என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளோடு அருகே வி‌ஷம் குடித்து முதியவர் பலி
    X

    வெள்ளோடு அருகே வி‌ஷம் குடித்து முதியவர் பலி

    வெள்ளோடு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் வி‌ஷம் குடித்து பலியானார்.

    ஈரோடு:

    வெள்ளோடு அடுத்த கருக்கன் காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது65). முருகன் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலிக்கு சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முருகன் சம்மபவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடித்து வீட்டின் முன்பு அரளிவிதை அரைத்து குடித்துள்ளார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×