என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்து வருகிறது.
    புஞ்சை புளியம்பட்டி: 

    ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஈரோடு, சென்னிமலை, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு  தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள்.

    மேலும் ஈரோடு, கோவை, சேலம்,  நாமக்கல் மாவட்டங்களில் உற்பத்தியாளர்கள் பலர் கைத்தறியில் பட்டு சேலைகள் உற்பத்தி செய்து வருகிறார்கள். 

    அவர்கள் பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து பட்டு நூல் மற்றும் கச்சா பொருட்களை கொள்முதல் செய்து வருகிறார்கள். இதன் மூலம் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட் கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனால் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதனால் பட்டு சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. நூல் விலையை குறைக்க மத்திய  அரசு மற்றும் ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நாமக்கல் மாவடங்களில்  கடந்த 10-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. 

    இன்று 3-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் வரும் 20-ந் தேதி வரை நடக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


    நம்பியூரில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
    நம்பியூர்:

    நம்பியூரில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம், செட்டியம்பதி பகுதியில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியானது. அதனைத் தொடர்ந்து நம்பியூர் மற்றும் இருகாலூர், வேமாண்டம்பாளையம், கூடக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது 26-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமிராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் இரவு நேரங்களில் தெர்மல் கேமிரா மூலமும் சிறுத்தையை தேடும் பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் கூடக்கரை ஆதிதிராவிடர்  காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவரின் 4 நாய்களை சிறுத்தை தாக்கி  பலியானது. 

    கடந்த சில நாட்களாக  சிறுத்தை நடமாட்டம் பற்றி  பொதுமக்கள் கூறி வந்த நிலையில் சிறுத்தை தாக்கி நாய்கள் பலியான சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  டி.என்.பாளையம் வனத்துறையினர்  சம்பவ இடத்திற்கு  வந்து விசாரணை மேற் கொண்டனர்.  

    அப்போது இந்த தாக்குதலில் ஈடுபட்டது காட்டு பூனையாக இருக்கலாம் எனவும், சிறுத்தை உணவு சாப்பிடாமல் செல்லாது. மேலும் காட்டுப்பூனைகள் தான் கழுத்தை உடனடியாக பிடிக்கும் எனவும் வனத்துறையினர் கூறினர்.

    இது குறித்து டி.என். பாளையம் வனச்சரகர் கணேஷ்பாண்டியன் கூறியதாவது:-

    நாங்கள் தீவிரமாக தாக்குதலில் ஈடுபட்டு வரும் காட்டு விலங்கை தேடி வருகிறோம். இன்று கூடக்கரை மற்றும் இருகாலூர் அருகே உள்ள பொன்காத்த அய்யன் கோவில் குளத்தின் பகுதியில்  கூண்டுகள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்கான பணிகள் இன்று நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரம் சிறுவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரம் சிறுவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

    முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

    பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இதையடுத்து 12 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. 

    இதில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில்  தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 

    ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 பேர் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  

    இதுவரை மொத்தம் 83 ஆயிரத்து 053 சிறுவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசியான கோவேக்சின் போடப்பட்டு வந்தது.

    இந்நிலையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கடந்த மாணவ-மாணவிகளுக்கு தற்போது 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

    மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 598 சிறுவர்களுக்கு கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.
    சென்னிமலை:

    வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.

    சென்னிமலை யூனியன் வெள்ளோடு அடுத்துள்ள வி.மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயம் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்த சரணாலயத்தில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் இன்று காலை ஈரோடு வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    இதில்  ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி சேவை அமைப்பை சேர்ந்த மாணவர்கள், தலைமை ஆசிரியர் பரமசிவம், ஆசிரியர் சக்திவேல் மற்றும் வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 15 இடங்களில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    இந்த கணக்கெடுக்கும் பணி 2 நாட்கள் நடைபெறும்.


    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
    ஈரோடு:

    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது:-

    மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தில் கடந்த அக்டோபர்  மாதம் 1-ந் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து குறுந்தகவலை உறுதி செய்து பட்டியல் எழுத்தர் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

    நெல் கொள்முதலுக்கு தேவையான ஆவணங்களை உறுதி செய்த பின்னர் விவசாயிகளை காக்க வைக்காமல் உடனே நெல் கொள்முதல் செய்வதை நிலைய பொறுப்பாளர் உறுதி செய்ய வேண்டும்.

    நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் மூட்டைக்கு தொகை ஏதும் எக்காரணம் கொண்டும் பெறக்கூடாது. 

    இது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர், சுமை தூக்கும்பணியாளர்கள், கொள்முதல் அலுவலர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சம்மந்தப்பட்ட துணை மேலாளர் (கொள்முதல் மற்றும் இயக்கம்) மற்றும் கொள்முதல் அலுவலர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதலில் எவ்வித இடையூறும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். 

    இச்சுற்றறிக்கையை கடைபிடிக்க தவறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு  அவர் அதில் கூறியுள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 504 மையங்களில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 504 மையங்களில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 22-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது. 

    அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 504 மையங்களில் இன்று காலை 9 மணிக்கு மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது.  

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்த முகாமில் மாவட் டம் முழுவதும் 2016 பணியாளர்கள், 66 வாக னங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  

    18 வயது நிரம்பிய இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
     
    இதேபோல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர் களுக்கும்,  60 வயது உடைய இணை நோயுடைய முதியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.

