என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.
சென்னிமலை:
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.
சென்னிமலை யூனியன் வெள்ளோடு அடுத்துள்ள வி.மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயம் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த சரணாலயத்தில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் இன்று காலை ஈரோடு வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
இதில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி சேவை அமைப்பை சேர்ந்த மாணவர்கள், தலைமை ஆசிரியர் பரமசிவம், ஆசிரியர் சக்திவேல் மற்றும் வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 15 இடங்களில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இந்த கணக்கெடுக்கும் பணி 2 நாட்கள் நடைபெறும்.
Next Story






