search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
    X
    ஈரோடு பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

    1,400 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,400 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில் 2 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,400  மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில் 2 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிக்க ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து உள்ளது.

    கொரோனா தொற்று பரவ காரணமாக ஜனவரி 23-ந் தேதி நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்பட்டது. இதையொட்டி இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
     
    சென்னையில் இன்று முதல்&அமைச்சர் மு.க. ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். 

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று 5 வயதிற்கு ட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி நடந்து வருகிறது. 

    ஈரோடு பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இன்று காலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றி முகாமை தொடங்கி வைத்தார்.  

    இதற்காக காலையிலிருந்தே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வந்திருந்தனர். 

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் என 1,400 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. 2 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக மாவட்டம் முழு வதும் 5,533 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 97 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

    இதேப்போல் கோபி பஸ் நிலையம், அந்தியூர், பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கொடுமுடி என மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை செலுத்தி வருகின்றனர். 

    இன்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்த முடியாத பெற்றோர்கள்  அடுத்து வரும் நாட்களில் செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    தமிழகத்தில் மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் வழங்கிய முதல்வரின் வழிகாட்டுதல் படி சுகாதார அமைச்சரின் சீரிய முயற்சியால் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்து வருகிறது. இன்று காலை 7 மணிக்கு முகாம் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இதற்காக மாவட்டம் முழுவதும் 1400 மையங்களில் 5533 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு முகாம் சிறப்பாக நடந்து வருகிறது. இதேப்போல் மலைப் பகுதிகளிலும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்து வருகிறது. 

    மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள 5வயது க்குட்பட்ட குழந்தைகளை ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டிருந்தாலும் இன்று நடக்கும் முகாமில் பங்கேற்று ஒரு துளி போலியோ சொட்டு மருந்தை தங்களது குழந்தைகளுக்கு செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    உக்ரேனில் தங்கியுள்ள மாணவ, மாணவர்களின் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவர் களுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×