என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் அருகே விபத்தில் 2 பேர் பலி
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த திருக்காவேரிபாக்கத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 47) தொழிலாளி. இவர் அதே பகுதியில் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி சைக்கிள் மீது மோதியது.
பலத்த காயம் அடைந்த அருணாசலத்தை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல், காஞ்சீபுரம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (60). இவர் ரெட்டை மண்டபம் பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story