என் மலர்
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே அம்மன் கோவிலில் கொள்ளை: போலீசார் விசாரணை
ஸ்ரீபெரும்புதூர் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் டில்லிகோளாச்சியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்து கோவிலை பூட்டிச் சென்றனர்.
இன்று காலை பூசாரி கோவிலை திறக்க சென்ற போது உண்டியல் உடைந்து கிடந்தது. அதில் இருந்த பணத்தை மர்ம கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது. ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் கொள்ளை போய் இருக்கலாம் என்று தெரிகிறது.
இதே கோவிலில் கடந்த மாதமும் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சிக்கவில்லை. தற்போது மீண்டும் கொள்ளை நடந்து இருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story