என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு ஏற்கவேண்டும்: நாராயணசாமி பேட்டி
    X

    காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு ஏற்கவேண்டும்: நாராயணசாமி பேட்டி

    காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்கவேண்டும் என புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து மாநிலங்களும் ஏற்று நடக்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க வேண்டும்.

    காரைக்கால் மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பித்தான் உள்ளனர். டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பி சம்பா சாகுபடி விவசாயம் செய்து வருகிறார்கள்.

    காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகாவில் நடைபெறும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. அங்குள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×