என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 790 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 790 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், மற்றும் 42 பேரூராட்சிகளில் 792 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.

    இதில் 2 பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் இறந்ததால் அந்த 2 வார்டுகளில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.  மீதம் 790 வார்டுகளில் கவுன்சிலர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
    இதில் ஈரோடு மாநகராட்சியில் ஒரு வார்டு, பேரூராட்சிகளில் 20 வார்டுகளில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 790 கவுன்சிலர்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். 

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 48 வார்டுகளை பிடித்து ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றி யுள்ளது. அதேப்போல் கோபி, சத்தியமங்கலம், பவானி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது. 
    இதேப்போல் 42 பேரூராட்சிகளில் பெரும்பாலானவற்றை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு விழா அந்தந்த அலுவலகங்களில் இன்று கோலாகலமாக நடந்தது.

    ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இருக்கைகள் தயார் செய்யப்பட்டு மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன.
     
    கவுன்சிலர்கள் உறவின ர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர். காலை 10 மணிக்கு மாநகராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    ஒவ்வொரு உறுப்பி னர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை வெளியே ஏற்கும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் உட்காரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.

    மேலும் நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் மாநகராட்சி அலுவலகம் இன்று விழாக்கோலம் பூண்டு இருந்தது. 
    இதேபோல் கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளில் வெற்றி பெற்ற 102 கவுன்சிலர்கள் அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இதேப்போல் 42 பேரூராட்சி அலுவலக ங்களிலும் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதனால் அனைத்து அலுவலகங்களும் இன்று விழாக்கோலம் பூண்டு இருந்தது.
    இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் பெண்கள் சரிசமமாக வந்திருந்து பதவியேற்றுக் கொண்டனர்.

    இதை தொடர்ந்து வரும் 4-ந் தேதி  ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர், நான்கு நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 42 பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் கவுன் சிலர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அன்று காலை தலைவர்களுக்கான தேர்தலும், மதியம் துணை தலைவர்களுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. 

    ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதுபோல் மற்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவியை கைப்பற்றவும் கடும் போட்டி நடந்து வருகிறது.
    ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் குண்டம் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் குண்டம்  விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

    ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் குண்டம்  விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  ஈரோடு மட்டுமின்றி  குமாரபாளையம், பள்ளி பாளையம், நாமக்கல்,  கொடுமுடி, சிவகிரி போன்ற பகுதிகளில் இருந்து  ஆயிரக்கணக்கான மக்கள் விரதம் இருந்து தீ மிதிப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா  கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி இரவு 9 மணி அளவில் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.  அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த 21-ந் தேதி இரவு கொடி ஏற்றப்பட்டது. 27-ந் தேதி பால் அபிஷேகம் நடந்தது. 28-ந் தேதி அக்னி கபாலம் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் விரதமிருந்து அக்னிசட்டி ஏந்தி வந்தனர். இதையடுத்து நேற்று இரவு குண்டம் பற்றவைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. குண்டம் இறங்குவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பே கோவில் வளாகத்தில் மக்கள் வந்து இடம் பிடித்திருந்தனர். 

    முதலில் கோவில் பூசாரி குண்டம் இறங்கினர்.அதைத்தொடர்ந்து பொதுமக்கள் குண்டம் இறங்கினர். குறிப்பாக பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். சில திருநங்கைகளும் குண்டம் இறங்கினர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குண்டம் இறங்கினர். 

    இதை தொடர்ந்து இன்று இரவு பத்ரகாளி அம்மன் நகர்வலம் நடைபெறுகிறது. நாளை மாலை 5 மணி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
    பெருந்துறை அருகே காஞ்சிகோயில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே காஞ்சிகோயில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

    பெருந்துறை அருகே காஞ்சிகோயில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு காஞ்சிக்கோவில்- சித்தோடு ரோட்டில் அமைந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அந்த வழியாக சென்ற மர்ம நபர் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்துவிட்டு சென்றுவிட்டனர். 

