என் மலர்
நீங்கள் தேடியது "drinking water was flowing"
- பல இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்த நிலையில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் குள்ளனம்பட்டி அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் பெருக்கெடுத்து வீணாக ஓடுகிறது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவையை ஆத்தூர் காமராஜர் அணை பூர்த்தி செய்து வருகிறது. மேலும் தடை இல்லா குடிநீர் வழங்க கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் ராட்சத குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. வடமதுரை, எரியோடு, கோவிலூர், தாடிக்கொம்பு, பாளையம் வழியாக திண்டுக்கல், நத்தம் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் குள்ளனம்பட்டி அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் சாலை ஓரத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் பெருக்கெடுத்து வீணாக ஓடுகிறது.
இதனால் சாலையின் ஓரத்தில் இந்த நீர் தேங்கி பாசான் படர்ந்து காணப்படுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.இது குறித்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.ஆனால் தற்போது வரை சீரமைக்கப்படாததால் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியவில்லை. குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரியும் நிலையில் குடிநீர் வீணாகி செல்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.






