என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • உணவகத்தை விஜய் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.
    • பிஎன்ஐ, ரோட்டரி சங்க நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் வடசேரி எம்.எஸ். ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ெரட் கிராண்ட் என்ற பாரம்பரிய அசைவ உணவகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

    உணவகத்தை விஜய் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். விழாவிற்கு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கே.ஆர். டிராவல்ஸ் உரிமையாளர் குமார் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹோட்டல் பிரபு உரிமை யாளர் ஆனந்தன் முதல் விற்பனையை ஆரம்பித்து வைத்தார். பிசினஸ் நெட்ஓர்க் இன்டர்நேஷனல் அமை ப்பின் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் மண்டல இயக்குநர் முகமது ரியாஸ் முதல் விற்பனையை பெற்று கொண்டார்.

    எஸ்.ஜே. மருத்துவமனை டாக்டர் ரூத் திலீப்குமார், டவர் ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஜியாவுதின், வி.ஐ.பி. ஜிம் உரிைமயாளர் சரவணசுப்பையா, பேபி மசாலாமுத்து உள்பட பிஎன்ஐ, ரோட்டரி சங்க நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரெட் கிராண்ட் உணவக உரிமையாளர் சுகுமாரன் ராமதாஸ், சுஜாதா சுகுமாரன் மற்றும் நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சிறப்புப் பாடல் போன்ற நிகழ்வு மாணாக்கர்களால் நடத்தப்பட்டன
    • ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சர்வ பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தின விழாக் கொண்டாடப்பட்டது. அதற்குப் பள்ளித் தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முது நிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் தினத்தை கருப்பொருளாகக் கொண்டு கவிதை, நோக்க வுரை, நடனம், சிறப்புப் பாடல் போன்ற நிகழ்வு மாணாக்கர்களால் நடத்தப்பட்டன. அதோடு மாணாக்கர்கள், ஆசிரியர்க ளாகவும், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் போல் வேடம் புனைந்து மழலையர் பிரிவினரும் ஒவ்வொரு வகுப்பிற்கும்சென்று பாடம் நடத்தியது அனைவரும் பாராட்டும்விதமாக இரு ந்தது. குறிப்பாக, ஹை-டெக் வகுப்பறையில் லே ப்டாப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் கற்றதும்- கற்பித்ததும் சிறப்பாக இருந்தது.ஆசிரியர்களை மகிழ்வி ப்பதற்காக மாணா க்கர்கள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதும், ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்புப் போடடிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பள்ளித் தலைவர் சிறப்பு பரிசுகள் வழங்கினார்.

    • ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி புத்தாடை வழங்கி கவுரவித்தார்
    • டாக்டர் கிளாரிசா வின்சென்ட் பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கா ன்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைைம தாங்கினார்.

    மாணவி வித்யா சரோஜினி வரவேற்று பேசினார். மாணவிகள் அதிதி, தர்ஷனா மற்றும் தனிகா வரவேற்பு நடனம் ஆடினார். மாணவி ஆஷிகா ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்.

    பள்ளி முதல்வர் டாக்டர் பீட்டர் ஆன்றனி சுரேஷ் ஆசிரியர் தின உரையாற்றி ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி யினை நடத்தினார். பள்ளி நிறுவனர் நாஞ்சில் வின்சென்ட் ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி புத்தாடை வழங்கி கவுரவித்தார். மேலும் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பள்ளி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.

    முடிவில் மாணவன் லிரிஷ் நன்றி கூறினார். விழா நிகழ்வுகளை மாணவி அத்வைதா மற்றும் மாணவன் பெரிஷ் மத்தியூ தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி டெல்பின் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், அஸ்ரபா, ஷீலா மற்றும் கல்வி ஒருங்கி ணைப்பாளர் முத்துசிவம் இணைந்து செய்திருந்தனர்.

    விழாவில் மாணவிகள், ஆசிரியர்களுக்கு பூங்கொ த்து கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்து கூறினர்.

    • 12 வயதிற்கு உட்பட்ட பந்து எறிதல் போட்டியில் மாணவன் தெய்விக் ரோஷன் முதல் பரிசு
    • ஆசிரிய - ஆசிரியைகள் மற்றும் சக மாணவர்கள் பாரட்டினர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் நாகர்கோவில அண்ணாவிளையாட்டு ஆரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளுக்கு மவுண்ட் லிட்ரா பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

    12 வயதிற்கு உட்பட்ட பந்து எறிதல் போட்டியில் மாணவன் தெய்விக் ரோஷன் முதல் பரிசையும் மாணவி ஜோவிஷா தெரேஸ் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் பரிசையும் வென்றனர். 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ரித்திக் ரோஷன் 600 மீட்டர் ஓட்டபந்தயத்தில் முதல் பரிசையும், 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் காட்வின் 300 மீட்டர் பந்தயத்தில் முதல் இடத்தையும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் இடத்தையும் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் அல்ஹம்கான் மூன்றாம் இடத்தையும் வென்று சாதனை படைத்தனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் தில்லை செல்வம், இயக்குநர்கள், முதல்வர் தீபாசெல்வி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய - ஆசிரியைகள் மற்றும் சக மாணவர்கள் பாரட்டினர்.

