என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் பதிவான வாக்கு சதவீத விபரம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறைந்தபட்சமாக மாநகராட்சி பகுதியில் 61.91 சதவீதம் பதிவானது.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  குறைந்தபட்சமாக மாநகராட்சி பகுதியில் 61.91 சதவீதம் பதிவானது.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டுகளுக்கும், பவானி, சத்தி தலா 27 வார்டுகள், கோபி நகராட்சி 30 வார்டுகள், புளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 4 நகராட்சிகளில் 102 வார்டு களுக்கும், இதேபோல 42 பேரூராட்சிகளில் உள்ள 608 வார்டுகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 769 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. 

    இந்த தேர்தலில், ஈரோடு மாநகராட்சியில் 2 லட்சத்து 15ஆயிரத்து 546 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 24ஆயிரத்து 138 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 42 பேர் என மொத்தம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 726 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

    பவானி, கோபி, சத்தி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4  நகராட்சிகளில் 61ஆயிரத்து 786 ஆண் வாக்காளர்கள், 67ஆயிரத்து 949 பெண் வாக்காளர்கள் மற்றும் இதர வாக்காளர்கள் 12 பேர் என மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 747 பேரும்,  42 பேரூராட்சிகளில் 1லட்சத்து 90ஆயிரத்து 408 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 5 ஆயிரத்து 142 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 16 பேர் என மொத்தம் 3 லட்சத்து 95ஆயிரத்து 566 வாக்காளர்கள் என மாவட்டம் முழுவதும் 4 லட்சத்து 67 ஆயிரத்து 740 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 97 ஆயிரத்து 229 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 70 பேர் என மொத்தம் 9 லட்சத்து 65 ஆயிரத்து 39 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 

    வாக்காளர்கள் வாக்களிக்க மாவட்டம் முழுவதும் 1,219 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

    முன்னதாக காலை 6 மணிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குசாவடி ஊழியர்கள் மாதிரி வாக்குபதிவு நடத்தி காண்பித்தனர். 

    பின்னர் அதில் பதிவாகி இருந்த வாக்குகள் அழிக்கப்பட்ட பிறகு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குபதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    காலை நேரத்தில் பெண் வாக்காளர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். 

    ஆண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 10 மணிக்கு மேல் ஆண் வாக்காளர் களுக்கு இணையாக பெண் வாக்களர்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 

    கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் வாக்குசாவடி நுழைவு பகுதியில் வாக்காளர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு, கையுறை வழங்கப்பட்டது. 

    இதையடுத்து வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் சென்று தங்களது வாக்கினை செலுத்தினர். இத்தேர்தல் பாதுகாப்பில் மாவட்டம் முழுவதும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    184 பதட்டமான வாக்குசாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. 

    இறுதி நேரமான மாலை 6 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதில் மாநகராட்சியில் 2 லட்சத்து 72ஆயிரத்து 249 வாக்குகளும், நகராட்சிகளில் 96 ஆயிரத்து 195 வாக்குகளும், பேரூராட்சி களில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 139 வாக்குகள் பதிவாகியிருந்தது. 

    இதன்படி, ஈரோடு மாநகராட்சியில் 61.91 சதவீதமும், 4 நகராட்சிகளில் 74.14 சதவீதமும், 42 பேரூராட்சிகளில் 79.42 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இதில் மாநகராட்சி பகுதியில் தான் 61.91 சதவீதம் என்ற குறைவான வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. 
    Next Story
    ×