என் மலர்
கிருஷ்ணகிரி
- மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
- மணிகண்டன் (24), நல்லவம்பட்டி கோபி (25) உள்பட 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
சூளகிரி போலீசார் வேளாங்கண்ணி ஆர்ச் அருகில் ரோந்து சென்றனர். அந்த வழியாக சென்ற நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அதில் அவர் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் ஹரிகுமார் (வயது 29), சூளகிரி அருகே உள மாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில், லாட்டரி விற்ற கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி சரண்ராஜ் (35), சூளகிரி ஒட்டூர் சீனிவாசன் (35), வடமலம்பட்டி ரமேஷ் (45), ராயக்கோட்டை முருகன் (54), கெலமங்கலம் ஜி.பி. தேவராஜ் (40), ஊத்தங்கரை தாலுகா ஒன்னம்பாளையம் ராஜசேகர் (37), மத்தூர் கீழ் வீதி ராஜகோபால் (74) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 39 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, கக்கன்புரம் சக்திவேல் (47), வேப்பனப்பள்ளி கபீர் (72), பேகேப்பள்ளி சநதிரகலா (45), குந்துமாரனப்பள்ளி சேஷாத்திரி (41), உங்கட்டி பிரசாந்த் (42), புன்னாகரம் தொன்டப்பா (50), மேடுப்பள்ளி பாலகிருஷ்ணன் (26), குருவிநாயனப்பள்ளி முனுசாமி (44), சின்ன பாறையூர் குப்புசாமி (42), அகரம் செல்வம் (50), யு.புரம் நாகராஜ் (41), ஊத்தங்கரை விஜய் (37), சாமல்பட்டி இளையராஜா (46) ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.1,300 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் எங்கும் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பணம் வைத்து சூதாடியதாக சூளகிரி அருகே உள்ள பந்தார்கட்டு திம்மராயன் (63), சிவக்குமார் (40), பர்கூர் சதீஷ்குமார் (32), சத்யராஜ் (32), விஜயகுமார் (38), பெரியதள்ளப்பாடி சக்திவேல் (46), குப்பநத்தம் கோவிந்தராஜ் (47), நாச்சம்பட்டி சிலம்பரசன் (26), பெரியதள்ளப்பாடி மணிகண்டன் (24), நல்லவம்பட்டி கோபி (25) ஆகிய 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
- உயர் கல்வி படிக்க இயலாத மாணவ- மாணவியர், உயர் கல்வி பயில வழிகாட்டும் உயர் கல்வி முகாம், நேற்று ஓசூரில் நடைபெற்றது.
- முன்ன தாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வி படிக்க இயலாத மாணவ- மாணவியர், உயர் கல்வி பயில வழிகாட்டும் உயர் கல்வி முகாம், நேற்று ஓசூரில் நடைபெற்றது.
ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த இம்முகாமிற்கு
சப்- கலெக்டர் சரண்யா தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி, தலைமை யுரையாற்றினார். முன்ன தாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார்.
இதில், ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் மற்றும் அனிருத் கங்காவரம் உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு உயர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஊக்குவித்து பேசினர்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த முகாமில், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர்கள் கோவிந்தன், முனிராஜ், உள்பட பல்வேறு அரசு துறை அதிகரிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- ரூ.17 ஆயிரம் வீதம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் ஈமச்சடங்கு உதவி தொகை வழங்கப்பட்டது.
- மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம் சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 228 மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.17 ஆயிரம் வீதம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் ஈமச்சடங்கு உதவி தொகையும், 18 மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கு ரூ.25 ஆயிரத்து 750 மதிப்பில் கல்வி உதவி தொகை என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கூடுதலாக சி.சி. டி.வி. கேமரா பொருத்தப்பட உள்ளது.
- பொதுமக்கள் இந்த மாங்கனி கண்காட்சி நல்ல முறையில் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நாளை (புதன்கிழமை) முதல் 29&வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுகிறது.
