என் மலர்
செய்திகள்

சிறந்த வீரர்களை கண்டறிய விளையாட்டு வீரர்களுக்கு தனி இணைய தளம்: மத்திய மந்திரி விஜய் கோயல் பேட்டி
சிறந்த வீரர்களை கண்டறிய விளையாட்டு வீரர்களுக்கு தனி இணைய தளம் என மத்திய மந்திரி விஜய் கோயல் பேட்டி அளித்தார்.
ஆலந்தூர்:
சென்னை வந்த மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்திய விளையாட்டு துறையில் அனைத்து வீரர்களும் சமமாக பார்க்கப்படுகிறார்கள்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பயண ஏற்பாடு குறைபாடுகள் இருந்தது தொடர்பாக சொல்லப்பட்ட புகார்களுக்கு விசாரணை நடந்து வருகிறது.
அதனுடைய அறிக்கை அடுத்தவாரம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் விளையாட்டு துறை சார்பாக ஒரு இணையதளம் தொடங்கப்பட இருக்கிறது.
இதில் நாடு முழுவதும் உள்ள வீரர்-வீராங்கனைகள் தங்களின் விளையாட்டின் தகுதிகளை பதிவு செய்து கொள்ளளலாம். அதன் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story