என் மலர்
ஈரோடு
கோபி அருகே தோட்டத்தில் வேலை செய்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்து.
கோபி:
கோபியை அடுத்த வேங்கிட்டாபுரம், வேட்டுவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி ஜோதி என்கிற ஜோதிமணி(வயது33).
ஜோதிமணி சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கண்ணாடி விரியன்பாம்பு ஒன்று ஜோதிமணியின் வலது காலில் கடித்தது. இதனால் வலியால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து சத்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ஜோதிமணி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தாளவாடி அருகே காதல் திருமணம் செய்து கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தாளவாடி:
ஈரோடும் மாவட்டம் தாளவாடியை அடுத்த திகினாரை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்மா(வயது22).
ரத்தினம்மா திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த ரங்கசாமி என்பவரை 4 வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து 5 மாதத்தில் இறந்தது. இதன் பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதனால் ரத்தினம்மா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று கண்வன்-மனைவிக்கு இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரத்தினம்மா தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்து பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள.

மாநில அளவில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் அணி கலந்து கொள்ளும் சேம்பியன் சிப் கபடி போட்டி நாளை சென்னிமலையில் நடக்கிறது.
சென்னிமலை;
மாநில அளவில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் அணி கலந்து கொள்ளும் சேம்பியன் சிப் கபடி போட்டி நாளை (சனிக்கிழமை) சென்னிமலையில் நடக்கிறது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம், நீலகிரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம், ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியை இணைந்து ராஜீவ் காந்தி கோப்பைக்கான மாநில அளவிலான தமிழ்நாடு துறை சார்ந்த கபடி போட்டியை நடத்துகிறது.
இந்த போட்டி நாளை இரவு 7 மணிக்கு சென்னிமலை அடுத்துள்ள மைலாடி ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் மின் ஒளியில் நடக்கிறது. சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் இரவு மட்டும் நடக்கும்.
இந்த போட்டியில் 9 துறை சார்ந்த அணியினர் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். போட்டிகள் லீக் முறையில் நடக்கிறது. போட்டியினை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில தலைவர் சோலைராஜா தொடங்கி வைக்கிறார். போட்டி தொடக்க விழாவில் மாநில, மாவட்ட கபடி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மக்கள் ராஜன் செய்து வருகிறார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நிலவி வந்த பதட்டம் தணிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் இரு மாநிலங்களிடையே கர்நாடக பஸ்கள் இயக்கப்பட்டன. இரு மாநில சரக்கு வாகனங்கள் இரு மாநிலங்களிடையே பயணிக்க ஏதுவாக புளிஞ்சூர் சோதனைச்சாவடி மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடி திறந்து விடப்பட்டது.
சத்தியமங்கலம்:

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களிடையே 31 நாட்களாக பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது இரு மாநிலங்களிடையே இயல்பு நிலை திரும்பியுள்ளதால் இரு மாநிலங்களிடையே அதிகாரப்பூர்வமாக சரக்கு வாகனப் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. இரு மாநில சரக்கு வாகனங்கள் தமிழகம் கர்நாடகத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கர்நாடகத்தில் இருந்து வந்த சரக்கு வாகனங்கள், பண்ணாரி சோதனைச் சாவடியில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் பிற இடங்களுக்கு சென்றன.
கர்நாடக சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதில் இடையூறுகள் ஏதும் ஏற்படாததால் நேற்று பிற்பகல் முதல் கர்நாடக அரசு பஸ்களை இயக்குவதற்கு சத்தியமங்கலம் போலீசார் அனுமதியளித்தனர்.
இதை தொடர்ந்து மைசூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை, மதுரைக்கு கர்நாடக அரசு பஸ்கள் ஆசனூர், திம்பம் பண்ணாரி வழியாக சத்தியமங்கலம் வந்தன. அங்கிருந்து கோவை, மதுரைக்கு கர்நாடக பஸ்கள் இயக்கப்பட்டன.
தமிழக கர்நாடக இடையே மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளதால் மாநில எல்லையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

சித்தோடு அருகே ரோட்டோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஈரோடு:
பெருந்துறையிலிருந்து சித்தோடுக்கு கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும் முட்டுக் கட்டைகள் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. சித்தோடு அருகே ஆட்டையம்பாளையம் பக்கம் வந்தபோது டயர் பஞ்சரானது. இதனால் லாரியை ரோட்டோரம் நிறுத்தி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த வழியாக ஆட்டையாம் பாளையத்தை சேர்ந்த ரவி (வயது 53) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னால் அவரது நண்பர் உட்கார்ந்திருந்தார்.
இந்த நிலையில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் எதிர் பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ரவி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் உட்கார்ந்திருந்த அவரது நண்பர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பலியான ரவி உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆசனூர் அருகே ரோட்டில் நடமாடும் யானைகள் கூட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூரில் நூற்றுக் கணக்கான யானைகள் வசித்து வருகிறது. வனப்பகுதியில் போதி மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வன விலங்குகள் இரை தேடியும் தண்ணீர் தேடியும் வெளியே நடமாட தொடங்கி உள்ளது.
ஆசனூர் அருகே கர்நாடக மாநில எல்லையையொட்டி உள்ள (தாளவாடி செல்லும் வழி) காரப்பள்ளம் என்ற இடத்தில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் ரோட்டோரம் நடமாடுகிறது.
சுமார் 7 யானைகள் ரோட்டோரம் உள்ள மரக்கிளை முறித்து ஒடித்து சாப்பிடுகிறது. இதில் சில யானைகள் ரோட்டின் மத்தியிலும் நடமாடுகிறது. யானைகள் ரோட்டில் நடமாடுவதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த யானைகள் கூட்டம் இரவு மற்றும் பகல் நேரத்திலும் ரோட்டில் சுற்றி திரிவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும் யானைகளை பார்க்கும் ஆர்வத்தில் வாகனங்களிலிருந்து யாரும் இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

