என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்காக காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்வது வழக்கம்.
    • இன்று காலை 8 மணியிலி ருந்து 9 மணி வரை அரசு பஸ்கள் வராததால் பஸ்சு க்காக காத்திருந்த மாண வர்கள் வேறு வழியின்றி ஆட்டோ பிடித்து வேக வேகமாக பள்ளியை நோக்கி சென்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் வத்தலகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பாலிடெக்னிக், பட்டிவீரன்பட்டி, அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்காக காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்வது வழக்கம்.

    ஆனால் கடந்த சில நாட்க ளாகவே போதிய நேரத்தில் பஸ்கள் வராததால் மாண வர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இன்று காலை 8 மணியிலி ருந்து 9 மணி வரை அரசு பஸ்கள் வராததால் பஸ்சு க்காக காத்திருந்த மாண வர்கள் வேறு வழியின்றி ஆட்டோ பிடித்து வேக வேகமாக பள்ளியை நோக்கி சென்றனர். இதில் சில மாணவர்கள் ஆட்டோ விற்கு காசு இல்லாமல் சக மாணவர்களிடம் கடன் கேட்டு வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    நிலக்கோட்டையில் சமீப காலமாகவே இது போன்ற அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோ ர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து ஆட்டோக்க ளில் பயணிக்கும் நிலை தொடர்ந்தால் கிராமப்புற ங்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படு வார்கள். நிலக்கோட்டை மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து ஊழியர் பற்றாக்குறையால் இது போன்ற நிலை தொடர்வ தாக பொதுமக்கள் தெரி விக்கின்றனர். எனவே போக்குவரத்து கழக அதிகாரி கள் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • ஆடி-18ஐ முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் இன்றே விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு நாளை ஆடி-18ஐ முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்றே விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதே போல் வியாபாரிகள் மற்றும் லோடு மேன்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பலர் தங்கள் குழந்தையை ஏலத்தில் கொடுத்து அதனை பெற்றோர்களே வாங்கிக் கொண்டனர்.
    • சமைக்கப்பட்ட சாதம் கோவில் வளாகத்தில் உள்ள கூடத்தில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறத்தில் உள்ள முத்தழகுபட்டியில் 350 ஆண்டுகள் பழமையான புனித செபஸ்தியார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 4 நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருட திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    3-ம் நாள் திருவிழாவாக மாபெரும் அன்னதானம் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய நடந்து இன்று அதிகாலை நிறைவடைந்தது. செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை செபஸ்தியார் நிறைவேற்றி தந்ததை அடுத்து அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களால் முடிந்த காணிக்கையாக அரிசி, பருப்பு, ஆடு, கோழி, தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்கள் ஆகியவற்றை செலுத்தினர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக குழந்தை வரம் கேட்டு செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைக்கும் தம்பதியினர் அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் திருவிழாவின்போது அந்தக் குழந்தையை கோவிலில் ஒப்படைத்து விடுவார்கள். பின்னர் அந்த குழந்தை கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படும். அதில் கலந்து கொள்பவர்கள் குழந்தையை ஏலம் எடுத்து அதற்கான தொகையை கோவிலில் செலுத்துவார்கள். பின்னர் ஏலம் எடுத்தவரிடம் இருந்து குழந்தையின் தாய் தந்தையர் ஏலத்தொகையை கொடுத்து வாங்கி கொள்வார்கள். அது போல் கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பலர் தங்கள் குழந்தையை ஏலத்தில் கொடுத்து அதனை பெற்றோர்களே வாங்கிக் கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து விடிய விடிய நடந்த அன்னதானத்தில் முத்தழகுபட்டியில் உள்ள இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைவரும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து அன்னதானத்திற்கான காய்கறிகளை நறுக்குவது சமையல் செய்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளில் ஈடுபட்டனர்.

    சமைக்கப்பட்ட சாதம் கோவில் வளாகத்தில் உள்ள கூடத்தில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தது. அன்னதானத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கும் உணவை வாங்கிச் சென்றனர்.