    இதனால் குப்பை கிடங்கில் பற்றிய தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இதனை அணைக்க முடியாமல் தடுமாறிய காஞ்சிக்கோவில் பேரூராட்சி ஊழியர்கள் இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

    நிலைய அலுவலர் (பொறுப்பு) நாகேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
    பெருந்துறை அருகே காஞ்சிகோயில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே காஞ்சிகோயில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

    பெருந்துறை அருகே காஞ்சிகோயில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு காஞ்சிக்கோவில்- சித்தோடு ரோட்டில் அமைந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அந்த வழியாக சென்ற மர்ம நபர் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்துவிட்டு சென்றுவிட்டனர். 

    இதனால் குப்பை கிடங்கில் பற்றிய தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இதனை அணைக்க முடியாமல் தடுமாறிய காஞ்சிக்கோவில் பேரூராட்சி ஊழியர்கள் இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

    நிலைய அலுவலர் (பொறுப்பு) நாகேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
    நாட்டுசர்க்கரை தயார் செய்யவும் ஆட்கள் கிடைக்காததால் நன்கு வளர்ந்த கரும்புகள் வயல் வெளியில் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதில் கீழ்பவானி பாசனத் திட்டம், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திட்டம், ஆற்றுப் பாசனம், குளம், கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் ஏரி பாசனத்தில் விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்து வருகிறார்கள்.

    கரும்பு பயிர்களை பயிர் செய்யும் விவசாயிகள் விளைந்த கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைக்கும், வயல் வெளிகளில் ஆலை அமைத்து நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயார் செய்தும் வருகிறார்கள். தற்போது 10 ஆயிரம் ஏக்கரில் கரும்புகள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதனால் 10 மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய கரும்புகள் 15 மாதங்களை கடந்தும் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் தனியார் ஆலையும் கரும்புகளை வெட்டாமல் உள்ளது. நாட்டுசர்க்கரை தயார் செய்யவும் ஆட்கள் கிடைக்காததால் நன்கு வளர்ந்த கரும்புகள் வயல் வெளியில் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கவுந்தப்பாடி பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது கரும்புகள் நன்கு வளர்ந்துள்ளது. இந்த பகுதியில் கரும்பு ஏக்கருக்கு சுமார் 70 டன் கிடைக்கும். நாட்டுச்சர்க்கரை தயார் செய்தால் சுமார் 60 மூட்டை சர்க்கரை கிடைக்கும். தற்போது அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறையால் 15 மாதம் வளர்ந்து காய்ந்து வரும் கரும்புகளால் குறைவான மகசூல் மட்டுமே கிடைக்கும். மகசூல் கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றனர்.

    தெங்கு மரஹடாவில் கிராம மக்களை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
    ஈரோடு:

    தெங்கு மரஹடாவில் கிராம மக்களை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் துணை இயக்குனர் கிருபாசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டம், நீலகிரி வனக் கோட்டத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராமத்தில் வசிக்கும் மக்களை சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வெளியே இடம் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கள இயக்குனர் தலைமையில் ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, தெங்குமரஹடா பகுதியில் வசிக்கும் அனைத்து கிராம மக்களையும், வரும் 6-ந் தேதி சந்திப்பது.

    அப்பகுதியில் தங்களது குடியிருப்பு தொடர்பாக சட்ட ரீதியிலான நிலையை எடுத்துரைத்து, அவர்களது கருத்துக்களை அறிந்து உறுதி செய்து அறிவுரை வழங்கப்பட உள்ளது.

    இக்குழு கூட்டம் வரும் 6-ந் தேதி தெங்குமரஹடா கிராமத்தில் காலை, 10:30 மணிக்கு நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் தெங்குமரஹடா கிராம மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு  அவர் அதில் கூறியுள்ளார்.
    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
    ஈரோடு:

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில்  நான் முதல்வன்  என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியினை ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் கண்டு பயன்பெறும் வகையில்  எல்.இ.டி.டி.வி, லேப்டாப், ஸ்மார்ட் திரைகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. 

    பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாண வர்களுடன் காணொலி வாயிலான கருத்தரங்கங்கில் பங்கேற்றார்.

