என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காணொலி காட்சியில் பங்கேற்ற மாணவர்கள்.
    X
    காணொலி காட்சியில் பங்கேற்ற மாணவர்கள்.

    ஈரோட்டில் ஏராளமான மாணவ-மாணவிகள் காணொலி காட்சி மூலம் பங்கேற்பு

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
    ஈரோடு:

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில்  நான் முதல்வன்  என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியினை ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் கண்டு பயன்பெறும் வகையில்  எல்.இ.டி.டி.வி, லேப்டாப், ஸ்மார்ட் திரைகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. 

    பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாண வர்களுடன் காணொலி வாயிலான கருத்தரங்கங்கில் பங்கேற்றார்.

    இந்த நிகழ்ச்சியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் எல்.இ.டி., 51 தொலைக் காட்சிகள், 537 லேப்டாப், 81 ஸ்மார்ட் கிளாஸ், 82 எல்.சி.டி. புரஜெக்டர், 111 ஆய்வகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

    இது தவிர இந்த நிகழ்ச்சியை யூடிப் லிங் மூலம் மாணவ&மாணவர்களின் பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 111 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 26 ஆயிரத்து 429 மாணவ- மாணவிகள் அவர்கள் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    இதுதவிர ஈரோடு மாவட்டத்தில் உள்ள 146 தனியார் பள்ளிகளில் இந்த நிகழ்ச்சியை காணும் வகையில் இணையதள இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.

    Next Story
    ×