளது. தொடர்ந்து "லேயிங் மிஷின்", "எக்ஸ்ட்ரூடர் மிஷின்" உள்ளிட்டவைகள் போடப்பட்டு, மக்கா குப்பையை இறுக்கி, தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பணியும் தொடங்கப்படும். இதன் மூலம் நகரில் குப்பைகள் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரி. கூலித்தொழிலாளியான இவரது கணவர் முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் மாரி தனது தாயுடன் வசித்துவந்தார். அப்போது அவரது குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட மாரி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×