என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரி-குளங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: காஞ்சீபுரம் கலெக்டர் உத்தரவு
    X

    ஏரி-குளங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: காஞ்சீபுரம் கலெக்டர் உத்தரவு

    பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி-குளங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    காஞ்சீபுரம், செப். 19-

    காஞ்சீபுரம் மாவட்டத் தில் வடகிழக்கு பருவமழை யின் போது மேற்கொள் ளப்பட வேண்டிய முன் னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை கள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

    பருவமழை காலத்தில் ஏற்படும் உயிர் சேதம், கால்நடைகள் உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்க தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப் பாக தங்க வைக்கும் இடங் கள் குறித்து ஆய்வு மேற் கொள்ள வேண்டும்.

    கடலோர பகுதிகளில் நீச்சல் தெரிந்த இளைஞர்கள் மற்றும் சமூக சேவகர்களின் செல்போன் எண்களை பெற்று தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் பேரிடர் மீட்பு பணிக்கான உபகரணங் களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    ஏரி, குளங்களை தூர் வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள், நகர்மன்ற தலைவர்கள் கலந்து கொண் டனர்.

    Next Story
    ×