    • நீர்வீழ்ச்சி அருகே பச்சை பாம்பு ஒன்று திடீரென புகுந்தது.
    • தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அப்பகுதியில் இருந்த விஷத்தன்மை அதிகம் கூடிய பச்சைப்பாம்பை பிடித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதி பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது. இதில் கொடைக்கானல் நுழைவாயில் பகுதியாக வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பிரதான சாலையில் அமைந்துள்ளது.

    இந்தப் பகுதியில் நீர்வீழ்ச்சி அருகே பச்சை பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அப்பகுதியில் இருந்த விஷத்தன்மை அதிகம் கூடிய பச்சைப்பாம்பை பிடித்தனர். மேலும் பிடிப்பட்ட பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக தேரில் சவுந்தரராஜ பெருமாள் சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் எழுந்தருளி வீதி உலா வந்துமீண்டும் சன்னதியை வந்தடைந்தது.
    • நாளை (வியாழக்கிழமை) மாலை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்துருளி வீதி உலா வந்தார். கடந்த 30ம் தேதி மாலை சவுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதையடுத்து சுவாமி திருமண கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை தாடிக்கொம்பு சண்முகவேல் மில்ஸ் குழும தலைவர்கள் வேலுச்சாமி கவுண்டர், கந்தசாமி கவுண்டர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகளான தேரோடும் வீதி, அண்ணாநகர், சந்தை திடல், வடக்கு தெரு, நடுத்தெரு வழியாக தேரில் சவுந்தரராஜ பெருமாள் சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் எழுந்தருளி வீதி உலா வந்துமீண்டும் சன்னதியை வந்தடைந்தது.

    இதில் தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், தாடிக்கொம்பு தி.மு.க. பேரூர் செயலாளர் ராமலிங்கசாமி, அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணைத் தலைவர் ஜெயபால், தொழில் அதிபர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாளை (வியாழக்கிழமை) மாலை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சந்தனம்மாள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்தனர். ஆடித் திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நத்தம் போலீசார் முறையாக அனுமதி பெறாமல் சிலை வைக்கபட்டதாக கூறி ஜே.சி.பி. எந்திரம் மூலம் சிலையை அகற்றினர்.
    • இச்சம்பவம் தொடர்பாக வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட 42 பேர் மீது நத்தம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட எர்ரம்பட்டியில் கடந்த 2016-ம் ஆண்டு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் முத்தரையர் சிலை வைக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் முறையாக அனுமதி பெறாமல் சிலை வைக்கபட்டதாக கூறி ஜே.சி.பி. எந்திரம் மூலம் சிலையை அகற்றினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட 42 பேர் மீது நத்தம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று நத்தம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    இதில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட 42 பேரும் நீதிபதி முன்பு ஆஜராகினர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நத்தம் நீதிபதி உதயசூரியா வருகிற 5-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • பல இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இந்த நிலையில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் குள்ளனம்பட்டி அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் பெருக்கெடுத்து வீணாக ஓடுகிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவையை ஆத்தூர் காமராஜர் அணை பூர்த்தி செய்து வருகிறது. மேலும் தடை இல்லா குடிநீர் வழங்க கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் ராட்சத குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. வடமதுரை, எரியோடு, கோவிலூர், தாடிக்கொம்பு, பாளையம் வழியாக திண்டுக்கல், நத்தம் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் குள்ளனம்பட்டி அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் சாலை ஓரத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் பெருக்கெடுத்து வீணாக ஓடுகிறது.

    இதனால் சாலையின் ஓரத்தில் இந்த நீர் தேங்கி பாசான் படர்ந்து காணப்படுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.இது குறித்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.ஆனால் தற்போது வரை சீரமைக்கப்படாததால் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியவில்லை. குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரியும் நிலையில் குடிநீர் வீணாகி செல்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    • இதே ஊரைச் சேர்ந்த ஈராக் நாட்டில் வேலை பார்க்கும் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது உங்கள் கணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
    • கோகிலா தனது கணவரின் இறப்பிற்கான காரணமும், இறந்த தனது கணவரின் உடலை இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளித்தார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மூங்கில் பட்டியைச் சேர்ந்தவர் பதினெட்டாம் மகன் சின்னையா (வயது 45) . கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் மாரிச்செல்வம் (வயது 14), கவிவரதன் (வயது 11), பிரநிஷா (வயது 5) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈராக் நாட்டில் கம்பி கட்டும் வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரது மனைவி கோகிலாவிடம் பேசிய பின்னர் தூங்கச் சென்று விட்டார். பின்னர் அதிகாலை 4 மணி அளவில் கோகிலாவின் வாட்ஸ் அப் நம்பருக்கு சின்னையா என்பவர் பேசி அனுப்பிய வீடியோ ஒன்று வந்துள்ளது.

