என் மலர்
காஞ்சிபுரம்
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து மாநிலங்களும் ஏற்று நடக்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க வேண்டும்.
காரைக்கால் மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பித்தான் உள்ளனர். டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பி சம்பா சாகுபடி விவசாயம் செய்து வருகிறார்கள்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகாவில் நடைபெறும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. அங்குள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரத்தை அடுத்த திருக்காவேரிபாக்கத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 47) தொழிலாளி. இவர் அதே பகுதியில் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி சைக்கிள் மீது மோதியது.
பலத்த காயம் அடைந்த அருணாசலத்தை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல், காஞ்சீபுரம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (60). இவர் ரெட்டை மண்டபம் பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை நுழைவு பகுதியில் நள்ளிரவு 2 பைகள் கேட்பாரற்று கிடந்தன. நீண்ட நேரமாக அந்த பையை தேடி யாரும் வராததால் விமான நியைத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பின்னரும் யாரும் பையை தேடி வரவில்லை.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 2 பைகளையும் திறந்து சோதனை செய்தனர். அதில் பழைய துணிமணிகள் இருந்தது. பயணிகள் யாரோ பையை மறந்துவிட்டு விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
அதிகாலை 2.30 மணியளவில் 2 பேர் பைகளை தேடி மது போதையில் அந்த பகுதிக்கு வந்தார்கள். அனாதையாக கிடந்த பைகள் அவர்களுக்கு சொந்தமானதுதானா? என விசாரித்து ஒப்படைக்கப்படுகிறது.
கேட்பாரற்று கிடந்த 2 பைகளும் நள்ளிரவில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்கு சிறிது நேரம் நீடித்தது.
தாம்பரம்:
போரூர் அருகேயுள்ள கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (54), கட்டிட காண்டிராக்டராக இருந்தார். இன்று காலை தாம்பரத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்த போது பின்னால் வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது . இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர் விசாரணையில் சேத்துப்பட்டை சேர்ந்த சித்தார்த் (24) என்பவர் ஓட்டி வந்த கார் மோதியது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். இவர் கூடுவாஞ்சேரி தனியார் சட்டக்கல்லூரியில் வக்கீலுக்கு படித்து வருகிறார்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர் பகுதிகளில் அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர், வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதில் பலகோடி மதிப்புள்ள உடைமைகளை பொதுமக்கள் இழந்தனர். ஆதனூர் பகுதியில் தொடங்கும் அடையாறு ஆறு வரதராஜபுரம், முடிச்சூர், பெருங்களத்தூர் வழியாக செல்கிறது.
அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், இதை வலியுறுத்தி பெருங்களத்தூரில் முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகள் மற்றும் புதர்களை அகற்றி கரைகளை பலப்படுத்தி தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர். இதனால் முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர் பகுதிகளில் அடையாறு ஆற்றில் நீர் தங்கு தடையின்றி வேகமாக செல்கிறது.
மழைக்காலத்திற்கு முன்பே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்ட தமிழக அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
திருவான்மியூர்
ஆந்திராவை சேர்ந்தவர் ராஜேந்திரபாபு (26) என்ஜீனியர். இவர் பெருங்குடியில் தங்கி இருந்து சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். பெருங்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் ராஜேந்திரபாபு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து. கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி யோடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சி 19-வது வார்டில் போட்டியிட விருப்ப மனுவை கழக மாநில அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோரிடம் கொடுத்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசியான இவர் முதல்வரின் ஒவ்வொரு பிறந்த நாளினை முன்னிட்டும் முத்தியால்பேட்டை பகுதியில் பிரம்மாண்டமான விழா நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றார்.
ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு 68 டன் அரிசி, 68 நாட்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கழகத்தினர் மற்றும் பொதுமக்களின் வாழ்த்தினை பெற்றார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை உயர்த்தி முதல்வர் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுத்தந்தபோது முத்தியால்பேட்டை பகுதியில் முல்லைப் பெரியாறு அணை போன்ற கட்-அவுட் அமைத்து அதில் குழாய் மூலம் பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறுவது போன்று அமைத்து மக்களின் பாராட்டினைப் பெற்றவர் ஆர்.வி.ரஞ்சித்குமார்.
