என் மலர்
செய்திகள்

பெருங்குடியில் பஸ் மோதி என்ஜினீயர் பலி
பெருங்குடியில் பஸ் மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர்
ஆந்திராவை சேர்ந்தவர் ராஜேந்திரபாபு (26) என்ஜீனியர். இவர் பெருங்குடியில் தங்கி இருந்து சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். பெருங்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் ராஜேந்திரபாபு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து. கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி யோடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story