    இதை காலை 6 மணி அளவில் பார்த்த மனைவி கோகிலா மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார். உடனடியாக அவரது செல் போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பதட்டம் அடைந்த கோகிலா இதே ஊரைச் சேர்ந்த ஈராக் நாட்டில் வேலை பார்க்கும் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது உங்கள் கணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கோகிலா தனது கணவரின் இறப்பிற்கான காரணமும், இறந்த தனது கணவரின் உடலை இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியும் நத்தம் வட்டாட்சியரிடம் மனு அளித்தார். இச்சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காலை 9 மணிக்கு டோக்கன் வழங்கும் பணியை தொடங்கி வெறும் 30 பேருக்கு மட்டுமே ஆதார் பணிகள் மேற்கொள்கின்றனர்.
    • மற்றவர்களை மறு நாள் வரச் சொல்லி விட்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வேறு ஒரு நாளுக்கு வருமாறு கூறுகின்றனர்.

    நிலக்கோட்டை:

    இந்தியா முழுவதும் ஒரே அடையாளமாக ஆதார் அட்டை விளங்குகிறது. இந்த ஆதார் அட்டை தற்போது ஒரு மனிதனின் முக்கிய அங்கமாக பள்ளி யில் படிப்பதற்கும், வங்கி கணக்கு தொடங்குவதற்கும், ரேஷன் கார்டில் இடம்பெ யர்வதற்கு என அனைத்து பணிகளுக்கும் முக்கியமாக கருதப்படுகிறது. தற்போது மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ஆதார் அட்டை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பெரும்பாலான குடும்ப தலைவிகள் ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, ரேசன் கார்டு ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு சமர்ப்பித்து வருகின்றனர். ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காகவும், இ-சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் திரண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது நிலக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் ஆதார் திருத்தங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் முதியோர்கள் என அனைவரும் ஆதார் அட்டை புதிதாக எடுப்பதற்கும், திருத்தங்கள் செய்வதற்கும் காலை 7 மணி முதல் குவியத் தொடங்கி வருகின்றனர்.

    இதனால் நிலக்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு கூட்டம் அலை மோதி வருகிறது. காலை 9 மணிக்கு டோக்கன் வழங்கும் பணியை தொடங்கி வெறும் 30 பேருக்கு மட்டுமே ஆதார் பணிகள் மேற்கொள்கின்றனர். மற்றவர்களை மறு நாள் வரச் சொல்லி அலைக்கழிக்கின்றனர். மறு நாள் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வேறு ஒரு நாளுக்கு வருமாறு கூறுகின்றனர்.

    ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த சுவனேசன் என்ற பள்ளி மாணவன் கூறியதாவது:-

    நான் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு விடுப்பு எடுத்து ஆதார் அட்டையை புதுப்பிப் பதற்காக அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அலைக்கழிக்கின்றனர். எனவே ஆதார் சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும். சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் ஆதார் திருத்தத்துக்காக வந்து செல்வதால் பாடங்களை தொடர்ந்து கவனிக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காண பள்ளியிலேயே இ-சேவை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கோவில் சார்ந்த அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பை தடுக்க அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டதால் பக்தர்கள் எளிதில் சென்று வருகின்றனர்.
    • கிரவீதிகளில் தடுப்புகள் வைப்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறினர்.

