என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூராட்சி வாக்கு எண்ணும் மையமான வாசவி கல்லூரியில் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு
    X
    பேரூராட்சி வாக்கு எண்ணும் மையமான வாசவி கல்லூரியில் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு

    ஈரோடு மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 14 இடங்களில் பலத்த பாதுகாப்பு

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் 14 வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் 14 வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி.கல்லூரியிலும், பவானி நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், கோபி நகராட்சியில் வைர விழா உயர்நிலைப் பள்ளியில் உள்ள கே.எம்.ஆர் ஹாலிலும், சத்தியமங்கலம் நகராட்சிக்கு
    சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை அறிவியல் கல்லூரிக்கும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது. 

    இதேபோல் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அவல்பூந்துறை, சிவகிரி, கொல்லான் கோவில், மொடக்குறிச்சி, வடுகப்பட்டி, அரச்சலூர் ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மொடக்குறிச்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 

    கொடுமுடி, சென்ன சமுத்திரம், வெங்கம்பூர், கிளாம்பாடி, பாசூர், ஊஞ்சலூர், வெள்ளோடம்பரப்பு ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கொடுமுடியில் உள்ள ஸ்ரீ சங்கராவித்தியாசல பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெத்தாம்பாளையம், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், நல்லாம் பட்டி, காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், சென்னிமலை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியிலும், 

    ஆப்பக்கூடல், ஜம்பை, பி.மேட்டுப்பாளையம், சலங்கபாளையம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அந்தியூர், அத்தாணி, நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தியூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், லக்கம்பட்டி, கூகலூர், காசிபாளையம் (கோபி), எலத்தூர், நம்பியூர், கொளப்பலூர் ஆகிய பேரூராட்சியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அரியப்பம்பாளையம், பெரிய கொடிவேரி, கெம்பநாயக்கன்பாளையம், வாணிபுதூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யிலும்,
    பவானிசாகர் பேரூராட்சியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானிசாகரில் உள்ள ஹோலி ரெட்டிம்பர்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    14 மையங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக வேட்பாளர்களின் முகவர் களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்பே அவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    மேலும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் காலை 9 மணி முதல் வெளியாகும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    14 வாக்கு எண்ணும் மையங்கள் நேற்று  முதலே போலீசார் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    இந்த பணிகள் வாக்கு எண்ணும் மையத்திலும், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சித்தோடு ஐ .ஆர். டி. டி. கல்லூரி வாக்குப்பதிவு எண்ணும் மையத்தில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தீ போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க தீயணைப்பு வீரர்களும் வாகனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
    Next Story
    ×