என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுஜில்கரை கிராமத்தில் குடிநீர் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் காலிக்குடங்களுடன் காத்திருந்தனர்.
மின்சாரம் இல்லாததால் கடும் குடிநீர் தட்டுபாடு
தாளவாடியை அடுத்த கேர்மாளம் சுஜில்கரை கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது.
தாளவாடி:
தாளவாடி அடுத்த கேர்மாளம் அருகே சுஜில்கரை கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு குறைந்தளவு மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் வீடுகளில் லைட் தவிர பிற மிக்ஸி, கிரைண்டர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மின் விநியோகமும் விட்டு விட்டு வருவாதலும் குறைந்தழுந்த மின் சப்ளையால் குடிநீர் நிலைய மின்மோட்டார் செயல் படுவதில்லை.
இதனால் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் கடந்த 15 நாள்கள் குடிநீர் தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது.
இதனால் மக்கள் அங்குள்ள ஆழ்குழாய் கைபம்பு, கிணற்றில் கையால் இறைத்து தண்ணீர் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குடும்பத்தில் உள்ள பள்ளி குழந்தைகள், பெண்கள் என அனைவரும் தண்ணீர் எடுப்பதை முழு வேலையாக மாறிவிட்டது.
எனவே சுஜில்கரை கிராமத்துக்கு உயர் அழுத்த மின் விநியோகம் அளித்து குடிநீர் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுஜில்கரை கிராமத்தில் குடிநீர் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் காலிக்குடங்களுடன் காத்திருந்தனர்.
Next Story






