என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மாரண்டஅள்ளி பேரூ ராட்சி தலைவர் வெங்க டேசன் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் சுதந்திர தினம் அன்று 24 மனை தெலுங்கு செட்டியார்கள் கல்வி முன்னேற்ற சங்கம் சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    கல்வி அறக்கட்டளையின் தலைவர் மாதையன், அதிக மதிப்பெண் பெற்ற வகுப்பு மாணவர்கள் இருவருக்கு பரிசு, பணம், வெள்ளி காசு, சில்வர் தட்டு மற்றும் பழங்களை வழங்கினார்.

    இதில் தலைமை ஆசிரியர் ஜான்சிராணி, விஜயலட்சுமி, முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி கலைஞர் அறிவாலயத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க சார்பில் ஆலோ சனைகூட்டம் நடை பெற்றது.
    • உண்ணாவிரத அறப் போராட்டத்தில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பங்கேற்க செய்ய வேண்டு மென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தருமபுரி,

    தமிழக முழுவதும் வரும் நாளை நீட் தேர்வை திணிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என தி.மு.க தலைவரும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    இதனையடுத்து தருமபுரி கலைஞர் அறிவாலயத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க சார்பில் ஆலோசனைகூட்டம் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாளை தருமபுரி தலைநகரில் நடைபெறும் நீட் தேர்வை திணிக்கும் பா.ஜ.க. அரசு மற்றும் தமிழக கவர்னரை கண்டி த்து உண்ணாவிரத அறப்போராட்டத்தில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பங்கேற்க செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர்கள் செல்வராஜ், மனோகரன் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி ஆதிதிரா விடர் நலக்குழு மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் செந்தில்குமார், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, மற்றும் தி.மு.க இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணியை சேர்ந்த கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • நேற்று சிவனின் மகன் கோவிந்தராஜ் தனது தந்தையை ஏரிபக்கம் சென்று தேடி உள்ளார். அப்போது ஏரியில் சிவன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கொக்கராப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவன் (வயது50). மீன் வியாபாரியான இவருக்கு காவிரி என்ற மனைவியும், இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி அன்று சிவனும், பக்கத்து வீட்டுக்காரரான சுகுமார் ஆகிய இருவரும் சாலூர் கோட்டைமேடு அருகில் உள்ள பெரிய ஏரியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சுகுமார் மட்டும் வீடு திரும்பினார். ஆனால் சிவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    நேற்று சிவனின் மகன் கோவிந்தராஜ் தனது தந்தையை ஏரிபக்கம் சென்று தேடி உள்ளார். அப்போது ஏரியில் சிவன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏரியில் பிணமாக கிடந்த சிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்களின் பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் மனோகரன், மாவட்ட வக்கில்கள் பிரிவு தலைவர் முனிராஜ், நகர செயலாளர் மோகன், பேரூராட்சி தலைவர் கேஸ்.மணி, அவை தலைவர் ராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் செந்தில்குமார், மாரிமுத்து. நடராஜன், தங்கராஜ், கவுன்சிலர்கள் கார்த்தி, சரவணன், ராமகிருஷ்ணன், மாரியப்பன், கண்ணன், மதன் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இதில் 202 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
    • முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி நகர அரிமா சங்கம், சேவா பாரதி தமிழ்நாடு சிவராம்ஜி ரத்த வங்கி மற்றும் தனியார் டியூசன் சென்டர் ஆகிய அமைப்பினர் இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர்.

    இதில் 202 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். அதில் 40 யூனிட் ரத்தம் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கிக்கும், மீதி சிவராம்ஜி ரத்த வங்கிக்கும் வழங்கப்பட்டது.

    முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    இதில் சேவா பாரதி மாவட்ட தலைவர் விவேகானந்தன், கல்பனா, சந்திரசேகர், பத்திரி நாராயணன், ராஜ சேகர், விக்ரமன், வினோத், ப்ரூத்திவராஜ், சேவா பாரதி ஆதிமூலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்வராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் தருமபுரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
    • செல்வராஜ் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    தருமபுரி,

    குடிமை பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் ரேஷன் அரிசி கடத்துபவர் மீது கள்ள சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டதின் பேரில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் காரிமங்கலம் அகரம் சாலை அருகே வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியில் 4.7 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி சிக்கியது. இந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக தருமபுரி சோளக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூரைச் சேர்ந்த முருகன், காரிமங்கலம் அருகே உள்ள கும்பர அள்ளியை சேர்ந்த சம்பத்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது செல்வராஜ் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் தருமபுரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

    இந்த பரிந்துரையை ஏற்று செல்வராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

    இதையடுத்து செல்வராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்க பட்டார்.

    • கல்லூரிக்கு செல் லும் போது அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் முருகனின் வளர்ப்பு நாய் குரைத்து கொண்டு துரத்தி சென்றுள்ளது.
    • மாணவி மற்றும் அவரது தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் முருகனிடம் கூறி உள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் அறிவுமதி (வயது 21).

    இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் பி.பார்ம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் முருகனின் வளர்ப்பு நாய் குரைத்து கொண்டு துரத்தி சென்றுள்ளது.

    இதுகுறித்து மாணவி மற்றும் அவரது தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் முருகனிடம் கூறி உள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முருகன் மற்றும் அவரது மகன் மனோஜ் (வயது32) ஆகியோர் அறிவுமதி, கோவிந்தம்மாள் ஆகியோரை தாக்கினர்.

    இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை-மகனை கைது செய்தனர்.

    • நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 13 ஆயிரம் கனஅடி என மொத்தம் நேற்று மாலை 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

    இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வண்ணம் உள்ளது.

    நேற்று மாலை 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது.

    நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 4-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

    • இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலை வைத்தார்.
    • சபரிஷன், திருப்பதி, அருண்குமார் மற்றும் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலை வைத்தார். மாவட்ட செயலாளர் ஆனந்த குமார் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் சம்பத், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் இளவரசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சக்திவேல், கிழக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் அர்ச்சனா, சபரிஷன், திருப்பதி, அருண்குமார் மற்றும் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கட்சியை வலுப்படுத்துவது, கிளை தோறும் கொடிக்கம்பம் ஏற்றுதல் , திண்ணை கூட்டம் நடத்துவது, வரும் டிசம்பர் மாதம் தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு பொது செயலாளர் தலைமையில் நடத்துவது மற்றும் பிப்ரவரி 4-ல் பெருந்துறையில் நடைபெறும் கொங்கு மக்கள் மாநாட்டிற்கு திரளாக கலந்து கொள்வது போன்ற கட்சி வளர்ச்சிக்கான கருத்துக்கள் ஆலோசனை செய்யப்பட்டது.

    • பாதை அமைக்க வேண்டிய போதக் காடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தருமபுரி மாவட்ட எல்லை வரை தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.
    • பாப்பிரெட்டிப் பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி, உண்டு உறைவிட பள்ளி மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதி களையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

     பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள அஜ்ஜம்பட்டி, போதக்காடு, புதூர், பையர்நத்தம், பி.பள்ளிப்பட்டி போன்ற பகுதிகளில் மலைவாழ் மக்கள் பெருமளவு வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தினமும் சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் உள்ள பெரிய காடு, அனார்காடு, வெள்ளக்கடை, மற்றும் மலைப் பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளுக்கு தினமும் கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த எஸ்டேட் பகுதிக்கு வேலைக்கு வாகனத்தின் மூலமாக செல்லும் நிலையில் போதுமான சாலை வசதி இல்லாததால் மாற்று பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணனிடம் மலை கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இது குறித்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒன்றிய செயலாளர் சரவணன் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தர விட்டார்.

    அதன் பேரில் மாவட்ட கலெக்டர் சாந்தி பாதை அமைக்க வேண்டிய போதக்காடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தருமபுரி மாவட்ட எல்லை வரை தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.

    பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி, உண்டு உறைவிட பள்ளி மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது தி.மு.க பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மழைக்காலங்க களில் பள்ளி வளாகத்தி லேயே மழைநீர் ஒழுகுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
    • அதைவிட ஒரு படி மேலாக பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதியில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்கு உள்ளான விஷயம்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஹள்ளி பகுதியில் அரசு தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு அரசு தொடக்க பள்ளியில் 80 மாணவ, மாணவிகளும், உயர்நிலைப் பள்ளியில் 124 மாணவ, மாணவிகளும் பயின்று வரு கின்றனர்.

    இங்கு சுற்றுவட்டார கிராம பகுதிகள் அதிகம் என்பதால் பத்து ஆண்டு களுக்கு முன்பே இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது.

    ஆனால் இன்று வரை அவற்றுக்கான கூடுதல் கட்டிடங்களோ, போதுமான இடவசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைக்கப்படவில்லை.

    கட்டிடத்தில் வகுப்பறை பற்றாக்குறை, இடபற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மற்ற உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

    இதனால் சேர்க்கை விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் இப்பள்ளியில் முக்கிய பிரச்சனைகளாக பழைய கட்டிடங்களில் இருந்து கான்கிரீட் மேல் தளங்கள் தினம் தினம் இடிந்து விழுந்து வருகின்றது.

    இதனால் மாணவ மாணவிகள் அச்சத்துடனே தினம்தோறும் பள்ளிக்கு வருகின்றனர்.

    மேலும் மழைக்காலங்ககளில் பள்ளி வளாகத்திலேயே மழைநீர் ஒழுகுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    அதைவிட ஒரு படி மேலாக பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதியில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்கு உள்ளான விஷயம்.

    மாணவர்களுக்கான கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும், தண்ணீர் வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கின்றது.

    இதனால் மாணவர்கள் இயற்கை உபாதைகளுக்காக அருகில் உள்ள ஏரிகள் முட்புதர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு கழிவறைகள் இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வருவதன் காரணமாகவே பல பெண்கள் இப்பள்ளியில் சேர்பதை பெற்றோர்கள் தவிர்த்து வருகின்றனர்.

    அவ்வாறு ஓரிரு மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்தாலும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றால் தங்கள் வீடுகளுக்கு சென்று பயன்படுத்திவிட்டு வர வேண்டிய சூழலும் நிலவி வருகிறது.

    கிராமப்புறங்களில் திறமையான ஆசிரியர்கள் இருந்தாலும், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பதாலே பல மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் உள்ளூரில் உள்ள பள்ளிகளை தவிர்த்து விட்டு தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    மேலும் இப்பள்ளியில் தினம் தினம் இடிந்து விழும் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டி குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

    • இன்று காலை நீண்டநேரமாகியும் வேதமூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் வீட்டில் இருந்து வெளியே வராமல் கதவு மூடியபடி இருந்தது.
    • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வேத மூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரியில் உள்ள அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவரது மகன் வேதமூர்த்தி (வயது38). இவர் சுகி உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேதமூர்த்தி அவரது உறவினர் பெண்ணான சூர்யா (24) என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமுருகன் வீட்டின் அருகே தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் வேதமூர்த்தி தனக்கு தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஆனால், அவருக்கு போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் வேதமூர்த்தியிடன் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளதாக தெரிய வந்தது.

    இதுகுறித்து வேதமூர்த்தி தனது தந்தை திருமுருகனிடம் தெரிவித்தபோது, தன்னிடம் உள்ள நிலத்தை விற்று கடனை அடைக்கலாம் என்று கூறி சமாதானம் பேசியுள்ளார். இருந்தபோதிலும் மனவேதனையில் இருந்த வேதமூர்த்தி, தனது வீட்டில் நேற்று இரவு தூங்க சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை நீண்டநேரமாகியும் வேதமூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் வீட்டில் இருந்து வெளியே வராமல் கதவு மூடியபடி இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வேதமூர்த்தியின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் வெளியே வராததால், உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வேதமூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதனை கண்ட உறவினர்கள் அதிச்சியடைந்தனர். அப்போது அவர்கள் இருவரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், வேதமூர்த்தி வீட்டின் முன்பு பொதுமக்கள் திரண்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேதமூர்த்தி, சூர்யா ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடன் தொல்லையால் கணவன்-மனைவி இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×