    பழனி:

    பழனி கிரிவீதிகளில் பஞ்சாமிர்த கடைகள், ஓட்டல்கள், அலங்கார பொருள் விற்பனை கடைகள் பல உள்ளன. பழனிக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக சபரிமலை சீசன் காலத்தில் கிரிவீதிகளில் கூட்டம் அலைமோதி காணப்படும். வியாபாரமும் களைகட்டும். அதேபோல் பழனி வடக்கு கிரிவீதியில் உள்ள கோவில் முடிமண்டபம், நூலகம், பொருட்கள் வைப்பறை, தகவல் மையம் ஆகியவை உள்ளன. இங்கும் பக்தர்கள் வந்து பயனடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவில் சார்ந்த அலுவலகங்கள் முன்பு பக்தர்களுக்கு இடையூறாக பல்வேறு கடைகள் வைத்து ஆக்கிர மிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில் சார்ந்த அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பை தடுக்க அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் அங்கு பக்தர்கள் எளிதில் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கோவில் அலுவலகம் முன்பு தடுப்பு கள் வைக்கப்பட்டதற்கு அங்குள்ள சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது கிரவீதிகளில் தடுப்புகள் வைப்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்க ப்படுவதாக கூறினர். இதற்கிடையே நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் அங்கு வந்து கிரிவீதியில் வைக்கப்பட்டு உள்ள தடுப்புகளை பார்வை யிட்டனர். அப்போது சாலையோர வியாபாரிகள் அங்கு வந்து வியாபாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

    • சாணார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (2ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    சாணார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (2ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் தண்ட க்கல்பட்டி, உரிமைக்காரன் பட்டி, இந்திராநகர், கொல்ராம்பட்டி, சிறுமலை அடிவாரம், மலைமாதா கோவில், கல்னூத்தம்பட்டி, கல்லுப்பட்டி, கரட்ட ழகன்பட்டி, மூர்த்தி நாய க்கன்பட்டி, சிறுநாயக்கன் பட்டி, ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறி யாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • கோவில் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து சோதனை நடத்தியதில் இளம்பெண்னின் தந்தை கூறியது பொய் எனவும், அர்ச்சகர் வீடியோ எடுத்ததை மட்டுமே கண்டித்துள்ளார் எனவும் உறுதியானது.
    • இளம்பெண் மற்றும் அவரது தந்தையிடம் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் அரிய வகை நவ பாஷாணத்தால் உருவாக்கப்பட்ட மூலரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் தனது மகளுடன் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவரது மகள் செல்போனை மறைவாக வைத்து மூலவரை படம் பிடித்துள்ளார். இதையறிந்த கோவில் அர்ச்சகர் அதை கண்டித்துள்ளார். அதனை கேட்காமல் அந்த பெண் தொடர்ந்து படம் எடுக்க முயன்றதால் அர்ச்சகர் செல்போனை வாங்கி அதில் அவர் வீடியோவாக எடுத்த கோவில் நிகழ்ச்சிகள் குறித்து கூறி கண்டித்துள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் அந்த பெண்ணின் தந்தை கோவில் அர்ச்சகரிடம் நீங்கள் எப்படி செல்போனை வாங்கி பார்க்கலாம்? எனது மகளை தொட்டு பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நான் உங்களை போக்சோ சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    அதன் பிறகு கோவில் கண்காணிப்பளரிடமும் இது குறித்து அவர் புகார் அளித்தார். இதனையடுத்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு கோவில் கண்காணிப்பு ேகமராவில் பதிவான காட்சிகளை வைத்து சோதனை நடத்தியதில் ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண்னின் தந்தை கூறியது பொய் எனவும், அர்ச்சகர் வீடியோ எடுத்ததை மட்டுமே கண்டித்துள்ளார் எனவும் உறுதியானது.

    இதனைத் தொடர்ந்து அர்ச்சகரை மிரட்டிய இளம்பெண் மற்றும் அவரது தந்தையிடம் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து அனுப்பி வைத்தனர். இதனிடையே ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் அர்ச்சகரிடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    பழனி மலைக்கோவிலில் செல்போன்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதனையும் மீறி பக்தர்கள் செல்போன்களை மலைக்கோவிலுக்கு கொண்டு வருதும், மூலவருக்கு நடைபெறும் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை படம் பிடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதே போல் இரவில் தங்கத் தேரோட்டம் நடைபெறும் போதும் பக்தர்கள் செல்போனில் படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுடன் வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது. எனவே மலைக்கோவிலுக்கு செல்போன்கள் கொண்டு வருவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் வழிகாட்டிகள் என கூறிக் கொண்டு அவதூறு பரப்பும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×