என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு பூஜை நடந்த போது எடுத்தப்படம்.
    X
    சிறப்பு பூஜை நடந்த போது எடுத்தப்படம்.

    சிவன் கோவில்களில் இன்று மகா சிவராத்திரி விழா

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் இன்று இரவு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் களில் இன்று இரவு மகா சிவராத்திரி விழா கொண் டாடப்படுகிறது.

    இதையொட்டி ஈரோடு கோட்டை ஈஸ்வரன்  கோவில் மற்றும் மகிமாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை 8 மணிக்கு யாக சாலை பூஜையுடன் மகா சிவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து  இரவு 7 மணிக்கு சிவனுக்கு  பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது-. 

    தொடர்ந்து இரவு 10 மணிக்கு 2-ம் கால பூஜை, நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜை, நாளை அதி காலை 4 மணிக்கு 4-ம் கால பூஜை என 4 கால பூஜை கள் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். பக்தர்கள் முக கவசம் அணிந்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து தரிசனம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இன்று இரவு முதல் சிவனுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய் யப்படுகிறது. தொடர்ந்து விடிய, விடிய சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் இன்று இரவு முதல் நாளை அதி காலை வரை ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து பரத நாட்டியம், இசை கச்சேரி நடக்கிறது.

    இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    கோபி அருகே உள்ள கலிங்கியம் நாகேஸ்வரர் கோவிலில் இன்று மாலை 5 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 


    மேலும் கோபி அருகே உள்ள பாரியூர் அமர பணீஸ்வரர் கோவில், மொடச்சூர் சோமேஸ்வரர் கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், கோபி  விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், பச்சை மலை மரகதேஸ்வரர் கோவில், மாதேஸ்வரன் கோவில் மாதேசியப்பன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில்  சிவராத் திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இதை யொட்டி கோபுரங்கள் மின்விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு உள்ளது.

    புளியம்பட்டி அண்ணா மலையார் கோவிலில் இன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை அண்ணா மலை யாருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது.


     தொடர்ந்து 3 கால பூஜை கள் விடிய, விடிய நடை பெறு கிறது. தொடர்ந்து அபி ஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

     அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் இன்று இரவு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிவனடியார்கள் விடிய விடிய சிவன் பாடல்கள் பாடி தரிசனம் செய்கிறார்கள்.

    கவுந்தப்பாடி பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீல்நெடுங்கன்னி கோவில், பெருந்தலையூர் மகிலீஸ்வரர் கோவில், பெருந்துறை சோளீஸ்வரர் கோவில் உள்பட மாவட் டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடக்கிறது. இதில் ஏராளமான சிவ பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் சிவனை வழி படுவார்கள்.
    Next Story
    ×