என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • 10 மாதமாக அவருக்கு சம்பளம் வழங்கவில்லை.
    • எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுப்பட்டி கிராமத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து பணி முடிந்து சொந்த ஊரான வாச்சாத்திக்கு வந்தவர் சம்பவத்தன்று எலி மருந்தை சாப்பிட்டு உள்ளார். இது குறித்து கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் உறவினர்கள் விசாரித்தபோது , அடிக்கடி அவரை இட மாற்றம் செய்ததாகவும், 10 மாதமாக அவருக்கு சம்பளம் வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

    மேலும் இதனால் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து மனவி ரக்தியில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்க ரையில் உள்ள மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து அதனை தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அதனை தொடர்ந்து சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது மகன் தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கோபிநா தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிளான போட்டிக்கு தேர்வு செய்யபட்டனர்.
    • ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான சீனியர் பிரிவு கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிளான போட்டிக்கு தேர்வு செய்யபட்டனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் பழனிதுரை, சங்கர், முருகேசன், வெங்கடேசன் ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    • மாடு, நாட்டுக்கோழி ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • ஆடுகள் ரூ. 5,200 முதல் ரூ.9,700 வரையும் விற்பனை ஆனது.

     அரூர், 

    அரூர் அடுத்த கோபிநா தம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால் நடைகளை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடு ரூ. 8,000 முதல் ரூ. 42,500 வரையும். ஆடுகள் ரூ. 5,200 முதல் ரூ.9,700 வரையும் விற்பனை ஆனது. நேற்றைய சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு கால்ந டைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவி த்தனர்.                                                                                           

    • அலுவலகத்தில் எஸ். பி ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமையில் நடை பெற்றது.
    • 92 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் நிலத்தகராறு, அடிதடி, பணப்பிரச்சனை,குடும்ப தகராறு உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ். பி ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமையில் நடை பெற்றது.

    வாராந்திர பொது மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மொத்தம் 106 மனு பெறப்பட்டு அதில் 92 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 14 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல்துறை கண்கா ணிப்பாளர் ராமச்சந்திரன், காவல் ஆய்வா ளர்கள் அன்பழ கன்,ஷர்மிளா பானு, ரங்கசாமி, மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலையின் ஓரத்தில் நிறுத்தியிருந்த 30 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
    • புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரில் மேல் பாட்சாபேட்டை, கீழ்பாட்சாபேட்டை, அசோகா பட்டறை முருகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில், சாலையின் ஓரத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ, ஈச்சர், பிக்கப் வேன் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை மர்மநபர் உடைத்து சேதப்படுத்தினார்.

    இதனால் இப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சத்தை உருவாக்கியது. இந்நிலையில் அரூர் நகரம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்ததில், மர்மநபர் ஒருவர் நடமாட்டத்தை வைத்து அவர் யார் என்பதை அறிந்தனர். இதனை தொடர்ந்து அவரை வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் அரூர் கே.கே நகர் சுடுகாடு மேடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்பவருடைய மகன் வேலு என தெரியவந்தது.

    இவர் நள்ளிரவு நேரத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் அந்த பகுதியில் சுற்றி திரிந்ததாகவும் சாலையின் ஓரத்தில் நிறுத்தியிருந்த 30 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனையடுத்து அவரை கைது தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வாலிபர் ஒரு காரின் கண்ணாடியை உடைக்கும் சிசிடிவி காட்சி பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்களது வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார், இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து இருப்பதை கண்டு வாகனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரூர்:

    அரூர் பகுதியில் நேற்று இரவு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள், முகப்பு விளக்குகளை மர்மநபர்கள் சிலர் உடைத்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதியில் உறைந்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள மேல்பாட்சா பேட்டை, கீழ்பாட்சாபேட்டை, அசோகா பட்டறை, தில்லை நகர், முருகன் கோவில் தெரு, சுடுகாடு மேடு உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    வாகனங்களின் உரிமையாளர்கள் இன்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது தங்களது வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார், இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்கள், வேன், கார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவற்றின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து சென்று உள்ளனர்.

    எதற்காக உடைத்து சென்றனர். அவர்கள் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போரீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்தனர். பின்பு பாதிக்கப்பட்டவர்கள் அரூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்மநபர்களால் வாகனங்களின் கண்ணாடி உடைப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சென்ன கேசவப் பெருமாள் கோவிலில் வன்னிமரம் குத்துதல் திருவிழா நடந்தது.
    • வன்னி மர இலைகளை வீட்டில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றியடையும் என்பது ஐதீகம்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள இலளிகம் பகுதியில் சென்ன கேசவப் பெருமாள் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் தகடூரை ஆண்ட வள்ளல் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்க னியை தந்து அக்னியை தலவிருட்சமாக கொண்டு வைணவம் வளர்த தலம் என கூறப்படுகிறது.

