என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே தோட்டத்தில் வேலை செய்த பெண் பாம்பு கடித்து சாவு
    X

    கோபி அருகே தோட்டத்தில் வேலை செய்த பெண் பாம்பு கடித்து சாவு

    கோபி அருகே தோட்டத்தில் வேலை செய்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்து.
    கோபி:

    கோபியை அடுத்த வேங்கிட்டாபுரம், வேட்டுவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி ஜோதி என்கிற ஜோதிமணி(வயது33).

    ஜோதிமணி சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கண்ணாடி விரியன்பாம்பு ஒன்று ஜோதிமணியின் வலது காலில் கடித்தது. இதனால் வலியால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து சத்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ஜோதிமணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×