என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
நகை பட்டறை அதிபரிடம் பணம் கொள்ளை
நகை பட்டறை அதிபரிடம் பணம் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:
நகை பட்டறை அதிபரிடம் பணம் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநிலத்தை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகன் கானாஜி. இவர்கள் கோபி செட்டிபாளையத்தில் நகை உருக்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்கள் ஈரோட்டில் நகை களை பாலீஸ் போட்டு கொண்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத் தன்று கானாஜி மோட்டார் சைக்கிளில் ஈரோட்டு சென்று விட்டு மீண்டு கோபிசெட்டிபாளையத்துக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது கவுந்தப்பாடி அடுத்த எல்லீஸ்பேட்டையில் வந்து கொண்டு இருந்த போது அவரை பின் தொடர்ந்து ஒரு கார் வந்தது.
இதையடுத்து அவரை வழி மறித்து காரில் இருந்து போலீஸ் உடையில் இறங்கி யவர்கள் நாங்கள் போலீஸ் என கூறி அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போனை எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து அவர் பையில் வைத்து இருந்த 2 கிலோ தங்க நகைகளை எடுக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் வந்ததால் அவர்கள் சுதாரித்து கொண்டு அங்கு இருந்து காரில் தப்பி சென்றனர்.
இதனால் 2 கிலோ தங்க நகைகள் தப்பியது. இதையடுத்து கானாஜி காரில் வந்தவர்கள் தன்னை ஏமாற்றி பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்தார். அத்ன பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் ஒரு தனிப்படையும், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு வருகிறார்கள்.
மேலும் கொள்ளை சம்ப வத்தில் ஈடுபட்டது வெளி மாவட்ட கொள்ளையர்களா? அல்லது உள்ளூர் கொள் ளையர்களா? என்பது குறித்து போலீசார் தீவிர மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