    இக்கோவிலில் வருடம் தோறும் நவராத்திரி மற்றும் விஜயதசமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டும் நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா நடை பெற்றது. இதையொட்டி இறுதி நாளான நேற்று வன்னிமரம் குத்துதல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் சாமி, வள்ளி, தெய்வானை சமேத பாலதண்டாயுதபாணி சாமி, அங்காள பரமேஸ்வரி, குறிஞ்சி மாரியம்மன், விநாயகர் மற்றும் பொன்னி யம்மன் உட்பட அனைத்து உற்சவ மூர்த்திகளும் ஒரு சேர திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து வன்னி மரம் மற்றும் வாழை மரத்தை அசுரனாக வதம் செய்து ஒரு சேர திருவீதி உலா காணும் வெற்றி திருவிழாவாக நடைபெற்றது. வதம் முடிந்த வன்னி மர இலைகளை வீட்டில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றியடையும் என ஐதீகம். இதனால் வன்னிமர இலைகளை பக்தர்கள் எடுத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து மயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தெய்வங்களை வழிபட்டு சென்றனர். மேலும் விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • தருமபுரி மாவட்டத்தில் முருங்கைக்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • வெளி மார்க்கெட்டில் கிலோ, 100 முதல், 120 ரூபாய்க்கு விற்கிறது. -

    பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் தினமும் சமையலிற்கு பல்வேறு காய்கறி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை மதிப்பானது ஏற்ற தாழ்வுடன் இருந்துக் கொண்டு வருகிறது. காய்கறி விலை ஏற்றத்தினால் இன்றும் பலர் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒன்று.

    காய்கறி வகைகளில் ஒவ்வொன்றும் தனிப்பட்ட விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தொடர்ந்து கிலோ முருங்கைக்காய் ரூ.50 இருந்து படிப்படியாக அதிகரித்து ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து தற்போது ரூ.100 வரை விற்பனையாகி வருகிறது.

    மாவட்டத்தில் தருமபுரி, ஜெட்டிஅள்ளி,பாலக்கோடு அரூர், பென்னாகரம் உள்ளிட்ட 5 இடங்களில் உழவர் சந்தைகள், செயல் பட்டு வருகின்றன. இங்கு முருங்கைக்காய் விற்ப–னைக்காக அரவக்குறிச்சி, ஒட்டன் சத்திரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

    தற்போது சீசன் இல்லாதது மற்றும் மழையால் பூக்கள் உதிர்ந்து முருங்கைக்காய் விளைச்சல் பாதித்துள்ளது. இதனால், 50 சதவீதம் வரை வரத்து குறைந்து, 15 முதல், 20 டன் முருங்கைக்காய் சந்தை, மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது.

    அதன்படி கடந்த, 1-ம் தேதி தருமபுரி உழவர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ, 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக 65 மற்றும் 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று சற்று விலை குறைந்து 90 முதல் 95 ரூபாய்க்கு விற்கி றது. வெளி மார்க்கெட்டில் கிலோ, 100 முதல், 120 ரூபாய்க்கு விற்கிறது. உழவர் சந்தையில் இன்று முதல் தரமான முருங்கைக்காய் ஒன்று, 12 முதல், 15 ரூபாய், நடுத்தரம், 10 முதல், 12 ரூபாய், விற்பனையானது.

    • தருமபுரியில் சட்டவிரோதமாக சந்து கடைகளில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • அதிக போதைக்காக ஊமத்தங்காய் கலந்து விற்று வருவதும் தெரிய வருகிறது.

    தருமபுரி மாவட்டம், அரூர், காரிமங்கலம், ்பாலக்கோடு, பாப்பி ரெட்டிப்பட்டி, பாப்பா ரப்பட்டி, நல்லம்பள்ளி, அதிய மான்கோட்டை, தொப்பூர், இண்டூர் ஆகிய போலீஸ் நிலை யத்துக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சந்து கடை அமைத்து அதன் மூலம் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மதுவிற்பனை படுஜேராக நடந்து வந்தது.

    இதனை யடுத்து தொடர்ந்து புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன்ஜேசு பாதம் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்ட விரோத மது விற்ப னையில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;-

    தருமபுரி மாவட்டத்தில் சில இடங்களில் மீண்டும் சந்து கடைகளில் மது விற்பனையும், கிராமங்களில் மறைவான இடத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு சம்மந்தப்பட்ட போலீஸ் நிலைய போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் சிலரின் ஆதரவோடு மீண்டும் சந்துக்கடைகளில் மது விற்பனையானகிறது.

    கிரா மங்களின் பெட்டி கடைகள், சாலையோர கடைகளிலும் பகிரங்கமாக நடந்து வருகிறது. சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் சிலர் போலியாக மதுவை தயாரித்து அதில் அதிக போதைக்காக ஊமத்தங்காய் கலந்து விற்று வருவதும் தெரிய வருகிறது.

    இந்த மதுவை வாங்கி அருந்தும் நபர்களுக்கு வயிற்று கோளாறு மற்றும் முச்சு திணறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது சில சமயங்களில் உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமான நிலையை உருவாக்கும். ஆகவே போலீசார் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் இது குறித்த புகார் மாவட்ட எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களிடம் சென்றது. இதனையடுத்து தனது தலைமையில் தனிப்படை அமைத்துள்ளார். அந்த தனிப்படை போலீசார் தருமபுரி நகரத்தில் சந்துகடைகளில் மது விற்ப னையில் ஈடுபடுவோர்களை பிடித்து கைது செய்து வருகின்றனர்.

