என் மலர்tooltip icon

    ஈரோடு

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஈரோடு:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  கைதை கண்டித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    அதன்படி ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள்.ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.கே. எஸ். தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். 

    ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தி.மு.க அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    முன்னதாக ஆர்ப்பாட்டம் காரணமாக வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

    பவானி கூடுதுறை அருகே செல்லாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) இரவு பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.
    பவானி:

    பவானி கூடுதுறை அருகே செல்லாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன்  கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) இரவு பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    இதை யொட்டி 22-ந் தேதி கம்பம் நடப்பட்டது. பக்த ர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வருகிறார்கள். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு வருகிறது.

    விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு அம்மனுக்கு  புனித நீராட்டு விழாவும் நடக்கிறது. 

    நாளை மதியம் 12 மணி வரை பக்தர்கள் புனித நீர் ஊற்ற அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

    இதில் எந்த ஒரு கோவி  லிலும் இல்லாத வகையில் பக்தர்கள் கருவறைக்கே சென்று அம்மனுக்கு பால், மஞ்சள் நீர் மற்றும் புனித நீர் ஊற்றி வழிபடுவ £ர்கள்.

    இதில் பவானி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி மற்றும் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 

    நாளை மதியம் மாரியம்மன் கோவிலில் பூ மிதிக்கும் விழாவும், 2-ந் காலை 10 மணிக்கு புது பஸ் நிலையம் அருகே உள்ள எல்லை யம்மன் கோவிலில் இருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 

    இதில் குதிரையுடன் அம்மன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்படுகி றது.

    இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு உடலில் சேறு பூசி கொண்டு வந்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். 

    மேலும் பக்தர்கள் நோய் நொடியின்றி வாழ மிளகு, உப்பு, காய்கறிகள் மற்றும் பழங்களை சூறை விடுவார்கள். இதையொட்டி போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அன்று மதியம் 12 மணிக்கு பொங்கல் விழாவும், 3-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், அன்று மாலை 6 மணிக்கு கம்பம் எடுத்து ஆற்றில் விடும் விழாவும் நடக்கிறது.

    விழாவையொட்டி 4-ந் தேதி இரவு பரிவேட்டை, 5-ந் தேதி இரவு   தெப்ப உற்சவம், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
    அந்தியூர் அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பருவாச்சி அம்மன் பாளையத்தைச்சேர்ந்தவர் ராஜகோபால்(41) டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவர் தனது நண்பர் பருவாச்சி அண்ணா நகரைச் சேர்ந்த பழனிச்சாமி (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அந்தியூரில் இருந்து பருவாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராஜகோபால் ஓட்டிச் சென்றார்.

    அண்ணாமடுவு அருகே உள்ள கந்தாம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த 2 மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து இவர்கள் மோதினர். 

    இந்த விபத்தில், தலையில் பலத்த அடிபட்டு ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இந்த விபத்தில் இரட்டைக்கரடு கண்ணாடி பாளையம் அருகே உள்ள போத்தநாயக்கனூரைச் சேர்ந்த சங்கர் (21), சரவணன் (16), சுதாகர் (31), ஆனந்த் (20), மோகன் (22), மணிகண்டன் (20), பழனிச்சாமி (50) ஆகிய 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் ஆனந்த், மணிகண்டன், மோகன் ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

    மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுகாதாரத்துறையினர் நேற்று வெளியிட்டுள்ள பட்டியல் படி ஈரோட்டில் மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    சுகாதாரத்துறையினர் நேற்று வெளியிட்டுள்ள பட்டியல் படி ஈரோட்டில் மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றால் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வந்தது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் படி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. 

    இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்ட றியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப் பட்டது.

