என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
சாலை விபத்தில் முதியவர் பலி
சாலை விபத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்வம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
சாலை விபத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்வம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் பெருமாள் (70). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து காலை ஈரோட்டில் இருந்து சின்னியம்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது லக்காபுரம் பால்பண்ணை அருகே வந்த போது நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையின் பின் பகுதியில் பலத்த அடிப்பட்டு காயம் ஏற்பட்டது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி சப்&இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






