என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன கண்ணாடிகள் உடைப்பு"

    • தங்களது வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார், இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து இருப்பதை கண்டு வாகனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரூர்:

    அரூர் பகுதியில் நேற்று இரவு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள், முகப்பு விளக்குகளை மர்மநபர்கள் சிலர் உடைத்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதியில் உறைந்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள மேல்பாட்சா பேட்டை, கீழ்பாட்சாபேட்டை, அசோகா பட்டறை, தில்லை நகர், முருகன் கோவில் தெரு, சுடுகாடு மேடு உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    வாகனங்களின் உரிமையாளர்கள் இன்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது தங்களது வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார், இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்கள், வேன், கார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவற்றின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து சென்று உள்ளனர்.

    எதற்காக உடைத்து சென்றனர். அவர்கள் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போரீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்தனர். பின்பு பாதிக்கப்பட்டவர்கள் அரூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்மநபர்களால் வாகனங்களின் கண்ணாடி உடைப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் வாகனத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள பதிவுகளை சேகரித்து அதன் அடிப்படையில் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மணிமாறன்.

    இவரது வீடு தூத்துக்குடி சகாயமாதாநகரில் உள்ளது. இரவில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் பணி முடிந்து போலீஸ் வாகனத்தில் வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் நள்ளிரவில் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு மணிமாறன் பார்த்த போது அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பின் இருபுறமும் உள்ள கண்ணாடி கற்கள் வீசி உடைக்கப்பட்டு சிதறிக்கிடந்தது.

    இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் வாகனத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள பதிவுகளை சேகரித்து அதன் அடிப்படையில் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ×