என் மலர்
செய்திகள்

காதல் திருமணம் செய்து கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தற்கொலை
தாளவாடி அருகே காதல் திருமணம் செய்து கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தாளவாடி:
ஈரோடும் மாவட்டம் தாளவாடியை அடுத்த திகினாரை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்மா(வயது22).
ரத்தினம்மா திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த ரங்கசாமி என்பவரை 4 வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து 5 மாதத்தில் இறந்தது. இதன் பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதனால் ரத்தினம்மா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று கண்வன்-மனைவிக்கு இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரத்தினம்மா தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்து பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள.

Next Story