    இதன் பயனாக கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு ஏறிய வேகத்தில் குறைந்து வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 589 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 465 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

    தற்போது மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா பாதிப்புடன் 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புதிய கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி பள்ளியின் முன்பு சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திடீரென திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 65 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    7 ஆசிரியர்கள் மாணவ - மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார்கள். மாணவர்கள் மதிய உணவை பள்ளி வளாகத்தில் உள்ள ஓடு வைத்துக் கட்டப்பட்டு இருக்கும் கட்டிடத்தில் சாப்பிடுவது வழக்கம. இந்த கட்டிடம் கட்டிய 65 ஆண்டுகள் ஆகிறது.

    தற்போது அந்த கட்டிடம் சேதம் அடைந்து ஒவ்வொரு நாளும் ஓடுகள் விழுந்து வருகின்றன. இதனால் மாணவ மாணவிகள் அச்சத்துடன் சாப்பிட்டு வந்தனர். இதுகுறித்து பள்ளி சார்பிலும் பெற்றோர்கள் சார்பிலும் சத்தியமங்கலம் நகராட்சியில் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித் தரச் சொல்லி மனு கொடுத்திருந்தனர்.

    ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் இன்று காலை புதிய கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி பள்ளியின் முன்பு சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 8.45 மணிக்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திடீரென திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது விரைவில் உங்கள் பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்திற்கு பதில் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் பள்ளியில் போதிய அளவு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தனர். இதனை ஏற்று மாணவர்கள் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காட்சி அளித்தது.
    நகை பட்டறை அதிபரிடம் பணம் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுந்தப்பாடி:

    நகை பட்டறை அதிபரிடம் பணம் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமாநிலத்தை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகன் கானாஜி. இவர்கள் கோபி செட்டிபாளையத்தில் நகை உருக்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்கள் ஈரோட்டில் நகை களை பாலீஸ் போட்டு கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று கானாஜி மோட்டார் சைக்கிளில் ஈரோட்டு சென்று விட்டு மீண்டு கோபிசெட்டிபாளையத்துக்கு வந்து கொண்டு இருந்தார். 

    அப்போது கவுந்தப்பாடி அடுத்த எல்லீஸ்பேட்டையில் வந்து கொண்டு இருந்த போது அவரை பின் தொடர்ந்து ஒரு கார் வந்தது.

    இதையடுத்து அவரை வழி மறித்து காரில் இருந்து  போலீஸ் உடையில் இறங்கி யவர்கள் நாங்கள் போலீஸ் என கூறி அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போனை எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர் பையில் வைத்து இருந்த 2 கிலோ தங்க நகைகளை எடுக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் வந்ததால் அவர்கள் சுதாரித்து கொண்டு அங்கு இருந்து காரில் தப்பி சென்றனர். 

    இதனால் 2 கிலோ தங்க நகைகள் தப்பியது. இதையடுத்து கானாஜி காரில் வந்தவர்கள் தன்னை ஏமாற்றி பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்தார். அத்ன பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கோபி  துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் ஒரு தனிப்படையும், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு வருகிறார்கள். 

    மேலும் கொள்ளை சம்ப வத்தில் ஈடுபட்டது வெளி மாவட்ட கொள்ளையர்களா? அல்லது உள்ளூர் கொள் ளையர்களா? என்பது குறித்து போலீசார் தீவிர மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாளவாடியை அடுத்த கேர்மாளம் சுஜில்கரை கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது.
    தாளவாடி:

    தாளவாடி அடுத்த கேர்மாளம் அருகே சுஜில்கரை கிராமத்தில்   2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 

    இங்கு குறைந்தளவு மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் வீடுகளில் லைட் தவிர பிற  மிக்ஸி, கிரைண்டர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மின் விநியோகமும் விட்டு விட்டு வருவாதலும் குறைந்தழுந்த மின் சப்ளையால் குடிநீர் நிலைய மின்மோட்டார் செயல் படுவதில்லை. 

    இதனால் மேல்நிலை  தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் கடந்த 15 நாள்கள் குடிநீர் தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. 
     
    இதனால் மக்கள் அங்குள்ள ஆழ்குழாய் கைபம்பு, கிணற்றில் கையால் இறைத்து தண்ணீர் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

    குடும்பத்தில் உள்ள பள்ளி குழந்தைகள்,  பெண்கள் என அனைவரும் தண்ணீர் எடுப்பதை முழு வேலையாக மாறிவிட்டது. 

