என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் பதிவான வாக்குகள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி.கல்லுரியில் எண்ணப்படுகிறது. அங்கு ஒரே நேரத்தில், 42 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் பதிவான வாக்குகள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி.கல்லு£ரியில் எண்ணப்படுகிறது. அங்கு ஒரே நேரத்தில், 42 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்படும்.
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சி, கோபி, சத்தியமங்கலம், பவானி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து, 14 இடங்களில் அமைக்கப்பட்ட ஓட்டு எண்ணும் மையத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் 70.73 வாக்கு சதவீதம் பதிவாகி இருந்தது. 42 பேரூராட்சிகளில் 79.42 சதவீதமும், 4 நகராட்சிகளில் 74.14 சதவீதமும், மாநகராட்சியில் 61.91 சதவீதமும் வாக்கு பதிவாகியுள்ளது.
ஈரோடு மாநகராட்சிக் கான ஓட்டு, சித்தோடு ஐ.ஆர்.டி.டி.கல்லு£ரியில் எண்ணப்படுகிறது. அங்கு ஒரே நேரத்தில், 42 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு மேஜைக்கும் தலா, ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் என இருவர் என, 84 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
பவானி நகராட்சி ஓட்டு எண்ணிக்கைக்கு, 4 மேஜைகளுக்கு, 8 பேர், கோபி நகராட்சிக்கு, 10 கையில் ஈடுபடுகின் றனர். இவை அனைத்தும் சேர்த்து மொத்தம், 111 மேஜைகளில், 222 அலுவலர்கள் மூலம் ஓட்டு எண்ணும் பணி நடக்க உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் 222 அலுவலர்களுக்கு அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் 14 வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் 14 வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி.கல்லூரியிலும், பவானி நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், கோபி நகராட்சியில் வைர விழா உயர்நிலைப் பள்ளியில் உள்ள கே.எம்.ஆர் ஹாலிலும், சத்தியமங்கலம் நகராட்சிக்கு
சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை அறிவியல் கல்லூரிக்கும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அவல்பூந்துறை, சிவகிரி, கொல்லான் கோவில், மொடக்குறிச்சி, வடுகப்பட்டி, அரச்சலூர் ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மொடக்குறிச்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,
கொடுமுடி, சென்ன சமுத்திரம், வெங்கம்பூர், கிளாம்பாடி, பாசூர், ஊஞ்சலூர், வெள்ளோடம்பரப்பு ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கொடுமுடியில் உள்ள ஸ்ரீ சங்கராவித்தியாசல பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெத்தாம்பாளையம், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், நல்லாம் பட்டி, காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், சென்னிமலை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியிலும்,
ஆப்பக்கூடல், ஜம்பை, பி.மேட்டுப்பாளையம், சலங்கபாளையம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அந்தியூர், அத்தாணி, நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தியூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், லக்கம்பட்டி, கூகலூர், காசிபாளையம் (கோபி), எலத்தூர், நம்பியூர், கொளப்பலூர் ஆகிய பேரூராட்சியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அரியப்பம்பாளையம், பெரிய கொடிவேரி, கெம்பநாயக்கன்பாளையம், வாணிபுதூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யிலும்,
பவானிசாகர் பேரூராட்சியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானிசாகரில் உள்ள ஹோலி ரெட்டிம்பர்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
14 மையங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக வேட்பாளர்களின் முகவர் களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்பே அவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் காலை 9 மணி முதல் வெளியாகும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 வாக்கு எண்ணும் மையங்கள் நேற்று முதலே போலீசார் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் வாக்கு எண்ணும் மையத்திலும், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சித்தோடு ஐ .ஆர். டி. டி. கல்லூரி வாக்குப்பதிவு எண்ணும் மையத்தில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தீ போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க தீயணைப்பு வீரர்களும் வாகனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் ஓட்டு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பெரிய டிஜிட்டல் திரை மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான வைரவிழா மேல்நிலைப்பள்ளிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. பின்னர் வரிசையாக ஒரு அறையில் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அறையின் முன்பகுதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் உள்ளிட்டவை கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக் கப்பட்டு வருகிறது.