ஈரோடு அருகே மருத்துவம் படிக்க இடம்கிடைத்தும் படிக்கமுடியாத ஏழை மாணவி உதவி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை அடுத்த மைலாடி ஊரைச் சேர்ந்தவர் சின்னசாமி. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பிரித்தி (வயது 18).
மாணவி பிரித்தி கோபியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்தார். 1088 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.
சென்னையில் நடந்த 2-ம்கட்ட மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பிரித்தி கலந்து கொண்டார். அவருக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.
கல்லூரியில் சேர்ந்து படிக்க கல்லூரி கட்டணம் மற்றும் இதர கட்டணம் என 6 லட்ச ரூபாய் தேவை பட்டதாம். ஏழை விவசாய கூலி தொழிலாளியின் மகளான பிரித்தியால் இவ்வளவு பணத்தை புரட்ட முடியவில்லை.
இந்த நிலையில் மாணவி பிரித்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
ஏழை விவசாய தொழிலாளி மகளான எனக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படிக்க ரூ.6 லட்சம் தேவைபடுகிறது. அவ்வளவு பணத்தை கூலி தொழிலாளியான என் தந்தையால் புரட்டமுடியாது. இதனால் மருத்துவம் படிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் உள்ளேன்.
நான் படித்து டாக்டர் ஆகிவிட்டால் என்னைப் போல் ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன் என மருத்துவ படிப்புக்கு உதவி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாணவி பிரித்தி அந்த மனுவில் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

கர்நாடகாவுக்கு 30 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து பஸ்கள்-லாரிகள் இன்று காலை 10 மணி முதல் இயக்கப்பட்டன. அதே போல கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பஸ்கள்-லாரிகள் தமிழகத்துக்கு வந்து சென்றன.
ஈரோடு:
காவிரி பிரச்சினை யொட்டி தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு சென்ற பஸ்கள்-லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதுடன் கர்நாடகாவில் உள்ள தமிழர்களும் தாக்கப்பட்டனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள்-லாரிகள் நிறுத்தப்பட்டன. ஈரோட்டில் இருந்து சரக்குகளை ஏற்றி சென்ற 10 லாரிகளுக்கு கர்நாடகாவில் வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இருப்பினும் கர்நாடகாவில் இருந்து லாரிகள்-பஸ்கள் வழக்கம் போல தமிழகத்துக்கு வந்து சென்றன. இந்த நிலையில் ஈரோடு லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் தமிழகத்திலும் கர்நாடக மாநில லாரிகள் தாக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் ஈரோடு, அந்தியூர், பவானி போன்ற பல்வேறு பகுதிகளில் கர்நாடக லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டன. இது போன்ற சம்பவங்களினால் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் மற்றும் தமிழகத்துக்கு வரும் லாரிகள்-பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
கர்நாடகத்துக்கு பஸ்கள் ஓடாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கர்நாடகத்துக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளும், கர்நாடகம் வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளும் ஓடாததால் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்தன.
இதன் காரணமாக லாரி டிரைவர்களும், கிளீனர்களும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் போதிய வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் மைசூரில் இருந்து நேற்று கோவைக்கு சத்திய மங்கலம் வழியாக கர்நாடக பஸ் புறப்பட்டு வந்தது.
இந்த பஸ் தமிழக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வந்தபோது தமிழக போலீசார் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தினர். இந்த பஸ்சை திம்பம் வரை மட்டுமே இயக்க போலீசார் அனுமதித்தனர். இதன் காரணமாக திம்பம் வரை சென்ற கர்நாடக பஸ் அங்கு பயணிகளை இறக்கி விட்டு திரும்பி சென்றது.
இதற்கிடையே கர்நாடகாவில் இப்போது சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் கர்நாடகா-தமிழக பஸ்கள் மற்றும் லாரிகளை இன்று முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆசனூரில் முகாமிட்டு கர்நாடக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினார். இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் இரு மாநில வாகனங்களை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் காரணமாக 30 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து பஸ்கள்-லாரிகள் இன்று காலை 10 மணி முதல் இயக்கப்பட்டன. அதே போல கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பஸ்கள்-லாரிகள் தமிழகத்துக்கு வந்து சென்றன.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இன்று முதல் லாரிகள் ஓடிய தால் வேலை இல்லாமல் தவித்த டிரைவர்கள்-கிளீனர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சந்தோஷத்தில் மிதந்தனர்.

