என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்ற கூடத்தில் உள்ள மைக்குகள் அமைக்கும் பணி நடந்த போது எடுத்தப்படம்.
    X
    மன்ற கூடத்தில் உள்ள மைக்குகள் அமைக்கும் பணி நடந்த போது எடுத்தப்படம்.

    மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் நாளை பதவியேற்பு

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க்க உள்ளனர். இதனை பொதுமக்கள் பார்க்கும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க்க உள்ளனர். இதனை பொதுமக்கள்  பார்க்கும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு  உள்ளது. 

    ஈரோடு மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கும், பவானி, சத்தியமங்கலத்தில் தலா 27 வார்டுகள், கோபியில் 30 வார்டுகள், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 4 நகராட்சிகளில் 102 வார்டுகளுக்கும்,

    இதேபோல 42 பேரூராட்சிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 21 பேர் உள்ள 608 வார்டுகளுக்கும் என மொத்தம் 790 கவுன்சிலர் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளை தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி கைப்பற்றியது. ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் 43 வார்டுகளில் தி.மு.க. நேரடியாக வெற்றி பெற்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.தி.மு.க. தலா ஒரு இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் என திமுக கூட்டணி கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்று ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
     
    இதையடுத்து  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியே ற்கும் விழா நாளை (2&ந் தேதி) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு நாளை மாநகராட்சி கூட்ட அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. காலை 9.30 மணி அளவில்  கவுன் சிலர்களுக்கு மாநகராட்சி தேர்தல்  அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணை யாளருமான சிவக்குமார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இதற்காக மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கூட்ட அரங்கு சுத்தப் படுத்தப்பட்டு இருக்கைகள் வைக்கப் பட்டன. மாநகராட்சி அலுவ லகம் முன்பு பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் பதவியேற்பு நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்க்கும் வகையில் மாநகராட்சி அலுவலகம் வெளியே பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைத்து பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  விழாவில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பார்கள். 

    இதேபோல் சத்திய மங்கலம், பவானி, கோபி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் நாளை கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு நடைபெறுகிறது. இதேபோல் 42 பேருராட்சி அலுவலக ங்களிலும் அந்தந்த உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நாளை நடைபெறுகிறது. இதனால் அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள் நகராட்சி அலுவலகங்கள் விழாக் கோலம் பூண்டுள்ளது.

    நாளை பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் தான் வரும் 4&ந் தேதி நடைபெறும் மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில் பங்கேற்க முடியும்.

    அதே சமயம் கொரோனா உள்பட பல்வேறு காரணங் களால் நாளை பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாத உறுப்பினர்கள் வரும் 4&ந் தேதி நடைபெறும் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக அரை மணி நேரத்திற்கு முன்பு பதவி ஏற்க வேண்டும்.

     இதைத்தொடர்ந்து 4&ந் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. ஈரோடு மாநகராட்சி மேயர்பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மேயர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வருகின்றனர். இதேப்போல் துணை மேயர் பதவியை பிடிக்கவும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கான விடை வரும் 4&ந் தேதி தெரிந்து விடும்.

    Next Story
    ×