என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
கத்தியை காட்டி வாலிபரிடம் செல்போன் பறிப்பு
காஞ்சிக்கோவில் அருகே கத்தியை காட்டி வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
காஞ்சிக்கோவில் அருகே கத்தியை காட்டி வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கவுந்தப்பாடி சலங்க பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பந்தலராஜா.இவர் சம்பவத்தன்று பணி முடித்து கொண்டு காஞ்சிக்கோயில் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கருமாண் டியூர் அருகே பந்தல ராஜாவின் மோட்டார் சைக்கிளை 3 நபர்கள் வழிமறித்து நிறுத்தினர். 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி பந்தல ராஜாவின் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக பந்தல ராஜா காஞ்சிக்கோயில் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசுதா பேகம், காஞ்சிகோவில் சப்&இன்ஸ்பெக்டர் துரைசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் பெத்தாம்பாளையம் நால் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மோகன்ராஜ், யாசின் முகமது மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் சேர்ந்து பந்தலராஜாவிடம் செல் போனை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து காஞ்சிகோவில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மோகன்ராஜ், யாசின் முகமது ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், 17 வயது சிறுவன் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
Next Story