    • நகராட்சி சேர்மன் பொன்.ஆசை தம்பி திறந்து வைத்தார்
    • மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே நடந்தது

    மார்த்தாண்டம் :

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே உள்ள லாறி பேட்டையில் பொதுமக்களுக்கு வசதியாக கழிவறை இல்லாத நிலை இருந்தது. எனவே நவீன கழிவறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் அதிநவீனமான கழிவறை கட்டப்பட்டது.இந்த கழிவறையை மக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி சேர்மன் பொன்.ஆசை தம்பி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் தலைமை தாங்கினார். பொறியாளர் முகைதீன்,துணைத் தலைவர் பிரபின் ராஜா,கவுன்சிலர்கள் சர்தார்ஷா,விஜு, நகராட்சி வழக்கறிஞர் ஷாஜிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • கவுன்சிலர் அய்யப்பன் கலந்து கொண்டார்
    • 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்

    என்.ஜி.ஓ. காலனி :

    குமாரகோவில் மாளவியா கேந்ரா பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் லதாகுமாரி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரும், பாரதிய ஜனதா பிரிவு குமரி மாவட்ட தலைவருமான அய்யப்பன் பங்கேற்று குத்து விளக்கேற்றினார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் பல்வேறுபட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வருகை தந்திருந்தனர். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கியும் சிறப்பித்தார். மேலும் பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஊக்க பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா தோவாளை ஒன்றிய பார்வையாளர் வக்கீல் ஆறுமுகம், மற்றும் பள்ளியின் எ.ஒ. ராஜேந்திரன் உள்பட கலந்து கொண்டனர்

    • திருமணமானதில் இருந்தே இவர்களுக்குக்குள் பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் சுற்றித்திரியும் அபிஷாவை தேடி வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே குருந்தன்கோட்டை அடுத்த முக்கலம்பாடை பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ஜாண் (வயது 35). தக்கலை அருகே காப்பீடு முகவராக பணி புரிந்து வருகிறார். இவர் செட்டிச் சார் விளையை சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் அபிஷா என்பரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமானதில் இருந்தே இவர்களுக்குக்குள் பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி அபிஷாவை திடீெரன காணவில்லை. வீட்டு பீரோ வில் இருந்த வினோத்ஜாண் தாயின் 18½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை யும் அவர் எடுத்து சென்று விட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே அபிஷா ஆகஸ்ட் 28-ந்தேதி கோட்ட யத்தில் சுற்றி திரிவதாக வினோத்ஜா ணுக்கு தகவல் கிடைத்தது.

    நகைகள் மற்றும் பணத்துடன் அபிஷா மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் வினோத்ஜாண் புகார் தெரிவித்தார். ஆனால் அபிஷாவை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் சுற்றித்திரியும் அபிஷாவை தேடி வருகின்றனர்.

    • ஒரு மாதமாக சரியாக தூக்கம் வரவில்லை என்று மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள மொட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 76). ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    பாலசுந்தரம் சிறுநீரக கோளாறு, நெஞ்சுவலி, கால்வீக்கம் போன்ற பல நோய்களுக்கு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். கடந்த ஒரு மாதமாக சரியாக தூக்கம் வரவில்லை என்று மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் ஏதோ விஷம் அருந்தி மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் ஆசாரிபள்ளம் மருத் துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவரது மகன் ஜெயன் புகார் கொடுத்தார். அதன் பேரில் இரணியல் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • சாஸ்தான்கோவில் பீடரில் மின்கம்பிகள் மாற்றும் பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    களியக்காவிளை, செப்.6-

    குழித்துறை கோட்டத்துக்குட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் சாஸ்தான்கோவில் பீடரில் மின்கம்பிகள் மாற்றும் பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மார்த்தாண்டம் காந்தி மைதானம், சந்தை, பேருந்து நிலையம், ெரயில் நிலையம், மதிலகம், செக்குமூடு, வால்குளம் பகுதிகளிலும் அதைச் சார்ந்த கிராமங்களிலும் மின் விநியோகம் இருக்காது. இந்த நேரத்தில் மின் கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் அகற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில்20-ந்தேதி நடக்கிறது
    • ஒரு கல்லூரியில் இருந்து 5 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்

    கன்னியாகுமரி :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 10 மணி அளவில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு "கலைஞரும் சங்கத் தமிழும்" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஒரு கல்லூரியில் இருந்து 5 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். 3 நிமிடங்களுக்குள் மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு களும் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வருகிற 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் தங்களின் பெயர்களை 72005 62301 என்ற எண்ணில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    • கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 5.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.72 அடியாக உள்ளது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது சற்று மழை குறைந்துள்ளது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், இரணியல், கோழிப் போர்விளை, முள்ளங்கினாவிளை, அடையாமடை பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 5.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.72 அடியாக உள்ளது. அணைக்கு 472 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 37.95 அடியாக உள்ளது. அணைக்கு 228 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

    • கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.
    • புகைப்பட கண்காட்சிகனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் தெரிந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

    நாகர்கோவில், 

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பெதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சர்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

    இந்தக் கண்காட்சியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

    மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின் போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது. காலை உவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

    மேலும் குமரி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற ஸ்ரீதர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சிகனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

    ×