இதுதவிர ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் ஓட்டு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பெரிய டிஜிட்டல் திரை மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் வேட்பாளர் களின் முகவர் களும் இதை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கோபிசெட்டிபாளையம் ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு 14 வாக்கு எண்ணும் மையங்களில் தொடங் குகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு 14 வாக்கு எண்ணும் மையங்களில் தொடங் குகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:&
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் 14 மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் வைக்கப்பட்டு, சீல் இடப்பட்டு 24 மணி நேரமும் காவல் துறையினர் மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நாளில் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். கண்டிப்பாக தீப்பெட்டி, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், புகையிலைப் பொருட்கள் போன்றவை அனுமதிக்கப்பட மாட்டாது. மீறி வைத்திருப்போரின் அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்படும்.
மது வகைகள் மற்றும் இதர குளிர்பானங்களுக்கு அனுமதி இல்லை. முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அரசியல் பேசுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டால் முகவர்களது அனுமதி ரத்து செய்யப்படும்.
வாக்கு எண்ணிக்கையின் போது, வேட்பாளர்கள், முகவர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பவானியில் 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானியில் 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி அடுத்த காளிங்கராயன்பாளையம் கவுந்தப்பாடி ரோட்டில் சலூன் கடை, சைக்கிள் கடை, மருந்து கடை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளை உரிமையாளர்கள் பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கடையை திறக்க அவர்கள் வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சலூன் கடை, சைக்கிள் கடை, மருந்து கடை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் கடை ஆகிய கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கடையை திறந்து பார்த்தனர். இதில் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்து விசாரணை நடத் தினர்.
இதில் இரவு சிலர் அந்த பகுதியில் உள்ள 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளனர்.
இதில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போய் உள்ளதா? என ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கேயன், சித்தோடு இன்ஸ் பெக்டர் வடிவேல் முருகன் குமார் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ஒரு வாலிபர் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு சைக்கிளை தள்ளி கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.
இது குறித்து சித்தோடு போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இது இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது திம்பம் மலைப்பாதையை கடந்து செல்வது உண்டு. அவ்வாறு செல்லும் வனவிலங்குகள் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்தன.
இதை கருத்தில் கொண்டு திம்பம் மலைப்பாதையில் கடந்த 10-ந் தேதி முதல் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாளவாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் முக்கிய தொழிலே விவசாயம் தான். இதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், கொள்ளேகால், குண்டல்பேட் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.
எனவே தாளவாடி மற்றும் அதன் எல்லையில் உள்ள கர்நாடக மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களான தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றை வாகனங்கள் மூலம் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம், கோபி, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் காய்கறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக சாம்ராஜ் நகர், கொள்ளேகால், குண்டல்பேட் பகுதிகளில் இருந்து தமிழக பகுதிகளுக்கு அனுப்பப்படும் காய்கறி வாகனங்கள் செர்ணாவதி சோதனை சாவடியில் கர்நாடக போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் உரிய இடத்தில் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் காலம் கடந்து காய்கறிகளை விற்பனை செய்வதால், அதற்கு உரிய விலையும் கிடைப்பதில்லை. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
இதன்காரணமாக எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அத்தியாவசிய பொருளான காய்கறி ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களையும் (லாரி தவிர) திம்பம் மலைப்பாதையில் இரவு 10 மணி வரை செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறுஅவர்கள் கூறினர்.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 93.78 அடியாக குறைந்தது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 93.78 அடியாக குறைந்தது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 93.78 அடியாக இருந்தது. அணைக்கு 1152 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து அரக்கன் கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கனஅடியும், ஆற்றில் குடிநீருக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி என மொத்தம் 3 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பழுதான லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் வாகனங்கள் தொடர்ந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
தமிழகம்- கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வன விலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கடந்த 10-ந் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மலைப்பாதையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலத்துக்கு கிராணைட் பாரம் ஏற்றி வந்த ஒரு லாரி திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டு இருந்தது. லாரி மாலை 4 மணியளவில் ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. வாகனங்கள் அனைத்தும் மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன. பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறம்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் அதிக பாரம் காரணமாக கிரேன் மூலமாக லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை.
இதனால் திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து விடிய, விடிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உணவு, தண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் இரவு முழுவதும் பெண்கள் குழந்தைகளுடன் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
மலை பாதையில் குறைந்த எடையுள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. ஆனால் சுமார் 30 முதல் 40 டன் எடையுள்ள லாரியை திம்பம் மலைப்பாதையில் சர்வ சாதாரணமாக இயக்கப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பழுதான லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் வாகனங்கள் தொடர்ந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் லாரி பழுது சரி செய்யப்பட்டது. இதன் பிறகு லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து 16 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டு மற்ற வாகனங்கள் சென்றன.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
தமிழகம்- கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வன விலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கடந்த 10-ந் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மலைப்பாதையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலத்துக்கு கிராணைட் பாரம் ஏற்றி வந்த ஒரு லாரி திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டு இருந்தது. லாரி மாலை 4 மணியளவில் ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. வாகனங்கள் அனைத்தும் மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன. பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறம்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் அதிக பாரம் காரணமாக கிரேன் மூலமாக லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை.
