என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஈரோட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.27 லட்சம் பேர் குணமடைந்தனர்
ஈரோட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.27 லட்சம் பேர் குணமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.27 லட்சம் பேர் குணமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் 3-ம் அலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கி தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.
இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.
இதன் காரணமாக மாவட் டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எவ்வளவு வேகத்தில் தினசரி பாதிப்பு ஏறியதோ அதே வேகத்தில் குறைந்து வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 818 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 730 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 3,430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 80 சதவீதம் பேர் வரை லேசான அறிகுறி உள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story