    கடந்த 2 வாரத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 26 பாம்புகளை பிடித்ததாக யுவராஜா தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு காந்திஜி ரோடு, தீயணைப்பு நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது.

    அப்போது பாம்பு ஒன்று சென்றதை கட்டிட வேலை பார்க்கும் பணியாளர் ஒருவர் பார்த்தார். இது குறித்து மற்றவர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதை கேள்விப்பட்டு அந்த பகுதியில் மக்கள் கூடிவிட்டனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த பாம்பை லாபகரமாக பிடித்தார். பிடிபட்ட பாம்பு 9 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு என தெரியவந்தது. ஆளுயர பாம்பை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் யுவராஜா அந்த பாம்பை ஈரோடு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

    இதேப்போல் வெட்டு காட்டுவலசு பகுதியில் புதிதாக சைசிங் மில் கட்டும் பணி நடந்து வந்தது. அப்போது அந்த பகுதியில் பாம்பு செல்வதை பார்த்த மக்கள் இதுகுறித்து யுவராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கட்டிட இடிபாட்டில் பதுங்கி இருந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாபகரமாக பிடித்தார்.

    இதேபோல் அதே பகுதியில் ஒருவர் வீட்டில் மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பையும் பிடித்தார். கடந்த 2 வாரத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 26 பாம்புகளை பிடித்ததாக யுவராஜா தெரிவித்தார்.

    மனைவி, குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து விட்டார்கள் என்ற மன வருத்தத்தில் இருந்து வந்த தொழிலாளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து இறந்தார்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே லட்சுமனபுரம் பண்ணாரி ரோடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (37). தொழிலாளி. இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

    இந்நிலையில்  கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு  காரணமாக கடந்த 2 வருடங் களுக்கு முன்பு வித்யா கணவருடன் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். 

    மனைவி, குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து விட்டார்கள் என்ற மன வருத்தத்தில் இருந்து வந்த பழனிசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து சத்தியமங்கலம்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் நாளை 504 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த தடுப்பூசி முகாமில் 1.50 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நாளை 504 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த தடுப்பூசி முகாமில் 1.50 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 
     
    ஈரோடு மாவட்டத்திலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 

    இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) 22-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 504 மையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

    நாளை மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 2,016 பணியாளர்கள், 66 வாகனங்கள் பயன்படுத்தப் பட உள்ளது. 

    18 வயது நிரம்பிய இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

     இதேபோல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. 

    மேலும் 60 வயது உடைய இணை நோயுடைய முதியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
    ஈரோட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.27 லட்சம் பேர் குணமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில்  கொரோனா பாதிப்பில் இருந்து 1.27 லட்சம் பேர் குணமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் 3-ம் அலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கி தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. 

    இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.
     
    இதன் காரணமாக மாவட் டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

    எவ்வளவு வேகத்தில் தினசரி பாதிப்பு ஏறியதோ அதே வேகத்தில் குறைந்து வருகிறது.

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 818 பேர் குணமடைந்துள்ளனர்.   இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது.   மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 730 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 3,430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 80 சதவீதம் பேர் வரை லேசான அறிகுறி உள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி  வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கம்பனூர் காலனி பகுதியில் மாரிச்சாமி என்பவர் வீட்டில் வளர்த்து வந்த நாயை கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறுத்தை கடித்து தூக்கி சென்றது.
    டி.என்.பாளையம்: 

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கம்பனூர் காலனி பகுதியில் மாரிச்சாமி என்பவர் வீட்டில் வளர்த்து வந்த நாயை கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறுத்தை கடித்து தூக்கி சென்றது.
     
    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதை அடுத்து வனத்துறையினர் நேரில் சென்று கால் தடங்களை ஆய்வு செய்து நாயை தூக்கி சென்றது சிறுத்தை தான் என உறுதி செய்தனர்.

    இதனால் வனப்பகுதியில் பொதுமக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடை களை மேய்க்க செல் வதை தவிர்ப்பதோடு, வனத் தையொட்டி வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்று டி.என்.பாளையம் வனத்துறை சார்பில் அறி வுறுத்தப்பட்டது.

    மேலும் சிறுத்தை நடமாட்டத்தை தெர்மல் கேமரா மூலம் இரவு நேரங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. 

    இதையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    தெர்மல் கேமிரா மூலம் சுமார் 200 மீட்டர் வரை வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து அறிந்து கொள்ள முடியும். 

    இரவு நேரங்களில் மட்டுமே இந்த தெர்மல் கேமரா கண்காணிப்பு முறையை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள முடியும் என்று டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தெரிவித்தார்.

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மற்றும் ரேசன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மற்றும் ரேசன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
     
    கள்ளிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ மனையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று டாக்டர் மற்றும் செவிலியரிடம் மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
     
    தொடர்ந்து கொண்டையம்பாளையம் ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ரேசன் கடையில் ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மகளிர் உழவன் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் இயற்கை முறையில் தயாரிக்கபட்டு வரும் பொருட்கள் குறித்து மகளிரிடம் கேட்டறிந்து அவர்களை ஊக்குவித்தார். 

    இதனை தொடர்ந்து கொண்டையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குட்டையூர் இரட்டை பள்ளம் ஏரியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் குறித்து ஊராட்சி அலுவலர் களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    ×