    அதே போன்று தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிரடி ரெய்டுகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.   

    • தருமபுரி அருகே விவசாய கிணற்றில் காலவாதியான ஆயிலை மர்ம நபர்கள் ஊற்றி சென்றனர்.
    • அந்த பகுதிகள் மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்-

    தருமபுரி நகராட்சி க்குபட்ட 3 வது வார்டு காமாட்சியம்மன் தெருவில் உள்ள விவசாயி மனோ என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் விவசாய நிலமும், அதே நிலத்தில் பொது விவசாய கிணறும் ஒன்று உள்ளது. இந்த விவசாய கிணற்றை நம்பி அப்பகுதி சுற்றுவட்டார வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் மீன் பண்ணைக்கு தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் விவசாய கிணற்றில் கனரக வாக னங்களுக்கு பயன்படுத்தும் ஆயிலை ஊற்றி விட்டு சென்றுள்ளனர். அது நீரில் கருப்பு நிறத்தில் மிதந்துள்ளது. கிணற்றை பார்த்த விவசாயி மனோ அதிர்ச்சியடைந்தார். தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது;-

    நாங்கள் இதே பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம். எங்களின் வளர்ச்சி கண்டு மர்ம நபர்கள், யாரோ நாங்கள் விவசாயம், கால்ந டைகளுக்கு குடிநீராகவும், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் பயன்படுத்தி வந்த தண்ணீரில் ஆயிலை கலந்து விட்டு சென்றுள்ளனர். போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கபட்டுள்ளது.

    விவசாய கிணற்றில் ஆயிலை கலந்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

    தருமபுரி நகர பகுதியில் விவசாய கிணற்றில் மர்ம நபர்கள் ஆயிலை ஊற்றி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரப ரப்பையும் அச்சத்தை யும் ஏற்படுத்தி உள்ளது. 

    • தரும புரி தொன்போஸகோ கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம் நடந்தது.
    • இளையத் தலைமுறை மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பரிணாம கோட்பாடுகள் குறித்த விழிப்பு ணர்வு

    தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில், வேதியியல் துறை சார்பாக அறிவியல் பரிணாமக் கோட்பாடுகள் குறித்த தேசியக் கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெற்றது. இந்நி கழ்விற்குக் கல்லூரிச் செயலரும், சமூகப் பணித்துறைத் தலைவருமான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

    இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக அரூர், இ. ஆர். கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறைப் பேராசிரியர் முனைவர் சிவக்குமார் அவர்களும், மும்பை, ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சபரீசன் அவர்களும் கலந்து கொண்டு வேதியியல் பொருட்களின் பன்முகப் பயன்பாடு, அவசரக் கால மருந்து களில் வேதிப்பொ ருட்களின் பங்கு ஆகியவை குறித்து, விளக்க உரையாற்றினர்.

    இந்நிகழ்வில் கல்லூரித் துணை முதல்வர் முனைவர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் அந்தோணி பாப்புராஜ், அச்சுக்கலைத் துறைப் பேராசிரியர் சார்லஸ் கஸ்பர் மற்றும் பேராசிரியர்கள் ,மாணவ, மாணவியர் எனப் பலரும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இன்றைய இளையத் தலைமுறை மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பரிணாம கோட்பாடுகள் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்த இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைத்த லைவர் மணிமே கலை தலைமையில் துறைப்பேரா சிரியர்கள் செய்திருந்தனர்.

    • தருமபுரி நகராட்சியில் 60 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.
    • குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

    தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் நகராட்சி நிர்வாகம் தினந்தோறும் 10 டன்னுக்கு மேல் குப்பை களை அகற்றி வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடுவதற்காக வணிக நிறுவனங்கள் கடைகள் மற்றும் வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட குப்பை களை கொட்டி உள்ளனர். மேலும் 2 நாட்களில் பூஜைக்காக பயன்படுத்திய வாழை மரங்கள், பூசணிக்காய், மாங்கொத்து உள்ளிட்டவற்றை தங்களது வணிக நிறுவனங்கள் கடை கள் முன் விட்டு சென்றுள்ளனர்.

    மேலும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த பூசணிக்காய், வாழை மரங்களை நேற்று மாலை வரை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள ஆயிரக்கணக்கான மரங்–களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, பாரதிபுரம், நெசவா ளர் காலனி, 4 ரோடு, பெரியார் மன்றம் உள்ளிட்ட பகுதி களில் ஆங்காங்கே விட்டு விட்டு சென்றுள்ளனர்,

    இந்த குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. 33 வார்டுகளில் இன்று ஒரு நாள் மட்டும் 60 டன் குப்பைகளுக்கு மேல் சேக–ரித்து நகராட்சியில் உள்ள உரக்கடங்கில் சேர்த்ததாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×