    இந்த நிகழ்ச்சியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் எல்.இ.டி., 51 தொலைக் காட்சிகள், 537 லேப்டாப், 81 ஸ்மார்ட் கிளாஸ், 82 எல்.சி.டி. புரஜெக்டர், 111 ஆய்வகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

    இது தவிர இந்த நிகழ்ச்சியை யூடிப் லிங் மூலம் மாணவ&மாணவர்களின் பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 111 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 26 ஆயிரத்து 429 மாணவ- மாணவிகள் அவர்கள் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    இதுதவிர ஈரோடு மாவட்டத்தில் உள்ள 146 தனியார் பள்ளிகளில் இந்த நிகழ்ச்சியை காணும் வகையில் இணையதள இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.

    காஞ்சிக்கோவில் அருகே கத்தியை காட்டி வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    காஞ்சிக்கோவில் அருகே கத்தியை காட்டி வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கவுந்தப்பாடி சலங்க பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பந்தலராஜா.இவர் சம்பவத்தன்று பணி முடித்து கொண்டு காஞ்சிக்கோயில் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

    அப்போது கருமாண் டியூர் அருகே பந்தல ராஜாவின் மோட்டார் சைக்கிளை 3 நபர்கள் வழிமறித்து நிறுத்தினர்.  3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி பந்தல ராஜாவின் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக பந்தல ராஜா காஞ்சிக்கோயில் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசுதா பேகம், காஞ்சிகோவில் சப்&இன்ஸ்பெக்டர் துரைசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் பெத்தாம்பாளையம் நால் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.
     
    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மோகன்ராஜ், யாசின் முகமது மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் சேர்ந்து பந்தலராஜாவிடம் செல் போனை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். 

    இதையடுத்து காஞ்சிகோவில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மோகன்ராஜ், யாசின் முகமது ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், 17 வயது சிறுவன் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 77 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இன்று ஒப்படைத்தார்
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 77 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இன்று ஒப்படைத்தார்

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வருகிறது.  மாவட்ட சூப்பிரண்டு சசிமோகன் நேரடி மேற்பார் வையில்   சைபர் கிரைம் செயல்பட்டு வருகிறது.

    பேஸ்புக், வாட்ஸ்-அப், இண்டஸ்கிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் மூலமாக ஏற்படும் பிரச்சனைகள், வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் மோசடி ஆகியவை குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதேப்போல் இங்கு கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் முழுவதும் மாயமான செல்போன்கள் மற்றும் திருட்டு போன செல்போன் கள் குறித்து புகார்கள் வந்தது. இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரூ.10 லட்சம் மதிப்பில் 77 செல்போன்களை கண்டுபிடித்தனர்.

    இந்த செல் போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் செல்போன்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் இன்று இரவு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் களில் இன்று இரவு மகா சிவராத்திரி விழா கொண் டாடப்படுகிறது.

    இதையொட்டி ஈரோடு கோட்டை ஈஸ்வரன்  கோவில் மற்றும் மகிமாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை 8 மணிக்கு யாக சாலை பூஜையுடன் மகா சிவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து  இரவு 7 மணிக்கு சிவனுக்கு  பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது-. 

    தொடர்ந்து இரவு 10 மணிக்கு 2-ம் கால பூஜை, நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜை, நாளை அதி காலை 4 மணிக்கு 4-ம் கால பூஜை என 4 கால பூஜை கள் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். பக்தர்கள் முக கவசம் அணிந்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து தரிசனம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இன்று இரவு முதல் சிவனுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய் யப்படுகிறது. தொடர்ந்து விடிய, விடிய சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் இன்று இரவு முதல் நாளை அதி காலை வரை ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து பரத நாட்டியம், இசை கச்சேரி நடக்கிறது.

    இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    கோபி அருகே உள்ள கலிங்கியம் நாகேஸ்வரர் கோவிலில் இன்று மாலை 5 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 


    மேலும் கோபி அருகே உள்ள பாரியூர் அமர பணீஸ்வரர் கோவில், மொடச்சூர் சோமேஸ்வரர் கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், கோபி  விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், பச்சை மலை மரகதேஸ்வரர் கோவில், மாதேஸ்வரன் கோவில் மாதேசியப்பன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில்  சிவராத் திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இதை யொட்டி கோபுரங்கள் மின்விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு உள்ளது.

    புளியம்பட்டி அண்ணா மலையார் கோவிலில் இன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை அண்ணா மலை யாருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது.


     தொடர்ந்து 3 கால பூஜை கள் விடிய, விடிய நடை பெறு கிறது. தொடர்ந்து அபி ஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

     அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் இன்று இரவு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிவனடியார்கள் விடிய விடிய சிவன் பாடல்கள் பாடி தரிசனம் செய்கிறார்கள்.

    கவுந்தப்பாடி பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீல்நெடுங்கன்னி கோவில், பெருந்தலையூர் மகிலீஸ்வரர் கோவில், பெருந்துறை சோளீஸ்வரர் கோவில் உள்பட மாவட் டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடக்கிறது. இதில் ஏராளமான சிவ பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் சிவனை வழி படுவார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க்க உள்ளனர். இதனை பொதுமக்கள் பார்க்கும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க்க உள்ளனர். இதனை பொதுமக்கள்  பார்க்கும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு  உள்ளது. 

    ஈரோடு மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கும், பவானி, சத்தியமங்கலத்தில் தலா 27 வார்டுகள், கோபியில் 30 வார்டுகள், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 4 நகராட்சிகளில் 102 வார்டுகளுக்கும்,

    இதேபோல 42 பேரூராட்சிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 21 பேர் உள்ள 608 வார்டுகளுக்கும் என மொத்தம் 790 கவுன்சிலர் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளை தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி கைப்பற்றியது. ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் 43 வார்டுகளில் தி.மு.க. நேரடியாக வெற்றி பெற்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.தி.மு.க. தலா ஒரு இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் என திமுக கூட்டணி கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்று ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
     
    இதையடுத்து  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியே ற்கும் விழா நாளை (2&ந் தேதி) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு நாளை மாநகராட்சி கூட்ட அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. காலை 9.30 மணி அளவில்  கவுன் சிலர்களுக்கு மாநகராட்சி தேர்தல்  அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணை யாளருமான சிவக்குமார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இதற்காக மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கூட்ட அரங்கு சுத்தப் படுத்தப்பட்டு இருக்கைகள் வைக்கப் பட்டன. மாநகராட்சி அலுவ லகம் முன்பு பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் பதவியேற்பு நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்க்கும் வகையில் மாநகராட்சி அலுவலகம் வெளியே பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைத்து பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  விழாவில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பார்கள். 

    இதேபோல் சத்திய மங்கலம், பவானி, கோபி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் நாளை கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு நடைபெறுகிறது. இதேபோல் 42 பேருராட்சி அலுவலக ங்களிலும் அந்தந்த உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நாளை நடைபெறுகிறது. இதனால் அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள் நகராட்சி அலுவலகங்கள் விழாக் கோலம் பூண்டுள்ளது.

    நாளை பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் தான் வரும் 4&ந் தேதி நடைபெறும் மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில் பங்கேற்க முடியும்.

    அதே சமயம் கொரோனா உள்பட பல்வேறு காரணங் களால் நாளை பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாத உறுப்பினர்கள் வரும் 4&ந் தேதி நடைபெறும் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக அரை மணி நேரத்திற்கு முன்பு பதவி ஏற்க வேண்டும்.

     இதைத்தொடர்ந்து 4&ந் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. ஈரோடு மாநகராட்சி மேயர்பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மேயர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வருகின்றனர். இதேப்போல் துணை மேயர் பதவியை பிடிக்கவும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கான விடை வரும் 4&ந் தேதி தெரிந்து விடும்.

    நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நடுப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    ஈரோடு:

    நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நடுப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், பாசூர், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், ஈஞ்சம்பள்ளி, கொளாநல்லி, கருமாண்டாம் பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே.பாளையம், சோளங்கா பாளையம், ஆராம் பாளையம், எம்.கே. புதூர், காளிபாளையம், கொளத்தப்பாளையம், செம்மாண்டாம் பாளையம், குட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. 

    இந்த தகவலை தெற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்தார்.

    ×