இதனால் திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து விடிய, விடிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உணவு, தண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் இரவு முழுவதும் பெண்கள் குழந்தைகளுடன் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
மலை பாதையில் குறைந்த எடையுள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. ஆனால் சுமார் 30 முதல் 40 டன் எடையுள்ள லாரியை திம்பம் மலைப்பாதையில் சர்வ சாதாரணமாக இயக்கப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பழுதான லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் வாகனங்கள் தொடர்ந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் லாரி பழுது சரி செய்யப்பட்டது. இதன் பிறகு லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து 16 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டு மற்ற வாகனங்கள் சென்றன.
ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினரின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினரின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் கொரோனா 3-ம் அலை திடீரென தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
அதிலிருந்து 20 நாட்கள் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.
பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.
இதன் காரணமாக மாவட் டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பை விட குணமடைந் தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 378ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 167 பேர் குணமடைந் துள்ளனர். இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது.
மாவட் டத்தில் கொரோனாவால் இதுவரை 733 பேர் உயிரிழந்து உள்ளனர்.தற்போது மாவட்டம் முழுவதும் 1,026 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவதால் பரிசோதனை எண்ணிக்கையும் குறைக்கப் பட்டுள்ளது.
தற்போது ஆயிரம் பேர் சிகிச்சையில் 85 சதவீதம் பேர் லேசான அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பொது மக்களில் பெரும் பாலானோர் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வருவது இல்லை.
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் 23 ஆயிரம் பறவைகள் உள்ளதாக பறவைகள் கணெக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னிமலை:
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் 23 ஆயிரம் பறவைகள் உள்ளதாக பறவைகள் கணெக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு அடுத்த வி.மேட்டுப்பாளையம் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள் ளது.
இங்கு வெளி நாட்டு பறவைகள் உள்பட பல்வேறு பறவைகள் உள்ளது. மேலும் பல்வேறு விதமான புது வகை பறவைகளும் இந்த பகுதிக்கு வந்து செல்கிறது.
இந்த பறவைகள் சரணாலயம் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த சரணாலயத்தில் வலசை காலமான அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பற வைகள் அதிக அளவில் வந்து செல்கிறது.
இந்த நிலையில் இந்த பறவைகள் சரணாலயத்தில் கடந்த சில நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதில் மாவட்ட வன அலுவலர் கவுதம், வனச்சரகர் ரவீந்திரநாத்,வனவர் பாரதி, வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர் .
இங்கு வெளி நாட்டு பறவைகள் எத்தனை உள்ளன. எந்த வகை பறவைகள் அதிகளவில் உள்ளன.
மேலும் அதிசய பற வைகள் இங்கு வந்துள்ளதா? என்பது குறித் தும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் ஆய்வு செய்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது.
இதில் பெலிகான், அரிவால் மூக்கன், உப்பு கொத்தி, பண்ணை நாரை, கொக்கு, பஞ்சுட்டான், ஆந்தை, உட்பட உள்நாடு,வெளிநாட்டு பறவைகள் என 121&க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன.
இங்கு 23 ஆயிரம் பறவைகள் இருக்காலம் என அவர்கள் தெரிவித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறைந்தபட்சமாக மாநகராட்சி பகுதியில் 61.91 சதவீதம் பதிவானது.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறைந்தபட்சமாக மாநகராட்சி பகுதியில் 61.91 சதவீதம் பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டுகளுக்கும், பவானி, சத்தி தலா 27 வார்டுகள், கோபி நகராட்சி 30 வார்டுகள், புளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 4 நகராட்சிகளில் 102 வார்டு களுக்கும், இதேபோல 42 பேரூராட்சிகளில் உள்ள 608 வார்டுகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 769 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில், ஈரோடு மாநகராட்சியில் 2 லட்சத்து 15ஆயிரத்து 546 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 24ஆயிரத்து 138 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 42 பேர் என மொத்தம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 726 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
பவானி, கோபி, சத்தி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளில் 61ஆயிரத்து 786 ஆண் வாக்காளர்கள், 67ஆயிரத்து 949 பெண் வாக்காளர்கள் மற்றும் இதர வாக்காளர்கள் 12 பேர் என மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 747 பேரும், 42 பேரூராட்சிகளில் 1லட்சத்து 90ஆயிரத்து 408 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 5 ஆயிரத்து 142 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 16 பேர் என மொத்தம் 3 லட்சத்து 95ஆயிரத்து 566 வாக்காளர்கள் என மாவட்டம் முழுவதும் 4 லட்சத்து 67 ஆயிரத்து 740 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 97 ஆயிரத்து 229 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 70 பேர் என மொத்தம் 9 லட்சத்து 65 ஆயிரத்து 39 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க மாவட்டம் முழுவதும் 1,219 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
முன்னதாக காலை 6 மணிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குசாவடி ஊழியர்கள் மாதிரி வாக்குபதிவு நடத்தி காண்பித்தனர்.