    எனவே சுஜில்கரை கிராமத்துக்கு உயர் அழுத்த மின் விநியோகம் அளித்து குடிநீர் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சுஜில்கரை கிராமத்தில் குடிநீர் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் காலிக்குடங்களுடன் காத்திருந்தனர்.
    சாலை விபத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்வம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    சாலை விபத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்வம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் பெருமாள் (70). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். 

    இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து காலை ஈரோட்டில் இருந்து சின்னியம்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். 

    அப்போது லக்காபுரம் பால்பண்ணை அருகே வந்த போது நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையின் பின் பகுதியில் பலத்த அடிப்பட்டு காயம் ஏற்பட்டது. 

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

    அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து மொடக்குறிச்சி சப்&இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,400 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில் 2 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,400  மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில் 2 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிக்க ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து உள்ளது.

    கொரோனா தொற்று பரவ காரணமாக ஜனவரி 23-ந் தேதி நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்பட்டது. இதையொட்டி இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
     
    சென்னையில் இன்று முதல்&அமைச்சர் மு.க. ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். 

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று 5 வயதிற்கு ட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி நடந்து வருகிறது. 

    ஈரோடு பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இன்று காலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றி முகாமை தொடங்கி வைத்தார்.  

    இதற்காக காலையிலிருந்தே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வந்திருந்தனர். 

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் என 1,400 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. 2 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக மாவட்டம் முழு வதும் 5,533 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 97 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

    இதேப்போல் கோபி பஸ் நிலையம், அந்தியூர், பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கொடுமுடி என மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை செலுத்தி வருகின்றனர். 

    இன்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்த முடியாத பெற்றோர்கள்  அடுத்து வரும் நாட்களில் செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    தமிழகத்தில் மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் வழங்கிய முதல்வரின் வழிகாட்டுதல் படி சுகாதார அமைச்சரின் சீரிய முயற்சியால் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்து வருகிறது. இன்று காலை 7 மணிக்கு முகாம் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இதற்காக மாவட்டம் முழுவதும் 1400 மையங்களில் 5533 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு முகாம் சிறப்பாக நடந்து வருகிறது. இதேப்போல் மலைப் பகுதிகளிலும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்து வருகிறது. 

    மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள 5வயது க்குட்பட்ட குழந்தைகளை ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டிருந்தாலும் இன்று நடக்கும் முகாமில் பங்கேற்று ஒரு துளி போலியோ சொட்டு மருந்தை தங்களது குழந்தைகளுக்கு செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    உக்ரேனில் தங்கியுள்ள மாணவ, மாணவர்களின் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவர் களுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோட்டில் மஞ்சளுக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று சிறு, குறு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் மஞ்சளுக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று சிறு, குறு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு முதல்&அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் நிதி நிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கையில், உரத்தின் விலையை குறைத்து அறிவிக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால், உர விலை உயர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. 

    கடந்த ஆகஸ்டு மாதம்  ஒரு மூட்டை பொட்டாஸ் உரம் 870 ரூபாயாக இருந்து தற்போது, 1,700 ரூபாயா கவும், கலப்பு உரங்கள் 30 முதல், 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. 

    யூரியா தட்டுப்பாடாக உள்ளது. இதனை போக்கு முயல வேண்டும். கடும் ஆள் பற்றாக்குறை உள்ளதை மற்ற 100 நாள் வேலை திட்டப்பணியாளர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த அறிவிக்க வேண்டும்.

    மஞ்சள், மரவள்ளி பயிருக்கு உரிய விலை, விளைச்சல் இன்று விவசாயிகள் பாதிக்கின்றனர். மஞ்சளுக்கு ஈரோட்டிலும், மர வள்ளிக்கு நாமக்கல்லிலும் தனி வாரியம் அமைக்க வேண்டும். 