கடந்த 2011 முதல் 2016 வரை இதே பகுதியில் ஊராட்சிக் கவுன்சிலராக இருந்து மக்கள் தொண்டாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து கிளைக்கழக நிர்வாகிகளுடன் இவர் தனது விருப்ப மனுவினை அளித்தார்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் டில்லிகோளாச்சியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்து கோவிலை பூட்டிச் சென்றனர்.
இன்று காலை பூசாரி கோவிலை திறக்க சென்ற போது உண்டியல் உடைந்து கிடந்தது. அதில் இருந்த பணத்தை மர்ம கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது. ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் கொள்ளை போய் இருக்கலாம் என்று தெரிகிறது.
இதே கோவிலில் கடந்த மாதமும் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சிக்கவில்லை. தற்போது மீண்டும் கொள்ளை நடந்து இருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரத்தை அடுத்த ஏகனாம்பேட்டை பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர் சிகிச்சை அளிப்பதாக காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜய குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மருத்துவ குழுவினர் நேற்று இரவு ஏகனாம்பேட்டையில் ‘காந்திஜி கிளினிக்’ என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்த பாபுராஜ் என்பவரின் சான்றிதழ்களை பரிசோதித்தனர்.
அவர் பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்றும் அப்பகுதியில் சில மாதங்களாக போலி டாக்டராக மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து வாலாஜா பாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப் பதிவு செய்து போலி டாக்டர் பாபு ராஜை கைது செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலில் பலர் உயிர் இழந்ததையடுத்து போலி டாக்டர்களை பிடிக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதுவரை மாவட்டம் முழுவதும் 33 போலி டாக்டர்கள் பிடிபட்டு உள்ளனர்.
தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்திலும் போலி டாக்டர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி போலி டாக்டர்களை பிடிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சீபுரம், செப். 19-
காஞ்சீபுரம் மாவட்டத் தில் வடகிழக்கு பருவமழை யின் போது மேற்கொள் ளப்பட வேண்டிய முன் னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை கள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
பருவமழை காலத்தில் ஏற்படும் உயிர் சேதம், கால்நடைகள் உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்க தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப் பாக தங்க வைக்கும் இடங் கள் குறித்து ஆய்வு மேற் கொள்ள வேண்டும்.
கடலோர பகுதிகளில் நீச்சல் தெரிந்த இளைஞர்கள் மற்றும் சமூக சேவகர்களின் செல்போன் எண்களை பெற்று தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் பேரிடர் மீட்பு பணிக்கான உபகரணங் களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஏரி, குளங்களை தூர் வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள், நகர்மன்ற தலைவர்கள் கலந்து கொண் டனர்.
ஆலந்தூர்:
சென்னை வந்த மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்திய விளையாட்டு துறையில் அனைத்து வீரர்களும் சமமாக பார்க்கப்படுகிறார்கள்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பயண ஏற்பாடு குறைபாடுகள் இருந்தது தொடர்பாக சொல்லப்பட்ட புகார்களுக்கு விசாரணை நடந்து வருகிறது.
அதனுடைய அறிக்கை அடுத்தவாரம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் விளையாட்டு துறை சார்பாக ஒரு இணையதளம் தொடங்கப்பட இருக்கிறது.
இதில் நாடு முழுவதும் உள்ள வீரர்-வீராங்கனைகள் தங்களின் விளையாட்டின் தகுதிகளை பதிவு செய்து கொள்ளளலாம். அதன் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம் கிராமத்தில் தனியார் அரிசி ஆலை உள்ளது. இங்கு கொத்தடிமைகளாக சிலர் வேலை பார்ப்பதாக ஆர்.டி.ஒ. அருண் சம்பு ராஜுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையில் அதிகாரிகள் அரிசி ஆலையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 2 ஆண்கள், 2 பெண்கள், 4 குழந்தைகள் என 9 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்தது தெரிந்தது. அவர்களை அதிகாரிகள் மீட்டனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.






