என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளர்ப்பு நாய் குரைத்து துரத்தியதால் தகராறு: கல்லூரி மாணவியை தாக்கிய 2 பேர் கைது
- கல்லூரிக்கு செல் லும் போது அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் முருகனின் வளர்ப்பு நாய் குரைத்து கொண்டு துரத்தி சென்றுள்ளது.
- மாணவி மற்றும் அவரது தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் முருகனிடம் கூறி உள்ளனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் அறிவுமதி (வயது 21).
இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் பி.பார்ம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் முருகனின் வளர்ப்பு நாய் குரைத்து கொண்டு துரத்தி சென்றுள்ளது.
இதுகுறித்து மாணவி மற்றும் அவரது தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் முருகனிடம் கூறி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முருகன் மற்றும் அவரது மகன் மனோஜ் (வயது32) ஆகியோர் அறிவுமதி, கோவிந்தம்மாள் ஆகியோரை தாக்கினர்.
இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை-மகனை கைது செய்தனர்.
Next Story






