என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாய கிணற்றில் காலாவதியான ஆயில் கலப்பு
- தருமபுரி அருகே விவசாய கிணற்றில் காலவாதியான ஆயிலை மர்ம நபர்கள் ஊற்றி சென்றனர்.
- அந்த பகுதிகள் மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்-
தருமபுரி நகராட்சி க்குபட்ட 3 வது வார்டு காமாட்சியம்மன் தெருவில் உள்ள விவசாயி மனோ என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் விவசாய நிலமும், அதே நிலத்தில் பொது விவசாய கிணறும் ஒன்று உள்ளது. இந்த விவசாய கிணற்றை நம்பி அப்பகுதி சுற்றுவட்டார வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் மீன் பண்ணைக்கு தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் விவசாய கிணற்றில் கனரக வாக னங்களுக்கு பயன்படுத்தும் ஆயிலை ஊற்றி விட்டு சென்றுள்ளனர். அது நீரில் கருப்பு நிறத்தில் மிதந்துள்ளது. கிணற்றை பார்த்த விவசாயி மனோ அதிர்ச்சியடைந்தார். தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது;-
நாங்கள் இதே பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம். எங்களின் வளர்ச்சி கண்டு மர்ம நபர்கள், யாரோ நாங்கள் விவசாயம், கால்ந டைகளுக்கு குடிநீராகவும், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் பயன்படுத்தி வந்த தண்ணீரில் ஆயிலை கலந்து விட்டு சென்றுள்ளனர். போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கபட்டுள்ளது.
விவசாய கிணற்றில் ஆயிலை கலந்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தனர்.
தருமபுரி நகர பகுதியில் விவசாய கிணற்றில் மர்ம நபர்கள் ஆயிலை ஊற்றி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரப ரப்பையும் அச்சத்தை யும் ஏற்படுத்தி உள்ளது.