பின்னர் அதில் பதிவாகி இருந்த வாக்குகள் அழிக்கப்பட்ட பிறகு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குபதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
காலை நேரத்தில் பெண் வாக்காளர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர்.
ஆண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 10 மணிக்கு மேல் ஆண் வாக்காளர் களுக்கு இணையாக பெண் வாக்களர்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் வாக்குசாவடி நுழைவு பகுதியில் வாக்காளர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு, கையுறை வழங்கப்பட்டது.
இதையடுத்து வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் சென்று தங்களது வாக்கினை செலுத்தினர். இத்தேர்தல் பாதுகாப்பில் மாவட்டம் முழுவதும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
184 பதட்டமான வாக்குசாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இறுதி நேரமான மாலை 6 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதில் மாநகராட்சியில் 2 லட்சத்து 72ஆயிரத்து 249 வாக்குகளும், நகராட்சிகளில் 96 ஆயிரத்து 195 வாக்குகளும், பேரூராட்சி களில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 139 வாக்குகள் பதிவாகியிருந்தது.
இதன்படி, ஈரோடு மாநகராட்சியில் 61.91 சதவீதமும், 4 நகராட்சிகளில் 74.14 சதவீதமும், 42 பேரூராட்சிகளில் 79.42 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் மாநகராட்சி பகுதியில் தான் 61.91 சதவீதம் என்ற குறைவான வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 1,219 வாக்குச் சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குசாவடி அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர் மண்டல அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக சீலிடப்பட்டுள்ளதா? என சோதனையிட்டு வாகனங்களில் ஏற்றி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதில், ஈரோடு மாநகரா ட்சியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி.கல்லூரியிலும், பவானி நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும்,
கோபி நகராட்சியில் வைர விழா உயர்நிலைப் பள்ளியில் உள்ள கே.எம்.ஆர் ஹாலிலும், சத்தியமங்கலம் நகராட்சிக்கு சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை அறிவியல் கல்லூரிக்கும், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் புஞ்சைபுளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அவல்பூந்துறை, சிவகிரி, கொல்லான் கோவில், மொடக் குறிச்சி, வடுகப் பட்டி, அரச்சலூர் ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மொடக்குறிச்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர், கிளாம்பாடி, பாசூர், ஊஞ்சலூர், வெள்ளோடம்பரப்பு ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கொடுமுடியில் உள்ள ஸ்ரீசங்கராவித்தியாசல பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெத்தாம்பாளையம், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், நல்லாம் பட்டி, காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், சென்னிமலை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியிலும், ஆப்பக்கூடல், ஜம்பை, பி.மேட்டுப்பாளையம், சலங்கபாளையம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அந்தியூர், அத்தாணி, நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்கவாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தியூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், லக்கம்பட்டி, கூகலூர், காசிபாளையம் (கோபி), எலத்தூர், நம்பியூர், கொளப்பலூர் ஆகிய பேரூராட்சியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அரியப்பம்பாளையம், பெரிய கொடிவேரி, கெம்பநாயக்கன்பாளையம், வாணிபுதூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யிலும், பவானிசாகர் பேரூராட்சியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானிசாகரில் உள்ள ஹோலி ரெட்டிம்பர்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கும், மேலும் அந்தந்த பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு தேர்தல் அலுவலர்கள் வாக்குப் பெட்டிகளை சோதனை செய்து, பாதுகாப்பு அறையில் வைக்கும் பணியினை மேற்கொண்டனர். இந்த பணிகள் நள்ளிரவு வரை தொடர்ந்து நடந்தது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும், 24 மணி நேரம் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