இதையொட்டி, விழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரங்குகள் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு அம்சங்கள், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், அரங்கிற்கு உள்ளே செல்லும் நுழைவுவாயில், வெளியே செல்லும் பாதைகளை கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வருகிற 5&ந் தேதி தொடங்குகிறது. இதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அரசு துறை சார்பாக அரங்குகளும், தனியார் அங்காடிகள் மற்றும் கலையரங்கம், மா கண்காட்சி அரங்க, கேளிக்கை அரங்குகள், தின்பண்ட அங்காடிகள், செய்தி மக்கள்ள தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடைய அரசு சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கூடுதலாக சி.சி. டி.வி. கேமரா பொருத்தப்பட உள்ளது.
மேலும் டிரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த மாங்கனி கண்காட்சி நல்ல முறையில் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அசம்பாவிதம் செய்யும் நபர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டேவிட் டென்னிசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- அவரை கேரளாவில் உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக ஞானவேல் அடிக்கடி அழைத்து செல்வார்.
- கேரளாவிற்கு சென்ற 2 பேரும் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி திருவண்ணா மலை ரோடு கணபதி நகரைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது50). பழவியாபாரியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் சூர்யா (25), இன்பகணபதி (15) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இதில் இன்பகணபதிக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவரை கேரளாவில் உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக ஞானவேல் அடிக்கடி அழைத்து செல்வார்.
இதேபோல் கடந்த 22-ந் தேதி ஞானவேல் தனது மகன் இன்ப கணபதியை கேரளா விற்கு அழைத்து சென்றார்.
இந்த நிலையில் கேரளாவிற்கு சென்ற 2 பேரும் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன ஞானவேலின் மனைவி கணவனையும், மகனையும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சூர்யா கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் சிகிச்சைக்காக கேரளாவிற்கு சென்ற தந்தையும், தனது சகோதர னையும் காணவில்லை என்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தந்தை, மகனை தேடி வருகின்றனர்.
- 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளுக்கு நேற்று பூமிபூஜை நடந்தது.
- கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் காந்திநகரில், ரூ.32.18 லட்சம், காந்தி நகரில், 6.64 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்க திட்டத்தில் தார்சாலை, மற்றும் மிட்டஹள்ளி புதூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அருகில், 15-வது நிதிக்குழு மானியத்தில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளுக்கு நேற்று பூமிபூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் தேங்காய் சுப்பிரமணி, மகேந்திரன், ஒன்றியகுழு துணை தலைவர் சசிகலா தசரா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுரேஷ், அம்மு பழனி, பார்வதி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., டேம் முதல் மலைசந்து வரையில், 8 கி.மீ., அளவில் கால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.,தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பணத்திற்கான வட்டித் தொகை உயர்ந்ததால் அவர்களால் பணத்தை கட்ட முடிய வில்லை.
- பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர் கேசவன் (வயது51), ரியல் எஸ்டேட் அதிபரான இவர், செங்கல் சூளையும் நடத்தி வந்தார்.
கடந்த மாதம் 19-ம் தேதி மதியம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கே.மல்ல சந்திரம் கிராமத்தில், மோகன் என்பவரிடம் பணம் வாங்க டூவீலரில் சென்ற போது, சொகுசு காரில் வந்த 8 பேர் கும்பல், அவரை வழிமறித்து 8 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. முரளி, தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடி வந்தனர்.
கொலையான கேசவனிடம், பஜ்ஜேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (35), என்.கொத்தூரை சேர்ந்த மோகன்குமார்(29) ஆகியோர், வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இருந்ததால், பணம் கேட்டு தகராறு செய்த கேசவனை கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதனிடையே, கடந்த 21-ம் தேதி பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்த சம்பங்கி ராமைய்யா மகன் நாகராஜ் (35), சம்பங்கியப்பா மகன் அபிநத்தா (29), என். கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரப்பா மகன் மோகன்குமார் (29), பண்டேஷ்வரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா மகன் ஜலபதி (31), அலேநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி மகன்சிவக்குமார் (24), வெங்கடேசப்பா மகன் ஸ்ரீதர் (23), முனியப்பா மகன் முனிராஜ் (33), கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் செட்டிப்பள்ளியைச் நேர்ந்த மஞ்சுநாத்ரெட்டி (32) ஆகிய 8 பேர் வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் நாகராஜ், கடந்த 1-ந் தேதி தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார்.
விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்த நாகராஜ், என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்குமார் ஆகியோர் சேர்ந்து, கேசவனிடம் ரூ.10 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.
பணத்திற்கான வட்டித் தொகை உயர்ந்ததால் அவர்களால் பணத்தை கட்ட முடியவில்லை. இந்நிலையில், கேசவன் வட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
அதனால் இருவரும் சேர்ந்து, கேசவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்து, பணம் கொடுப்பதாக கூறி கே.மல்லசந்திரம் கிராமத்திற்கு வரவழைத்து, 8 பேர் சேர்ந்து வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, கொலைக்கு பயன்படுத்திய கார், ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 8 பேரையும் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தினேஷ் முன்பு ஆஜர்படுத்தி, அவரது உத்தரவின் பேரில், 17-ந் தேதிவரை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
- தனி சன்னதிகள் கொண்டு அருள் பாலிக்கும் ராகு கேது, மகா காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
- தொடர்ந்து இரவில், யாக சாலையில் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.
ஓசூர்,
ஓசூர் அருகே மோரனப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராகு கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா கோவில் உள்ளது. இங்கு மூலவர் பிரத்தியங்கிரா தேவி அம்மன் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். அதேபோல மகா கால பைரவர் மற்றும் ராகு கேது ஆகிய தெய்வங்க ளும் தனி சன்னதி கொண்டு உள்ளனர்.
இந்த கோவிலில், ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை, பில்லி சூனியம், துஷ்ட சக்திகள் போன்றவற்றை அகற்றும் விதமாகவும் மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி தினம் குரு பூர்ணிமா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், குரு பவுர்ணமி தினமான நேற்று, இந்த கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள மறைந்த ஏழுமலை சுவாமி மகா குரு சன்னிதானத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விசேஷ அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தார்.
அதேபோல தனி சன்னதிகள் கொண்டு அருள் பாலிக்கும் ராகு கேது, மகா காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரவில், யாக சாலையில் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.
இதில், தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டு மா விளக்கு ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி அம்மனை வழிபட்டனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் தாமஸ் என்கிற நிரஞ்சன் (வயது33). பழகடை வியாபாரியான இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த காணப்பட்ட நிரஞ்சன் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவர் ஞானவேல் மனவேதனை–யில் இருந்து வந்தார்.
- விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதனால் அவரது கணவர் ஞானவேல் மனவேதனையில் இருந்து வந்தார். கடந்த மாதம் 6-ந் தேதி ஞானவேல் கிருஷ்ணகிரி அணை பகுதிக்கு வந்தார். அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது உடல் அங்கேயே அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் கிருஷ்ணகிரி டேம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து ஞானவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி சிறுவனபட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (50). கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி, நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு பகல் பாராமல் வேலை செய்யும் மருத்துவர்களும் கடவுளுக்கு நிகரானவர்கள் தான்.
- பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார்.
காவேரிப்பட்டணம்,
இரவு பகல் பாராமல் வேலை செய்யும் மருத்துவர்களும் கடவுளுக்கு நிகரானவர்கள் தான். அவர்களுடைய சேவையை பாராட்டி மருத்துவர் தினத்தை முன்னிட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், பேரூராட்சி உறுப்பினர்கள் கீதா ஞானசேகரன் , தமிழ்ச்செல்வி சோபன் பாபு, கோகுல், கிளை செயலாளர் ஈஸ்வரன் மற்றும் ஏராளமான கழக முன்னணியினர் உடன் இருந்தனர்.
- அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு கை கடிகாரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு கை கடிகாரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஓசூரில் பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார்.
தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, முதற்கட்டமாக, ஓசூர் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனைகளை சேர்ந்த நகர, புறநகர் மற்றும் விரைவு பேருந்துகளில் பணிபுரியும் அண்ணா தொழிற்சங்க பேரவையின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் 350 பேருக்கு, கை கடிகாரங்களை வழங்கி, நிகழ்ச்சியில் பேசினர்.
மேலும் இதில், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் தாடி மா. ராசு மாநில பொருளாளர் அப்துல் ஹமீது ஆகியோர் பேசினர்.
இதில், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகளும், மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் மதன், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் குபேரன் என்ற சங்கர், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.






