என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் அரிசி ஆலையில் கொத்தடிமைகள் 9 பேர் மீட்பு
    X

    தனியார் அரிசி ஆலையில் கொத்தடிமைகள் 9 பேர் மீட்பு

    வாலாஜாபாத் அருகே தனியார் அரிசி ஆலையில் கொத்தடிமைகள் 9 பேர் மீட்டனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம் கிராமத்தில் தனியார் அரிசி ஆலை உள்ளது. இங்கு கொத்தடிமைகளாக சிலர் வேலை பார்ப்பதாக ஆர்.டி.ஒ. அருண் சம்பு ராஜுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது தலைமையில் அதிகாரிகள் அரிசி ஆலையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 2 ஆண்கள், 2 பெண்கள், 4 குழந்தைகள் என 9 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்தது தெரிந்தது. அவர்களை அதிகாரிகள் மீட்டனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×