என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்களுக்கு கை கடிகாரம்"

    • அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு கை கடிகாரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு கை கடிகாரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    ஓசூரில் பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, முதற்கட்டமாக, ஓசூர் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனைகளை சேர்ந்த நகர, புறநகர் மற்றும் விரைவு பேருந்துகளில் பணிபுரியும் அண்ணா தொழிற்சங்க பேரவையின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் 350 பேருக்கு, கை கடிகாரங்களை வழங்கி, நிகழ்ச்சியில் பேசினர்.

    மேலும் இதில், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் தாடி மா. ராசு மாநில பொருளாளர் அப்துல் ஹமீது ஆகியோர் பேசினர்.

    இதில், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகளும், மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் மதன், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் குபேரன் என்ற சங்கர், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    ×