என் மலர்tooltip icon

    செய்திகள்

    இயல்பு நிலை திரும்பியது - சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா பஸ்கள் ஓடியது
    X

    இயல்பு நிலை திரும்பியது - சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா பஸ்கள் ஓடியது

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நிலவி வந்த பதட்டம் தணிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் இரு மாநிலங்களிடையே கர்நாடக பஸ்கள் இயக்கப்பட்டன. இரு மாநில சரக்கு வாகனங்கள் இரு மாநிலங்களிடையே பயணிக்க ஏதுவாக புளிஞ்சூர் சோதனைச்சாவடி மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடி திறந்து விடப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களிடையே 31 நாட்களாக பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தற்போது இரு மாநிலங்களிடையே இயல்பு நிலை திரும்பியுள்ளதால் இரு மாநிலங்களிடையே அதிகாரப்பூர்வமாக சரக்கு வாகனப் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. இரு மாநில சரக்கு வாகனங்கள் தமிழகம் கர்நாடகத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கர்நாடகத்தில் இருந்து வந்த சரக்கு வாகனங்கள், பண்ணாரி சோதனைச் சாவடியில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் பிற இடங்களுக்கு சென்றன.

    கர்நாடக சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதில் இடையூறுகள் ஏதும் ஏற்படாததால் நேற்று பிற்பகல் முதல் கர்நாடக அரசு பஸ்களை இயக்குவதற்கு சத்தியமங்கலம் போலீசார் அனுமதியளித்தனர்.

    இதை தொடர்ந்து மைசூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை, மதுரைக்கு கர்நாடக அரசு பஸ்கள் ஆசனூர், திம்பம் பண்ணாரி வழியாக சத்தியமங்கலம் வந்தன. அங்கிருந்து கோவை, மதுரைக்கு கர்நாடக பஸ்கள் இயக்கப்பட்டன.

    தமிழக கர்நாடக இடையே மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளதால் மாநில எல்லையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
    Next Story
    ×