என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிஜிட்டல் திரை மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொண்ட போலீசார்.
    X
    டிஜிட்டல் திரை மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொண்ட போலீசார்.

    ஓட்டு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் டிஜிட்டல் திரை மூலம் போலீசார் கண்காணிப்பு

    கோபிசெட்டிபாளையம் ஓட்டு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பெரிய டிஜிட்டல் திரை மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில்  பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான வைரவிழா மேல்நிலைப்பள்ளிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. பின்னர் வரிசையாக ஒரு அறையில் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    மேலும் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அறையின் முன்பகுதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் உள்ளிட்டவை கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக் கப்பட்டு வருகிறது. 
    இதுதவிர ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    கோபிசெட்டிபாளையம் ஓட்டு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பெரிய டிஜிட்டல் திரை மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

    மேலும் வேட்பாளர் களின் முகவர் களும் இதை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    இதுதவிர கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கோபிசெட்டிபாளையம் ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×