என் மலர்
செய்திகள்

சித்தோடு அருகே நின்ற லாரி மீது பைக் மோதி ஒருவர் பலி
சித்தோடு அருகே ரோட்டோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஈரோடு:
பெருந்துறையிலிருந்து சித்தோடுக்கு கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும் முட்டுக் கட்டைகள் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. சித்தோடு அருகே ஆட்டையம்பாளையம் பக்கம் வந்தபோது டயர் பஞ்சரானது. இதனால் லாரியை ரோட்டோரம் நிறுத்தி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த வழியாக ஆட்டையாம் பாளையத்தை சேர்ந்த ரவி (வயது 53) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னால் அவரது நண்பர் உட்கார்ந்திருந்தார்.
இந்த நிலையில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் எதிர் பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ரவி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் உட்கார்ந்திருந்த அவரது நண்பர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பலியான ரவி உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story