    நெல்லுக்கான ஆதார விலையை, கிலோவுக்கு, 30 ரூபாயாக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 1,000 லிட்டர் மானிய விலை டீசல் வழங்க வேண்டும்.

    பால் விலை லிட்டருக்கு, 50 ரூபாயாக உயர்த்த வேண்டும். கால்நடைகளை காக்க, ஒவ்வொரு தாலுகாவிலும் அதிவேக ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும். 60 வயதான விவசாயிகளுக்கு அரசு பஸ்சில் இலவசமாக செல்ல பாஸ் வழங்க வேண்டும்.

    சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு வழங்கும் மானியத்தை உயர்த்தி, ஒரு லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் அறுவடைக்கு எந்திரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

    ஈரோடு சப்- டிவி‌ஷனல் ஒரே நாளில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் சமீப நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதையடுத்து இரவு நேர ரோந்து பணியினை தீவிரப்படுத்தி ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவிட்டார்.

    இதன்பேரில், ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்த குமார் தலைமையில் ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, தாலுகா உள்ளிட்ட போலீஸ் நிலையத்திற்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஈரோடு டவுன் போலீசார் வளையக்கார வீதி அடுத்த குப்பி பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படியாக 5 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது. அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் ஈரோடு வெண்டிபாளையம் பாலதண்டாயுதபாணி வீதியை சேர்ந்த தினேஷ் என்ற பெங்களூரு தினேஷ் (23), வி.வி.சி.ஆர் நகர் முதல் வீதியை சேர்ந்த தீனா (20), அதேபகுதி 3-வது வீதியை சேர்ந்த கார்த்தி என்கிற பொய் கார்த்தி (23), அஜித்குமார் (21), கச்சேரி வீதியை சேர்ந்த முகேஷ்(22) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

    இவர்கள், கூட்டு கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட திட்டம் திட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் இன்று கைது செய்தனர்.

    இதேபோல், கருங்கல்பாளையம் போலீசார் மேற்கொண்ட ரோந்தில் வழிப்பறியில் ஈடுபட முயன்றதாக வி.வி.சி.ஆர் நகர் 3-வது வீதியை சேர்நத்த கார்த்திக் (21), அதேபகுதியை சேர்ந்த லட்சு மணன் (21), வளையக்கார வீதியை சேர்ந்த கவின்ராஜ் (22), மோசிக்கீரனார் 5-வது வீதியை சேர்ந்த 18 வயது வாலிபர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் அனைவரும் அந்த பகுதியில் ரவுடிகள் போன்று வலம் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து இதுபோன்று ரவுடியிசம் செய்யும் கும்பல், பொதுமக்களுக்குத் தொந்தரவு செய்யும் கும்பல் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு சப்- டிவி‌ஷனல் ஒரே நாளில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொடுமுடி அருகே வடமாநில கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே வடமாநில கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் தானாருரா பகுதியை சேர்ந்தவர் அணீஸ் வர்மா கடந்த 3 வருடமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி-கரூர் பைபாஸ் ரோடு நத்தமேடு என்னுமிடத்தில் மாமா நந்துவர்மா, அவரது தம்பி தீபக் வர்மா, அவரது அத்தை மகன் அஜய் வர்மா ஆகியோர் ஒரே வீட்டில் குடியிருந்து பானிபூரி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    அனீஸ் வர்மாவின் அக்கா திக்சா வர்மாவுக்கும், நந்துவர் மாவுக்கும் திருமணம் நடந்தது. 

    இதையடுத்து அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கொடு முடியில் அருகே உள்ள நத்தமேட்டில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். 

    திக்சா வர்மா கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் கணவன்&மனைவிக்கு இடையே சிறு, சிறு தகராறு இருந்து வந்தது.

    சம்பவத்தன்று நந்து வர்மா கொடுமுடிக்கு பானிபூரி வியாபாரத் துக்காக சென்று விட்டார். வீட்டில் திக்சா வர்மா மட்டும் இருந்துள்ளார். 

    வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு நந்து வர்மா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள் அறையில் திக்சா வர்மா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திக்சா வர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

     இதுகுறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×