என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் பெரிய ஏரியில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை கலெக்டர் சரயு, பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், எம்.பி. செல்லகுமார் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இதில் மாவட்ட நீர்வளத்துறை பொறியாளர் குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தட்டரஅள்ளி நாகராஜ், டேம் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கே.ஆர்.பி., அணை-பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
- கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
- 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என, பொதுப்பணித்து–றையினர் தெரிவித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து, முதல்போக பாசனத்திற்கு
தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என, பொதுப்பணித்து–றையினர் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. செல்லகுமார் ஆகியோர் ஏரியின் மதகை திறந்து வைத்தனர். பின்னர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் வழியாக தண்ணீர் சீறி பாய்ந்து சென்றன. இதைத்தொடர்ந்து கலெக்டர் சரயு கே.ஆர்.பி. அணையில் தண்ணீர் திறந்து வைத்தார்.
120 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், பாரூர், அரசம்பட்டி, கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, பென்டரஅள்ளி, தாதம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், போச்சம்பள்ளி வட்டாட்சியர் தேன்மொழி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் காளிபிரியன், கீழ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகானந்தம், பாரூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஷெட்டரஅள்ளி நாகராஜ், டேம் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