அந்தியூர் அருகே கர்நாடகா லாரிக்கு தீ வைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெருமாள்பாளையத்தை சேர்ந்த சித்தேஸ்வரன், சிவமூர்த்தி ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.
அந்தியூர்:
கர்நாடகா மாநிலம் கொள்ளாகால் மாவட்டம் ராமபுரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். லாரி உரிமையாளர்.
இவருக்கு சொந்தமான லாரியில் வாடகைக்கு டிரைவரை அமர்த்தி கடந்த மாதம் கர்நாடகாவில் இருந்து பெருந்துறைக்கு மக்காசோளம் ஏற்றி இறக்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தது.
ஆப்பக்கூடல் நால்ரோடு வந்த போது காவிரி பிரச்சனை காரணமாக பதற்றமான சூழ்நிலை இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் லாரியை டிரைவர் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மாதேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தார்.
மாதேஸ்வரன் அங்கு விரைந்து வந்தார். பின்னர் டிரைவரை அனுப்பி விட்டு அன்று இரவு தானே லாரியை ஓட்டி கொண்டு சென்றார். பர்கூர் மலை பகுதி வழியாக கர்நாடகா செல்ல திட்டமிட்டு அந்தயூர் கெட்டிசமுத்திரம் ஏரி அருகே லாரியுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை லாரி சீட்டில் ஊற்றி தீ வைத்தனர். இதை அணைக்க முயன்ற மாதேஸ்வரனுக்கு தீ காயம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களும், போலீசும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவின் பேரில் பவானி துணை கண்காணிப்பாளர் ஜானகிராமன் மேற்பார்வையில் பவானி இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணையில் அந்தியூர் கொல்லபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெரியார்நகரை சேர்ந்த லோகநாதன், பூனாச்சி பகுதியை சேர்ந்த கோகுல், நஞ்சமடைகுட்டை பகுதியை சேர்ந்த மணி என்கிற குப்புசாமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பெருமாள் பாளையத்தை சேர்ந்த சித்தேஸ்வரன், சிவமூர்த்தி ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

சிவகிரி அருகே டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி ரூ. 3 லட்சம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிவகிரி:
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரியை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி (வயது 43). இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று இரவு 10.15 மணி அளவில் வழக்கம் போல டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் டாஸ்மாக் கடையில் விற்பனையான பணம் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்திருந்தார்.
டாஸ்மாக் கடையில் இருந்து சிறிது தூரம் சென்று கொண்டிருந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முத்துக்குமாரசாமியை வழி மறித்தனர். அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி முத்துக்குமாரசாமியிடம் இருந்த பணத்தை கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் முத்துக்குமாரசாமி கழுத்தில் அரிவாளை வைத்து அவர் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இச்சம்பவம் குறித்து சிவகிரிபோலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் மாரிஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி உள்ளார்களா? என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.
டாஸ்மாக் ஊழியர் முத்துகுமாரசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ளோடு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து பலியானார்.
ஈரோடு:
வெள்ளோடு அடுத்த கருக்கன் காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது65). முருகன் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலிக்கு சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முருகன் சம்மபவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடித்து வீட்டின் முன்பு அரளிவிதை அரைத்து குடித்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பு.புளியம்பட்டி அருகே மழை வேண்டி சிறிய கற்களுக்கு வெள்ளையடித்து சிவப்பு நிற புள்ளி வைத்து வீட்டில் வைத்து பூஜைகள் நடத்தி பொதுமக்கள் வழிபட்டனர்.
பு.புளியம்பட்டி:
பருவமழை பொய்த்ததால் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் கடும் வறட்சியில் சிக்கி தவிக்கிறது.
இதனால் இப்பகுதியில் மானாவாரி பயிராக பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, தீவனசோளம் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்துவிட்டதால் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். கால்நடைகளுக்கும் தீவனத் தட்டுப்பாடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்லூர் கிராமத்தில் மழை வேண்டி விநோத வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கிராமத்தில் உள்ள பொட்டுசாமி, மினிசாமி, எல்லையப்பன் ஆகிய இஷ்ட தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து சிறிய கற்களில் வெள்ளையடிக்கப்பட்டு சிவப்பு நிற புள்ளிகள் வைக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் அந்த கற்கள் கொடுக்கப்பட்டது. கற்களை வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் சிறுதானிய உணவுகள் தயார் செய்யப்பட்டது.
தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் வெள்ளையடிக்கப்பட்ட கற்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு 3 தெய்வங்களுக்கும் படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவருக்கும் படையலிடப்பட்ட உணவுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
40 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற வழிபாடு நடத்தியதால் மழை பெய்ததாகவும் இக்கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் கூறினர்.