என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருங்கைக்காய் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    முருங்கைக்காய் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி

    • தருமபுரி மாவட்டத்தில் முருங்கைக்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • வெளி மார்க்கெட்டில் கிலோ, 100 முதல், 120 ரூபாய்க்கு விற்கிறது. -

    பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் தினமும் சமையலிற்கு பல்வேறு காய்கறி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை மதிப்பானது ஏற்ற தாழ்வுடன் இருந்துக் கொண்டு வருகிறது. காய்கறி விலை ஏற்றத்தினால் இன்றும் பலர் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒன்று.

    காய்கறி வகைகளில் ஒவ்வொன்றும் தனிப்பட்ட விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தொடர்ந்து கிலோ முருங்கைக்காய் ரூ.50 இருந்து படிப்படியாக அதிகரித்து ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து தற்போது ரூ.100 வரை விற்பனையாகி வருகிறது.

    மாவட்டத்தில் தருமபுரி, ஜெட்டிஅள்ளி,பாலக்கோடு அரூர், பென்னாகரம் உள்ளிட்ட 5 இடங்களில் உழவர் சந்தைகள், செயல் பட்டு வருகின்றன. இங்கு முருங்கைக்காய் விற்ப–னைக்காக அரவக்குறிச்சி, ஒட்டன் சத்திரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

    தற்போது சீசன் இல்லாதது மற்றும் மழையால் பூக்கள் உதிர்ந்து முருங்கைக்காய் விளைச்சல் பாதித்துள்ளது. இதனால், 50 சதவீதம் வரை வரத்து குறைந்து, 15 முதல், 20 டன் முருங்கைக்காய் சந்தை, மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது.

    அதன்படி கடந்த, 1-ம் தேதி தருமபுரி உழவர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ, 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக 65 மற்றும் 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று சற்று விலை குறைந்து 90 முதல் 95 ரூபாய்க்கு விற்கி றது. வெளி மார்க்கெட்டில் கிலோ, 100 முதல், 120 ரூபாய்க்கு விற்கிறது. உழவர் சந்தையில் இன்று முதல் தரமான முருங்கைக்காய் ஒன்று, 12 முதல், 15 ரூபாய், நடுத்தரம், 10 முதல், 12 ரூபாய், விற்பனையானது.

    Next Story
    ×