என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூஜையில் வைக்கப்பட்ட சிறிய சிறிய கற்கள்.
    X
    பூஜையில் வைக்கப்பட்ட சிறிய சிறிய கற்கள்.

    பு.புளியம்பட்டி அருகே மழை வேண்டி பொதுமக்கள் நூதன வழிபாடு

    பு.புளியம்பட்டி அருகே மழை வேண்டி சிறிய கற்களுக்கு வெள்ளையடித்து சிவப்பு நிற புள்ளி வைத்து வீட்டில் வைத்து பூஜைகள் நடத்தி பொதுமக்கள் வழிபட்டனர்.
    பு.புளியம்பட்டி:

    பருவமழை பொய்த்ததால் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் கடும் வறட்சியில் சிக்கி தவிக்கிறது.

    இதனால் இப்பகுதியில் மானாவாரி பயிராக பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, தீவனசோளம் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்துவிட்டதால் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். கால்நடைகளுக்கும் தீவனத் தட்டுப்பாடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்லூர் கிராமத்தில் மழை வேண்டி விநோத வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கிராமத்தில் உள்ள பொட்டுசாமி, மினிசாமி, எல்லையப்பன் ஆகிய இஷ்ட தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



    தொடர்ந்து சிறிய கற்களில் வெள்ளையடிக்கப்பட்டு சிவப்பு நிற புள்ளிகள் வைக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் அந்த கற்கள் கொடுக்கப்பட்டது. கற்களை வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் சிறுதானிய உணவுகள் தயார் செய்யப்பட்டது.

    தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் வெள்ளையடிக்கப்பட்ட கற்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு 3 தெய்வங்களுக்கும் படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவருக்கும் படையலிடப்பட்ட உணவுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    40 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற வழிபாடு நடத்தியதால் மழை பெய்ததாகவும் இக்கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் கூறினர்.
    Next Story
    ×